|
|||||
அசுரன் -திரை விமர்சனம் |
|||||
![]() அசுரன் -திரை விமர்சனம் -கீதா ரவிச்சந்திரன்.
சொத்து, ,சுகம், மானம், மரியாதை , எல்லாவற்றையும் விட ஒருவனுக்குத் தன் குடும்பமே பெரிது என்பது தனுஷ் கதாபாத்திரம் மூலம் வெளிப்படுகிறது. அன்பும் அரவனைணைப்பும் மிகுந்த குடும்பங்கள் எப்பேர்பட்டச் சூழ்நிலையிலும் நிலை குலைவதில்லை. இப்படத்தில் மகனுக்காகத் தந்தையும், அண்ணனுக்காகத் தம்பியும், அம்மாவிற்காக மகனும், ஊருக்காகத் தலைவனும், தந்தைக்காக மகனும், தங்கைக்காக அண்ணனும், காதலிக்காக காதலனும் , உறவிற்காக உற்றாரும் என்று பிறர் நலனுக்காகவே வாழும் நிறைய கதாபாத்திரங்கள் நம் கண் முன் வாழ்கிறார்கள். இப்படிப்பட்ட சுயநலமில்லா உறவுகளைப் பார்க்கையில் மனம் இளகுகிறது. தனுஷின் மகன்களாக வரும் கென், டிஜே, மஞ்சு வாரியாரின் அண்ணனாக வரும் பசுபதி, ப்ரகாஷ் ராஜ், நரேன், அம்மு அபிராமி, மற்றும் எல்லாக் கதாபாத்திரங்களுமே மிக நன்றாக அவரவர் பங்கைச் செய்து இருக்கிறார்கள். படத்தில் சாதி ஆதிக்கம் ஆழமாக அழகாக கையாளப்பட்டிருக்கிறது. இப்படி பட்ட சமூகத்திலா நாம் வாழ்ந்தோம் , வாழ்கிறோம் என்று நினைக்கையில் மனதில் ஓர் வலி ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. அந்த வலி படம் பார்த்து முடித்து வீடு வந்தும் மனதிலேயே ஊரல் போட்டு ஓர் சளிப்பை, வெறுப்பை, ஒரு ரணத்தை ஏற்படுத்துகிறது. ஆண்டான் அடிமை, சாதிக்கொடுமைகள் அன்றிருந்த மாதிரி இப்பொழுது இல்லை என்பதை நினைக்கையில் நிம்மதி ஏற்படுகிறது. முற்றிலும் அவை களையப்பட இன்னும் சில காலங்கள் ஆகலாம். ஆனால் அதில் முன்னோக்கி போய்க் கொண்டிருக்கிறோம் என்பதில் ஓர் எள் அளவு மகிழ்ச்சி. படம் முழுதும் அரிவாளின் உரசலும், கத்திகளிலிருந்து வெளிவரும் தீப்பொறிகளும், குத்தீட்டிகளின் பாய்ச்சலும் , கிழிக்கப்பட்ட சதையும், சிந்திக் கிடக்கும் ரத்தமும், எரிந்த சாம்பலும், மனிதம் மீது ஒரு வித பயத்தை ஏற்படுத்துகிறது. படத்தின் முடிவில் ஆழமான கருத்து முன் வைக்கப்படுகிறது. கல்வி ஒன்றே ஒருவனை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் என்பது வலி உருத்தப்படுகிறது. அதைக் கொண்டு வாழ்வில் மேன்மை அடைவது மட்டும் இல்லை முன்னேறுவது என்பது. அதையும் தாண்டி, அந்த உயர் நிலையை அடைந்த பின் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் பிறருக்குச் செய்யாதிருத்தலே உண்மையான சமூக முன்னேற்றம் என்னும் கருத்தை இயக்குனர் முன் வைக்கிறார். "அசுரன்" கட்டாயம் பார்க்க வேண்டிய நல்ல படம் !!!
|
|||||
|
|||||
|
|||||
|
|||||
|
|||||
|
|||||
by Swathi on 06 Nov 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|