முனைவர் ஆய்வுக் கட்டுரை சுருக்கமாக தமிழில் இருக்க வேண்டும் ~சென்னைப் பல்கலைக்கழகம்
எந்த முனைவர் பட்டத்திற்கு உரிய ஆய்வுக் கட்டுரையும் பத்து பக்கங்கள் தமிழில் சுருக்கமாக மொழியாக்கம் செய்திருக்கபட வேண்டும் என்ற அறிவிப்பினை சென்னை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கௌரி வெளியிட்டுள்ளார்.
"எந்த முனைவர் பட்டம் பெற்றாலும் அவர்களது ஆய்வுக் கட்டுரை சுருக்கத்தினை பத்து பக்கங்கள் தமிழில் மொழியாக்கம் செய்ய வேண்டும்.இதன் மூலம் தமிழார்வலர்கள் அது குறித்து தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.இனி இது சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது" என்று அவர் கூறியுள்ளார்.
|