LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

வேர் மறவா வெளிநாட்டு வாழ் தமிழர்:

திரு.ரவிச்சந்திரன் சோமு, சிங்கப்பூர்

பிறந்த ஊர்: வெட்டிகாடு, திருவாரூர் மாவட்டம். 

 

நேர்காணல்: இரமா ஆறுமுகம்

 

 

தமிழக மக்களின் நலனுக்காகச் சிங்கப்பூரிலிருந்து பாதை என்ற அறக்கட்டளை நடத்தி வரும் திரு.இரவிச்சந்திரன் சோமுவுடன்  வலைத்தமிழுக்காக  ஓர் நேர்காணல்.

 

இரமா: வணக்கம் இரவி. புலம் பெயர்ந்து போனாலும் இன்னும் வேர்களை மறக்காமல் நம் தமிழக மக்களின் நலனுக்காகப் பாதை என்ற அறக்கட்டளை நிறுவி நடத்தி வருகிறீர்கள். வாழ்த்துகள். உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா?

 

இரவி: வணக்கம் இரமா. நன்றி. என் பூர்வீகம் தமிழகத்தில் தஞ்சைத்தரணியில் மன்னார்குடிக்கு அருகில் உள்ள வெட்டிக்காடு கிராமம். நான் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். என் பெற்றோர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். நான் தமிழ் வழிக் கல்வி முறையில் அரசுப் பள்ளிகளில் பள்ளிப் படிப்பைப்  பயின்ற பின், கிண்டி பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பைப் படித்து முடித்து விட்டு பின்பு பணி நிமித்தமாகச் சிங்கப்பூர் வந்தேன். என்னை வளர்த்து விட்ட சமூகத்திற்கு ஏதாவது திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் எனக்கு உண்டு. என்னால் இயன்ற அளவு வசதி இல்லாத மாணவர்களின் கல்விச் செலவிற்காகவும், கிராமப்புற மாணவர்கள் கல்வி திட்டங்களுக்காகவும் நிதி உதவி அளித்து வந்தேன். நானும் என் மனைவி கீதாவும் எங்கள் வருமானத்தில் ஒரு சிறு பகுதியைக் கல்விப் பணிக்காக வழங்குவது என்று முடிவு செய்து அதைச் செயல்படுத்தி வந்தோம்.

சில வருடங்கள் சிங்கப்பூரில் பணி புரிந்து விட்டு 1999ல் அமெரிக்காவின் பாஸ்டன் பகுதியில் பணிபுரிய வந்தேன்.  2003 ஆம் நியு செர்சியில் நடைபெற்ற தமிழ்ச் சங்கப் பேரவை விழாவில் வசதி இல்லாதவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட பல தமிழ் நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. குறிப்பாக என் கல்லூரியில் படித்து எனக்கு ஆசிரியராகப் பணியாற்றிய ஆண்டி கிரியைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. அவர் 2001ல் சில நண்பர்களுடன் சேர்ந்து AIMS India Foundation என்ற அமைப்பை இந்திய சமூக மேம்பாட்டிற்காக ஆரம்பித்திருந்தார் . 2003 ஆகஸ்ட்  மாதத்தில் நானும் என் நண்பர் வாசுதேவன் ஜோதிலிங்கமும் சேர்ந்து  AIMS India Foundation-ன் பாஸ்டன் அத்தியாயத்தைத் தொடங்கினோம். நானும் என் நண்பர்கள் சிலரும் மாதந்தோறும் 100 டாலர்கள் கொடுப்போம். நண்பர்கள் அனைவரும்  மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சந்தித்து அந்தப் பணத்தைத் தமிழகத்தில் உள்ள கிராமப்புற  பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகளுக்காகச் செலவிடுவோம். தமிழகத்தில் விடியல் அறக்கட்டளையுடன் இணைந்து பல வளர்ச்சிப் பணிகளில் பங்காற்றினோம். 2003 ல் இருந்து 2010 வரை தமிழகத்தில் கிட்டத்தட்ட  25 கிராமப்புற அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த உதவினோம். இதற்கிடையில் 2007ல்  மறுபடியும் குடும்பத்துடன் சிங்கப்பூர் திரும்பி விட்டோம். என்னுடன் இணைந்து பணியாற்றிய நண்பர்களும் இந்தியா திரும்பி விட்டனர். இதனால் இந்த முயற்சியில் தொய்வு ஏற்பட்டது. நான் மறுபடியும் என்னால் இயன்ற அளவு கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குத்  தனியாக உதவி செய்யத் தொடங்கினேன்.

