|
||||||||
மதுரையின் புகழ்மிக்க தொழிலதிபர் காலேஜ் ஹவுஸ் நிறுவனர் ,திரு.கார்த்திகேயன் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன் |
||||||||
நேரடியாக பல மாவட்டங்களுக்கு செல்லமுடியாத நிலையில், தமிழ்நாட்டில் வேறு பணிகளுக்காக பயணிக்கும்போது பயணிக்கும் மாவட்டங்களின் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்ந்த ஒருங்கிணைப்பாளர்கள், பயிற்சியாளர்கள், புரவலர்களை சந்தித்து , செயல்பாடுகளை ஆராய்வது வழக்கம்.
அந்த வகையில் நேற்று சென்னை திருப்புவதற்கு முன் கிடைத்த நேரத்தில் எமது மதுரை மாவட்டத்தின் ஒருங்கிணைப்பாளர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் திரு.அழகுராஜ் அவர்களை சந்தித்து மதுரையில் திருக்குறள் நூல்கள் வழங்குவது குறித்தும், மாவட்டத்தின் இரண்டு முற்றோதல் பயிற்சியாளர்களின் (திருமதி.ஷீலா, திருமதி.சித்ரா) செயல்பாடுகள் குறித்தும் ஆராய்ந்தோம்.
மேலும், கடந்த ஆண்டு உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம், அமெரிக்கா (ஒருங்கிணைப்பாளர் மருத்துவர்.விஜய் ஜானகிராமன்) வழங்கிய 1000 திருக்குறள் நூல்களை உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களை அழைத்து நேரில் மதுரையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து வழங்கியது. அதற்கு இடமும், உணவும் வழங்கி ஆர்வத்தோடு நம் குழுவிற்கு துணைநின்ற மதுரையின் புகழ்மிக்க தொழிலதிபர் காலேஜ் ஹவுஸ் நிறுவனர் ,திரு.கார்த்திகேயன் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன் . இவரது தந்தை நினைவில் வாழும் திரு.மணிமொழியன் உலகறிந்த திருக்குறள் ஆர்வலர். திருக்குறளுக்கு மூன்று நாட்கள் விழா எடுத்து பெரும் திரளான இளையோரை மதுரையில் ஊக்குவித்து பரிசுகொடுத்தவர். பல நாடுகளுக்கு தமிழ் மூலம் பயணித்தவர். அவரைத் தொடர்ந்து அவரது புதல்வர் திரு.கார்த்திகேயன் அவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை நடத்தும் திருக்குறள் போட்டியில் சுமார் 40000 மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்கிறார்கள்.
பெருமிதமான சந்திப்பில், திருக்குறள் முற்றோதல் செய்வதை மட்டும் எட்டாம் வகுப்புக்குள் கவனம் செலுத்தும் உலகத் திருக்குறளை முற்றோதல் இயக்கம் அரசு வழங்கும் 15000 பரிசுத் தொகையைப் பெற இலவசமாக பயிற்றுவிக்கிறது. முற்றோதல் செய்வதை இளநிலையாகவும், பொருளுணர்ந்து கூறுவதை முதுநிலையாகவும் இரு நிலைகளாக முன்னெடுக்கும் இயக்கம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தமிழ்ச்சங்கங்கள் , திருக்குறள் அமைப்புக்கள் , இலக்கிய மன்றங்கள், ஆர்வலர்களின் கரம் பற்றி இலக்கில் கவனமாக ஆண்டுக்கு 100 மாணவர்களை உருவாக்குவது முதல் கட்டமாகவும், 1000 மாணவர்களை உருவாக்குவதை தொலைநோக்காகவும் கொண்டு பயணிக்கும்..
மதுரை மக்கள் , மதுரையை பூர்வீகமாகக்கொண்ட வெளிநாடுவாழ் தமிழர்கள் இதை உங்கள் மாவட்ட திருக்குறள் பயிற்சிக்கு, வாழ்வியல் வளர்ச்சிக்கு இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
காலேஜ் ஹவுஸ் திருக்குறள் செயல்பாடுகளை கேட்டறிந்து, நமது செயல்பாடுகளை பகிர்ந்துகொண்டு, Thirukkural Translations in World Languages நூலையும், இவ்வாண்டு வழங்கவிருக்கும் குறள் முனுசாமியார் உரையுடன் கூடிய திருக்குறள் நூலையும் வழங்கி, திரு.மணிமொழியனாரின் நூல்களைப் பெற்றுக்கொண்டு விடைபெற்றேன்.
உடன் உலகத் திருக்குறள் பேரவை செயலாளர் திரு.அசோக்ராஜ், திரு.அழகுராஜ் (மாவட்ட ஒருங்கிணைப்பாளர்),
விரிவான செய்தி நம் "குறள் வழி" மாத இதழில் .
வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி,
ஒருங்கிணைப்பாளர், உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்
|
||||||||
by Swathi on 16 Nov 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|