|
||||||||
கொரோனா பேரிடர் காலத்தில் பாரம்பரிய மருத்துவத்தில் முக்கிய பங்காற்றிய மருத்துவர்களுக்கு உலகத்தமிழ் வர்த்தக சங்கம் விருது.. |
||||||||
![]() கொரோனா பேரிடர் காலத்தில் பாரம்பரிய மருத்துவத்தில் முக்கிய பங்காற்றிய மருத்துவர்களுக்கு உலகத்தமிழ் வர்த்தக சங்கம் விருது.. உலகத்தமிழ் வர்த்தக அமைப்பு: உலகில் இருக்கக் கூடிய தமிழ் அமைப்புகளை, தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு உறவுப் பாலமாக விளங்குகிறது. சமீபத்தில் கல்வியில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து 7 கருத்தரங்குகளை நடத்தியது. உலகத்தமிழ் வம்சாவளி மாநாடு என்ற மாநாட்டையும் உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. உலகில் தமிழர்களுக்கு எங்கு, எது நேர்ந்தாலும் உடனே குரல் கொடுக்கக் கூடிய அமைப்பாக இது செயல்படுகிறது. உலகத்தமிழ் பாராளுமன்றம்: உலகின் மக்கள் தொகையில் 2 சதவீதம் தமிழர்கள் காணப்படுகின்றனர். அவர்கள் அனைத்து அரசாங்க சலுகைகளையும் பெற வேண்டும் என்றால் அரசியல் விழிப்புணர்வு அவர்களுக்கு வேண்டும். அவ்வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல நாடுகளில், 150 உறுப்பினர்களை உள்ளடக்கிய ‘உலகத்தமிழ் பாராளுமன்றம்’ என்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் அனைத்து நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் சித்த மருத்துவம் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் நம்முடைய சித்த மருத்துவர்களை அயலக நாடுகளில் உள்ள அலோபதி மருத்துவர்களுடன் இணைந்து பணியமர்த்த ஆயுஷ் கவுன்சில் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இவை போன்ற பல மக்கள் நலன் சார்ந்த அமைப்புகளை எதிர்வரும் காலங்களில் மேலும் விரிவாக்க உலகத்தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் உலகத்தமி்ழ் வம்சாவளி அமைப்பு திட்டமிட்டுள்ளது. ஆயுஷ் மருத்துவத்தின் சிறப்பம்சம்: ‘ஆயுஷ்’ என்பதே பாரம்பரிய மருத்துவம் ஆகும். ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகியவை இணைந்ததே ஆயஷ் மருத்துவமாகும். எல்லா வளங்களும், எல்லா மருத்துவக் குறிப்புகளும் தமிழர்களிடையே உண்டு. அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்தில் இருக்கிறது. பிண்டத்தில் இருப்பது தான் அண்டத்தில் இருக்கிறது என்று நம் முன்னோர் கூறியிருக்கின்றனர். உடல்நிலை சரியில்லாமல் போனால் இந்த உலகத்தில் உள்ளவற்றைக் கொண்டே சரிசெய்து விடலாம் என முன்னோர் கூறியிருக்கின்றனர். அதற்கான வழிமுறைகளையும் முன்னோர்கள் கூறிச் சென்றிருக்கின்றனர். அவற்றைச் சரியாகப் புரிந்து கொண்டு சிறப்பாக பணியாற்றக் கூடிய மருத்துவர்களைக் கௌரவிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் உலகத்தமிழ் வர்த்தக அமைப்பு ஆயுஷ் மருத்துவர்களுக்கான விருதினை வழங்க உள்ளது. மருந்தாகப் பயன்படுத்தப்படும் இயற்கைப் பொருட்கள்: மேலை நாட்டில் கிட்டத்தட்ட 60 சதவீதத்தினர் மாற்று மருத்துவத்தை நாடுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இயற்கையாகக் கிடைக்கும் மூலிகைகள், தாவரங்கள், அவற்றின் பட்டை, வேர், இலை, பூ, பழங்கள் போன்றவற்றையும் உலோகங்களால் ஆன தங்கம், வெள்ளி, தாமிரம் போன்றவை மற்றும் பாதரசம், முத்து, பவளம், சிப்பி, தாது உப்புகள், உலோக மண்டலங்கள் போன்ற இயற்கையான பொருட்கள் இந்திய மருத்துவத்தில் பெரும்பாலும் மருந்தாகப் பயன்படுகின்றன. யோகாவைப் போலவே சித்த மருத்துவமும் நமது நாட்டிற்கும், இந்த உலகத்திற்கும் கிடைத்த