LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- மலேசியா

சென்னையிலிருந்து பினாங்குவுக்கு நேரடி விமானச் சேவை


சென்னை - பினாங்கு நேரடி விமானச் சேவையை இண்டிகோ விமானச்சேவை விமானம்  தொடங்கியுள்ளது.  மலேசியா நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு மாநிலமான பினாங்குவுக்குப் பல்வேறு நாடுகளிலிருந்து நேரடி விமானச் சேவை இயக்கப்படுகிறது.

அங்குத் தமிழர்கள் அதிகம் வசித்தாலும், இந்தியாவிலிருந்து நேரடி விமானச் சேவை இல்லாமல் இருந்தது. இந்தியாவிலிருந்து, குறிப்பாக  சென்னையிலிருந்து  பினாங்குவுக்கு நேரடி விமானச் சேவை இயக்க வேண்டும் என்று தமிழர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், சென்னை - பினாங்கு - சென்னை இடையே தினசரி நேரடி விமானச் சேவையை இண்டிகோ விமானச்சேவை நிறுவனம் டிசம்பர் 21ம் தேதி முதல் தொடங்கியுள்ளது.  சென்னை விமான நிலையத்திலிருந்து அதிகாலை 2.15 மணிக்குப் புறப்படும் இண்டிகோ விமானச்சேவை பயணிகள் விமானம் காலையில் பினாங்கு தீவுக்குச் செல்லும். பின்னர், பினாங்கிலிருந்து காலையில் புறப்படும் விமானம் காலை 10.35 மணிக்கு சென்னை வந்தடையும்.

இந்த விமானம், 186 பேர் பயணிக்கக் கூடிய ஏர் பஸ் 320 ரகத்தைச் சேர்ந்தது. சென்னை - பினாங்கு இடையே பயண நேரம் சுமார் 4 மணி 30 நிமிடங்கள் ஆகும். சென்னையிலிருந்து பினாங்குவுக்கும், பினாங்கில் இருந்து சென்னைக்கும் தலா ரூ.10 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, சென்னையிலிருந்து பினாங்கு செல்ல வேண்டும் என்றால், மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் சென்று, அங்கிருந்து பினாங்கு செல்ல வேண்டும். இதனால், அதிக நேரம் ஆகும். 2025-ம் ஆண்டு ஜனவரியில் பினாங்கில் 8-வது ஆண்டாக மாநாடு, கண்காட்சி, சாலைக்காட்சி  நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இதனைக் கண்டுகளிக்கத் தமிழர்கள் பினாங்கு வந்து செல்வதற்கு இந்த நேரடி விமானச் சேவை பெரிய உதவியாக இருக்கும்.

 

by hemavathi   on 23 Dec 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
17 மணி நேர திக் திக் பயணம் - பத்திரமாகப் பூமி திரும்பினர் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் 17 மணி நேர திக் திக் பயணம் - பத்திரமாகப் பூமி திரும்பினர் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள்
2 நாள்களில் பூமிக்குத் திரும்பும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் 2 நாள்களில் பூமிக்குத் திரும்பும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச்
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் மீண்டும் காலதாமதம் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் மீண்டும் காலதாமதம்
நாசாவில் பணியாற்றிய 23 பேர் பணி நீக்கம் நாசாவில் பணியாற்றிய 23 பேர் பணி நீக்கம்
இந்தியா உடனான உறவை மீண்டும் கட்டியெழுப்புவோம் -  கனடாவின்  புதிய பிரதமர்  மார்க் கார்னி இந்தியா உடனான உறவை மீண்டும் கட்டியெழுப்புவோம் - கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி
சுனிதா வில்லியம்ஸ், வில்மோர்   மார்ச் 19  அல்லது  20 -ல்  பூமிக்குத் திரும்புகிறார்கள்  - நாசா அறிவிப்பு சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் மார்ச் 19 அல்லது 20 -ல் பூமிக்குத் திரும்புகிறார்கள் - நாசா அறிவிப்பு
பாகிஸ்தானின் சிந்து நதிப் பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான  தங்கப் படிமம் பாகிஸ்தானின் சிந்து நதிப் பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்கப் படிமம்
பாகிஸ்தானின் சிந்து நதிப் பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான  தங்கப் படிமம் பாகிஸ்தானின் சிந்து நதிப் பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்கப் படிமம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.