LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- மொழி வளர்ச்சிக் கட்டுரைகள்

ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைப்போம்!

தகவலுக்காக...! (For Information: Establishment of a Tamil Chair at Harvard University)

அவசரம்...அவசியம்...இப்பதிவை அனைவரும் பகிரவும்...! பரப்பவும்...!

தமிழுக்கு நன்கொடை அளிப்போம்!

ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைப்போம்!

http://harvardtamilchair.com/

அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் 376 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. உலகத் தர வரிசையில் அது முதன்மையான இடத்தை பெற்றுள்ளது. உலகின் பிற செம்மொழிகளுக்கு அங்கு இருக்கைகள் உள்ளன. அவற்றில் சிறந்த ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றன. ஆனால் செம்மொழியான ஆதி தமிழுக்கு இது வரையில் அங்கு இருக்கை உருவாகவில்லை. இது நாள் வரை ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் இரண்டு சமூகங்கள் தான் தம் மக்களின் முயற்சியால் இருக்கைகள் நிறுவியுள்ளன. நூற்றுக்கணக்கான பிற இருக்கைகள் எல்லாம் பெரும் செல்வந்தர்களாலும், அரசாங்கங்களாலும் ஏற்படுத்தப்பட்டவை. தமிழுக்காக ஓர் இருக்கை நிறுவும் மூன்றாவது மக்கள் தொகையாக நாம் தலை நிமிர்ந்து நிற்கலாம்.

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தை உலகத்தின் அறிவு மையம் என்று சொல்வார்கள். அறிவும் ஆற்றலும் உள்ள முதல்தரமான பேராசிரியர்களை ஹார்வார்ட் ஈர்க்கும். அதேசமயம் உலகத்து பல நாடுகளிலிருந்தும் ஆர்வமான, தரமான மாணவர்கள் தமிழை கற்பதற்கும் ஆராய்வதற்குமாக ஹார்வார்ட்டை நாடுவார்கள்; உலகத் தரத்தில் ஆராய்ச்சிகளும் பயிற்றுவித்தலும் நிகழும். இங்கே நிறுவப்பட்ட ஆய்வு முறைகளும் ஒப்பியல் முறைகளும் உலக அங்கீகாரம் பெற்றவை; மதிப்பு வாய்ந்தவை. அதனால் தமிழ் ஆராய்ச்சிகளின் பயன் பலரையும் சென்றடையும். .

தமிழ் இருக்கை தொடங்குவதற்கான அங்கீகாரம் ஹார்வார்ட்டிடமிருந்து எமக்கு கிடைத்துவிட்டது. அதற்கு தேவையான முதலீடு ஆறு மில்லியன் டொலர்கள். அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர்கள் திரு ஜானகிராமனும் திரு திருஞானசம்பந்தமும் கூட்டாக ஒரு மில்லியன் டொலர்கள் செலுத்துவதற்கு ஒப்புதல் அளித்துவிட்டார்கள். மீதி ஐந்து மில்லியன் டொலர்களை உலகத்து தமிழ் மக்களிடமிருந்து திரட்டி இருக்கை உருவாக வழி செய்யவேண்டும். இந்த இருக்கையின் உருவாக்கத்தில் தமிழ் நாடு அரசின் உதவி பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் பல்கலைக்கழகங்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் உதவலாம். அவைகளுக்கு எதிர்காலத்தில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்துடன் ஏற்படப்போகும் தொடர்பு இரு பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்கும் உதவும். தமிழ் நிறுவனங்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், தமிழ் பற்றாளர்கள் என அனைத்து மக்களிடமிருந்தும் உதவி எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுக்க 5000 தமிழர்கள் ஒன்றுபட்டாலே போதும், ஒரு வருட கால அவகாசத்துக்குள் வேண்டிய நிதியை திரட்டிவிடலாம்.

மூன்று விதங்களில் நிதி வழங்கலாம்:

1) உங்கள் காசோலையை “Tamil Chair Inc.” என்ற பெயருக்கு எழுதி கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்புதல்.

Tamil Chair Inc.
Attn: Dr. Sornam Sankar
4113 Tiber Falls Dr
Ellicott City, MD 21043
USA

2) உங்கள் காசோலையை “Harvard University” என்ற பெயருக்கு எழுதி கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்புதல்.

மறக்காமல் காசோலையில் Memo என்றிருக்கும் கோடிட்ட இடத்தில் Tamil Chair என்று குறிப்பிடுவது அவசியம். இல்லையெனில் அது பிற செலவுகளுக்குப் பயன்படுத்தப்படும்.

Office of the Recording Secretary
Harvard University
124 Mount Auburn Street
Cambridge, MA 02138
USA

3) வங்கி மூலம் நேரடியாக பணம் செலுத்துதல்.

Bank of America
100 Federal Street
Boston, MA 02110
President & Fellows of Harvard College, RSO account
Account #: 9429263621
ACH ABA: 011000138
Wire ABA: 026009593
Swift Code: BOFAUS3N
Donor: (To be provided by donor)
Purpose: Sangam Professorship in Tamil

4) கடன் அட்டை (Credit Card) மூலம் பணம் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இந்த விவரங்கள் விரைவில் இங்கு கொடுக்கப்படும்.