பரிசு ஆகும். மருத்துவர்களுக்கான விருது: கொரோனா காலகட்டத்தில் மருத்துவர்களின் பங்கு இன்றியமையாதது. யார் என்ன கூறினாலும் தன் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்தவர்கள் இவர்கள். மக்களின் நலன் மட்டுமே இவர்கள் கண் முன் தெரிந்தது. ஆயிரம் திட்டங்கள் அரசு கொண்டு வரலாம், ஆனால் களத்தில் இறங்கி பணியாற்றிய மருத்துவர்களுக்கு முன் எதுவும் ஈடாகாது. உலகத்தமிழ் வர்த்தக அமைப்பு ஆண்டுதோறும் மருத்துவத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கான விருதை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு புதுமையாக ‘Ayush Excellence’ விருதை வழங்க உள்ளது. ‘What is the secret of Tamilnadu success?’ என்று எல்லோரும் வியந்து பார்க்கும் அளவிற்குச் சித்த மருத்துவர்கள் பணிகளைச் செய்தனர். ஆக அவர்களைப் பாராட்டும் விதமாக இந்த நிகழ்வை இந்த ஆண்டு முதல் தொடங்கியுள்ளது. ஊக்கமருந்தாகும் பாராட்டு: நாம் உணவில் பயன்படுத்தும் இஞ்சி, மிளகு, சுக்கு போன்றவை அடிப்படையிலேயே நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவனவாக உள்ளன. இதனால் தான் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் இந்தியாவில் குறைவாகக் காணப்படுகின்றனர். இந்தியப் பாரம்பரிய மருத்துவத்திற்கு இன்னும் சிறிது பங்களிப்பினை வழங்கினால் சாதாரண மனிதன் செலவிடும் மருத்துவத் தொகையில் பெருமளவு குறையும் என்ற எண்ணத்திலும், சித்த மருத்துவத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆங்கில மருத்துவமானது ஆராய்ச்சியால் வந்தது. இந்தியப் பாரம்பரிய மருத்துவமானது அனுபவத்தால் லந்தது. இந்த கொரோனா காலத்தில் அரசு 31 சித்த மருத்துவ நிலையங்களை உருவாக்கி, கிட்டத்தட்ட 28,000 கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்தியது. இதற்கு முழுப்பொறுப்பும் சித்த மருத்துவர்களையே சாரும். சித்த மருத்துவர்கள் இதைச் சவாலாக எடுத்துக் கொண்டனர். கபசுரக்குடிநீரில் பயன்படுத்தப்படும் 15 மூலிகைகளில் 8 மூலிகைகள் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தக் கூடியது என்று ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. விருது வழங்கும் நிகழ்வு: ஆயுஷ் மருத்துவர்களைச் சிறப்பிக்கும் இந்த நிகழ்வில் உலகத்தமிழ் வர்த்தக அமைப்பின் தலைவர் திரு. செல்வக்குமார், தெலுங்கானா ஆளுநர் திருமதி. தமிழிசை சௌந்திராஜன், தமிழக துணை முதல்வர் திரு. பன்னீர் செல்வம், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு. விஜயபாஸ்கர் சுகாதாரத் துறை செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதியின் இயக்குநர் திரு. கணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் 5 பாராட்டுச் சான்றிதழ் உட்பட 29 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ திரு. ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இது போன்ற ஒரு பேரிடர் உலகிற்கு மீண்டும் வரக் கூடாது என்று வேண்டும் அளவிற்கு அனைத்து நாடுகளையும் புரட்டிப் போட்டிருக்கிறது இந்த கொரோனா. அதே நேரத்தில் இன்னும் இதுபோன்ற எத்தனை பேரிடர்கள் வந்தாலும் சமாளிக்கலாம் என்ற ஊக்கத்தைத் தரும் நிகழ்வாக இப்பாராட்டு விழா அமைந்தது.. உரியத் தருணத்தில் உரியவர்களுக்குப் பாராட்டு வழங்கும் விழாவாகவும் இந்நிகழ்வு அமைந்தது. |
||||||||
![]() ![]() |
||||||||
![]() ![]() |
||||||||
![]() ![]() |
||||||||
by Lakshmi G on 06 Dec 2020 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|