|
||||||||
இந்தியாவில் மகளிருக்கான வேலைவாய்ப்பு 48% அதிகரிப்பு |
||||||||
இந்தியாவில் மகளிருக்கான வேலைவாய்ப்பு 48% அதிகரித்துள்ளதாக பவுண்ட்இட் (foundit) அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2025-ம் ஆண்டில் இந்திய வேலைவாய்ப்புச் சந்தையானது மகளிர் வேலைவாய்ப்புக்கானதாக இருக்கும். இந்த ஆண்டில் மகளிருக்கான வேலைவாய்ப்பு 48% அதிகரித்துள்ளது. மேலும், படித்துவிட்டு உடனடியாக வேலையில் சேரும் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும்.
குறிப்பாக, மாநிலங்களில் தலைநகருக்கு அடுத்தபடியாக உள்ள இரண்டாவது, 3-ஆவது நிலை நகரங்களில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் (ஐடி), வங்கி, நிதிச்சேவைகள், காப்பீடு, உற்பத்தி, சுகாதார நலம், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துறை போன்றவற்றில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது.
படித்து முடித்துவிட்டு உடனடியாக வேலையில் சேருவோருக்கு அதிக அளவில் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. ஐடி, மனித வளம், சந்தைப்படுத்தல் துறைகளில் வளர்ந்து வளர்ந்து வரும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அதிக அளவில் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
மகளிர் வேலைவாய்ப்புகளில் 34 சதவீதத்தைக் கொண்ட ஐடி, கணினிகள், மென்பொருள் போன்ற தொழில்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன. அதேபோல் விளம்பரம்,மக்கள் தொடர்பு, நிகழ்ச்சிகள் நடத்துதல், பிஎஃப்எஸ்ஐ போன்ற துறைகளிலும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பவுண்ட் இட் அமைப்பின் துணைத் தலைவர் (சந்தைப்படுத்தல்) அனுபமா பீம் ராஜ்கா கூறும்போது, “இந்திய வேலைவாய்ப்பு சந்தை வளர்ந்து வருகிறது. குறிப்பாக உயர் வளர்ச்சியடைந்து வரும் தொழில்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் பெண்களுக்கு அதிக அணுகல் மற்றும் வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.
அலுவலகத்திலிருந்து வேலை செய்யும் பணிகள் 55% அதிகரித்துள்ளது. ஊதியத்தில் சமத்துவம். பணி முறையில் விருப்பங்கள் போன்ற பிரிவுகளில் சவால்கள் நீடித்தாலும், 2025-ம் ஆண்டு வேலைவாய்ப்பில் மகளிர் பணியாளர் பங்கேற்புக்கான ஒட்டு மொத்தக் கண்ணோட்டம் மிகவும் ஊக்கம் அளிக்கிறது” என்றார்.
|
||||||||
by hemavathi on 05 Mar 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|