தமிழில் ஆர்வமான இளம் தலைமுறையினர் இன்று வெளிநாடுகளில் பல துறைகளில் கல்வி கற்கின்றனர். அவர்களும் பிற நாட்டினரும் தமிழின் பழமையான இலக்கியங்களைப் படித்து ஆராய இந்த இருக்கை உதவும். உன்னதமான சான்றோர்களால் பல ஆயிரம் ஆண்டுகளாக பேணி வளர்க்கப்பட்ட சுவையான செம்மொழி நம்முடைய தமிழ். அதற்கு உரிய மரியாதையைக் கொடுத்து நாம் சிறப்பிக்க வேண்டும். 1.5 மில்லியன் மக்கள் மட்டுமே பேசும் செல்டிக் மொழிக்கு இரண்டு இருக்கைகள் ஹார்வார்டில் இருக்கின்றன. 8 கோடி மக்கள் பேசும் தமிழ் மொழிக்கு ஓர் இருக்கையாவது நிறுவவேண்டியது எத்தனை அவசியம்? இந்த இருக்கை அமைய உலகத் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றாகத் திரண்டு நிதி வழங்கி ஆதரவு தரவேண்டும். இதனால் தமிழுக்கு பெருமை. எங்கள் வருங்காலச் சந்ததியினருக்கு நாம் விட்டுப் போகும் அரிய செல்வமாக இது விளங்கும்.

http://harvardtamilchair.com/

Establishment of a Tamil Chair at Harvard University

Tamils around the world have an unprecedented opportunity to establish a permanent foundation for Tamil studies at the most prestigious institution in the world, Harvard University. The prospect of having the Tamil language celebrated with a fully endowed chair at one of the world’s premier institutions, is unparalleled.

The Tamil langauge, spoken by about 80 million people worldwide, is one of the major classical languages of the world. Its literature is revered as one of the world’s oldest and finest. An endowed chair, will facilitate the continued scholarship in this notable and precious language that is an integral part of Tamil identity throughout the world.

Tamil Sangam literature, which is over 2000 years old, has many Tamil commentaries, from ancient to modern. It has also been translated into English by many scholars. Inspired by this literature, and with a view toward disseminating this rich and prolific language, Dr. Vijay Janakiraman and Dr. Sundaresan Thirugnanasambandam, approached Harvard University about the establishment of the Tamil Chair. Comprehensive discussions have led to the approval of a $6M endowment to fund this Chair. Drs. Janakiraman and Thirugnanasambandam, have generously contributed $500,000 each toward this endowment. We are now in the public phase of the campaign to raise the remaining $5M and looking to the global Tamil community to seize this opportunity to be an integral part of the promotion of Tamil literature and studies.

Contributions may be made in three convenient ways.

1) Write your Check to “Tamil Chair INC.” and send it to the following address:

Tamil Chair Inc.
Attn: Dr. Sornam Sankar
4113 Tiber Falls Dr
Ellicott City, MD 21043
USA

2) Write your Check to “Harvard University” and send it to the following address (Please specify “Tamil Chair” in the memo field. Otherwise, the funds could be used by Harvard for other purposes.)

Office of the Recording Secretary
Harvard University
124 Mount Auburn Street
Cambridge, MA 02138

3) Direct payment by bank transfer.

Bank of America
100 Federal Street
Boston, MA 02110
President & Fellows of Harvard College, RSO account

Account #: 9429263621
ACH ABA: 011000138
Wire ABA: 026009593
Swift Code: BOFAUS3N
Donor: (To be provided by donor)
Purpose: Sangam Professorship in Tamil

4) Payment by Credit Card.

Arrangements are in the process for credit card payments through our website. The information will become available on this page shortly.

Your generous donation will have a substantial impact on the status of academic exploration in Tamil, and will serve as a legacy for generations to come.

http://harvardtamilchair.com/

by Swathi   on 23 Oct 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு – 3 -  பேராசிரியர் முனைவர் பா. இறையரசன் – பகுதி – 2 தகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு – 3 - பேராசிரியர் முனைவர் பா. இறையரசன் – பகுதி – 2
தகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு- 3 - பேராசிரியர் முனைவர்.பா.இறையரசன்- பகுதி-1 தகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு- 3 - பேராசிரியர் முனைவர்.பா.இறையரசன்- பகுதி-1
தகைமைசால் தமிழறிஞர்கள் - முனைவர். தெய்வசுந்தரம் நயினார் தகைமைசால் தமிழறிஞர்கள் - முனைவர். தெய்வசுந்தரம் நயினார்
உலகத் தாய்மொழி நாள், 21 பிப்ரவரி | தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன? - இஸ்ரோ தலைவர் டாக்டர்.மயில்சாமி அண்ணாதுரை உலகத் தாய்மொழி நாள், 21 பிப்ரவரி | தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன? - இஸ்ரோ தலைவர் டாக்டர்.மயில்சாமி அண்ணாதுரை
தாய்மொழி முக்கியத்துவம் - பன்னாட்டு அறிஞர்களின் சிற்றுரை தாய்மொழி முக்கியத்துவம் - பன்னாட்டு அறிஞர்களின் சிற்றுரை
தாய்மொழியாம் தமிழுக்கு நம் வாழ்நாளில் ஒரு நன்மையேனும் செய்ய வேண்டுமெனில் இவற்றைச் செய்யுங்கள்.  1 தாய்மொழியாம் தமிழுக்கு நம் வாழ்நாளில் ஒரு நன்மையேனும் செய்ய வேண்டுமெனில் இவற்றைச் செய்யுங்கள். 1
"ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்? ஒரு எளிய விளக்கம்
என்னய்யா சும்மா தமிழ் தமிழ்-ன்னு என்ன இருக்கு அதில்?  என்னய்யா சும்மா தமிழ் தமிழ்-ன்னு என்ன இருக்கு அதில்? 
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.