LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பழைய கதைகள் இறந்து கொண்டிருக்கின்றன" - சென்னை இலக்கியம் மற்றும் கலை விழா 3.0’ நிகழ்ச்சியில் வருந்திய எழுத்தாளர்

 

 
சென்னை சர்வதேச மையம் (சி.ஐ.சி) சார்பில் கோட்டூர்புரத்தில் உள்ள சென்னை பொருளியல் கல்வி நிறுவனத்தில் ‘சென்னை இலக்கியம் மற்றும் கலை விழா 3.0’  நடைபெற்றது. சி.ஐ.சி தலைவர் கோபால் சீனிவாசன் தலைமை வகித்து Experts Speak Insights on Foreign Policy என்ற நூலை வெளியிட்டார். முதல் பிரதியை ஐ.சி.டி அகாடமி இயக்குநர் என்.லட்சுமி நாராயணன் பெற்றுக் கொண்டார்.


இந்த விழாவில், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த வில்லியம் டேல்ரிம்பிள், அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீபன் கொட்கின் உட்பட 20 எழுத்தாளர்கள் பங்கேற்று 8 அமர்வுகளில் உரையாற்றினர். நேபாள எழுத்தாளர் ஸ்மிருதி ரவீந்திரன் எழுதிய The Woman Who Climbed Trees என்ற பிரபல நூல் குறித்த விவாதமும் நடைபெற்றது. 


சி.ஐ.சி தலைவர் கோபால் சீனிவாசன் பேசும்போது,  "சென்னை மக்களிடம் அறிவுசார் உணர்வைத் தூண்டும் இடமாக அமைய வேண்டும் என்ற நோக்கில்தான் சென்னை சர்வதேச மையம் தொடங்கப்பட்டது. தற்போது 10-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இனிவரும் காலங்களில் எங்களுடன் பகிர்ந்துகொள்ளும் பிரபலங்களின் கருத்துகள், எண்ணங்கள் ஆகியவை பரவலாக அனைவரையும் சென்றடையும் வகையில் புத்தகங்களாகவும் வெளியிட உள்ளோம்..:" என்றார், 


எழுத்தாளர் பி.சாய்நாத்  "சமூக வலைத்தளங்களில் எதிர்மறையான, மன உளைச்சலை ஏற்படுத்தும் செய்திகள், பதிவுகளைப் படிப்பதில் அதிக நேரம் செலவிடுவதால் மனநலம் பெரிய அளவில் பாதிப்படைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆன்லைனில் அதிக நேரம் செலவிடுவது நமது கவனத்தைக் குறைத்து, நினைவகத்தைப் பலவீனப்படுத்துகின்றன. நீங்கள் என்ன படிக்கிறீர்கள் என்பது மட்டுமின்றி, அதை எங்கு, எப்படிப் படிக்கிறீர்கள் என்பது முக்கியம்..." என்றார். 


எழுத்தாளர் ஸ்மிருதி ரவீந்திரன் பேசுகையில், "ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு கதை உண்டு. ஒவ்வொரு கல்யாண நிகழ்வுகளும் பல கதைகளைக் கொண்டிருக்கும். ஆனால், இன்றைய இன்ஸ்டகிராம் உலகத்தில் இதுபோன்ற கதைகள் சொல்லப்படுவது இல்லை. அதனால், பழைய கதைகள் இறந்து கொண்டிருக்கின்றன. வலைத்தளங்கள் வழியே பழைய கதைகளை நாம் பாதுகாக்க வேண்டும்..." என்றார். 


இலக்கிய விழாவையொட்டி, பங்கேற்ற எழுத்தாளர்களின் நூல்கள் சென்னை பொருளியல் கல்வி நிறுவனத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்வில் சி.ஐ.சி நிர்வாக இயக்குநர் சந்திரமவுலி, அமைப்புக் குழு உறுப்பினர்கள் டி.எஸ்.திருமூர்த்தி, வித்யா சிங், நிகழ்ச்சிக் குழுத் தலைவர் வி.கே.சபரிவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

by hemavathi   on 15 Dec 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ரூ.400 கோடி மதிப்பீட்டில் ஓசூரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா ரூ.400 கோடி மதிப்பீட்டில் ஓசூரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா
தெக்கத்தி மண்ணின் படைப்பாளி  இரா.நாறும்பூநாதன்  காலமானார். தெக்கத்தி மண்ணின் படைப்பாளி இரா.நாறும்பூநாதன் காலமானார்.
சென்னைக்கு அருகே புதிய நகரம் - என்னென்ன வசதிகள் இருக்கும் தெரியுமா? சென்னைக்கு அருகே புதிய நகரம் - என்னென்ன வசதிகள் இருக்கும் தெரியுமா?
தமிழக நிதிநிலை அறிக்கை 2025- முக்கியமான 20 அறிவிப்புகள் தமிழக நிதிநிலை அறிக்கை 2025- முக்கியமான 20 அறிவிப்புகள்
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025- எந்தத் துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு? தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025- எந்தத் துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
இளையராஜாவின் அரை நூற்றாண்டு திரையிசைப் பயணத்தைக் கொண்டாடத்  தமிழக அரசு திட்டம் இளையராஜாவின் அரை நூற்றாண்டு திரையிசைப் பயணத்தைக் கொண்டாடத் தமிழக அரசு திட்டம்
நிதிநிலை அறிக்கை இலச்சினையில்  ரூ  - தமிழக அரசு அதிரடி நிதிநிலை அறிக்கை இலச்சினையில் ரூ - தமிழக அரசு அதிரடி
6  முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல்-8ம் தேதி தொடங்குகிறது 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல்-8ம் தேதி தொடங்குகிறது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.