|
|||||
சினிமாக்காரர்களை கொண்டாடும் அளவுக்கு வெற்றிபெற்ற தொழிலதிபர்களை மக்கள் கொண்டாடுவதில்லையா? |
|||||
சினிமாக்காரர்களை கொண்டாடும் அளவுக்கு வெற்றிபெற்ற தொழிலதிபர்களை மக்கள் கொண்டாடுவதில்லை என்று பொதுவாகக் கூறுவதுண்டு.
நான் அப்படி பார்க்கவில்லை, சமூகப்பொறுப்போடும், சமூகத்திற்கு பயனுள்ள பங்களிப்புகளை தான் சேர்த்த செல்வத்தில் அவ்வப்போது செய்துகொண்டு பயணிக்கும் தொழிலதிபர்களை மக்கள் தொடர்ந்து கொண்டாடவே செய்கிறார்கள்.
டாடா இறப்பை இவ்வளவு மக்கள் கூர்ந்து கவனிப்பதும், பேசுவதும் எழுதுவதும் அவரது சமூக நோக்குள்ள தொழில் மனோபாவம்தான். தமிழ் தொழில் முனைவோர் கூட்டங்களில் பேசும்போது நான் தவறாமல் குறிப்பிடுவது, தொழில் செய்யும் ஒவ்வொருவரும் ஒரு சிறு அறக்கட்டளையை உருவாக்கி நம் வருமானத்தில் ஒரு பகுதியை முறையாக மக்களுக்கு தெரியும் வகையில் வெளிப்படையாக நமக்குப் பிடித்ததை , நாம் நம்பும் சமூகப் பங்களிப்பை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யவேண்டும் என்பதாகும்.
அப்படி செய்பவர்களை சமூகம் என்றும் நினைவில் வைத்து போற்றும். அவர்களை ஒரு நடிகர்களுக்கு கொடுக்கும் தற்காலிக முக்கியத்துவத்தைவிட நிரந்தரமாக கொடுக்கிறது என்பதே உண்மை.
வளர்ந்துவரும் தொழில் முனைவோர்கள் இதை கூர்ந்து உள்வாங்கவேண்டும். செல்வத்தின் பயனே ஈதல் என்பதும் , நம்மை ஏற்றிவிட்ட இந்த சமூகத்திற்கு நாம் சமரசமின்றி ஒரு அடையாளத்தை விட்டுச் செல்லும் வகையில் குறிப்பிட்ட ஒரு துறையை எடுத்து வளர்த்துவிட துணைநிற்கவேண்டும் என்பதும் அவசியம். மொழி, கலை , வாழ்வியல், கிராம வளர்ச்சி என்று ஏதாவது ஒரு பிடித்த பகுதியில் அடர்த்தியாக, தொடர்ச்சியாக ஒரு விளைவை ஏற்படுத்த நம் Corporate social Responsibility (CSR ) சேவைகளை செய்யவேண்டும் என்று திட்டமிடுவது அவசியமாகிறது.
உதாரணத்திற்கு
தமிழ்நாட்டில் அண்ணாமலை அரசர் பண்ணிசை ஆராய்ச்சி குறித்தும் , தமிழிசை வளர்ச்சி குறித்தும் கொண்ட ஆர்வமும் பங்களிப்பும் எவ்வளவு பொருளாதாரம் சேர்த்தார் என்பதைவிட இன்றும் நிலைத்து நிற்கிறது.
அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் செய்த தமிழ்ப்பணி, சமுகப்பணி அவர் என்ன நிறுவனம் நடத்தினார், எவ்வ்ளவு பொருள் சேர்த்தார் என்பவை தாண்டி இன்றும் நிலைத்து நிற்கிறது.
இதுபோன்று உங்கள் மனதில் நிற்கும் காலம்சென்ற, வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் தொழிலதிபர்களை குறிப்பிடவும்..
|
|||||
by Swathi on 16 Nov 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|