 

இரமா: நன்றி இரவி. உங்கள் வாழ்க்கைப் பயணம் ரொம்ப சுவாரசியமாகவும், மற்றவர்களுக்குப் பயனுள்ளதாகவும் இருக்கிறது. உங்கள் மனைவி கீதாவும் இதற்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்று அறிவதில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் ஆரம்பித்த பாதை அமைப்பைப் பற்றிக் கொஞ்சம் கூறுங்கள்.

 

இரவி: நானும் என் மனைவி கீதாவும் வலைப் பதிவர்கள்.  என் சிறு வயது கிராமத்து நினைவலைகளையும், கிராமத்து உண்மைக் கதைகளையும் என் வலைப் பதிவில் தொடர்ந்து எழுதி வருபவன். 2016 ஆம் ஆண்டு நான் எழுதிய பதிவுகளைத் தொகுத்து "வெட்டிக்காடு" என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டேன். அதே போல் என் மனைவி கீதாவும் "கீதா கஃபே" என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டார். இதற்காகத் தமிழகம் மற்றும் சிங்கப்பூரில்  புத்தக வெளியீட்டு விழாக்கள் நடத்திப் புத்தக விற்பனை  மற்றும் நன்கொடை மூலம் வரும் பணம் அனைத்தையும் கல்விப் பணிகளுக்காக நன்கொடை அளிக்கிறோம் என்று அறிவித்தோம். இதன் மூலம் சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் கிடைத்தது. இந்தப் பணத்தை வைத்து கிராமப்புறக் கல்வி வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த மற்றும் ஏழை மாணவர்களின் கல்வியை மேம்படுத்த  "பாதை" என்ற அறக்கட்டளை தொடங்கினோம். 

 

இரமா: மிகவும் சிறப்பு இரவி. பாதை அறக்கட்டளை மூலம் செயல்படுத்திய திட்டங்களைப் பற்றிக் கூற முடியுமா ?

 

இரவி : பாதை மூலம் மன்னார்குடி வடுவூர் பகுதியில் உள்ள 16 அரசுப் பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்கு ஒரு இலட்சத்து எழுபத்தைந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை சனவரி 5, 2018 ல் வடுவூர் உயர்நிலைப் பள்ளியில் ஒரு விழா நடத்தி இலவசமாக வழங்கினோம்.

 

இந்த விழாவில்  சமூக ஆர்வலர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது  கிட்டத்தட்ட 350 ஏக்கர்கள் பரப்பளவில் அமைந்துள்ள வடுவூர் ஏரியைத் தூர் வாரி இருபது வருடங்கள் ஆகின்றன என்றும், இந்த ஏரி மூலமாகத் தான் வடுவூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள குளங்கள் தண்ணீர் பெறுகின்றன என்றும், ஏரியைத் தூர் வாராததால் குளங்களுக்குத் தண்ணீர் வருவதில்லை என்றும் குறிப்பிட்டார். தமிழக அரசை அணுகி இந்த ஏரியைத் தூர் வாரும் முயற்சியில் வெற்றி பெற்றோம். இதனால் ஊக்கம் பெற்ற கிராமத்து இளைஞர்கள் "நமது கிராமம்" என்ற குழுவை ஏற்படுத்தி வடுவூர் ஏரியிலிருந்து குளங்களுக்குச் செல்லும் முக்கிய கால்வாயைத் தூர் வார முன்வந்தனர். இதற்கு நாங்கள் முதலில் வெறும் பத்தாயிரம் ரூபாய் தான் வழங்கினோம். புதிய தலைமுறை தொலைக்காட்சியின் உதவியால் கிடைக்கப்பெற்ற  ஒரு இலட்சம் ரூபாய் நிதி உதவியுடன் 11 கிலோமீட்டர் வாய்க்காலை இளைஞர்கள் ஆர்வத்துடன் தூர் வாருவதைப் பார்த்து அவர்களுக்கு மேலும் நாற்பதாயிரம் ரூபாய் வழங்கினோம். இதன் மூலம் 25  குளங்கள் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியதைக் கண்டு கிராம் மக்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர். 

 

இதற்கு அடுத்த திட்டமாகநீர் நிரம்பிய குளங்களைச் சுற்றி மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும் என்று திட்டம் தீட்டி “நமது கிராமம்” இளைஞர்களுடன் இணைந்து “பசுமைத் தீபாவளி 2019”  என்று ஐந்து லட்சம் ரூபாயில் திட்டம் தீட்டி வெற்றிகரமாக 2000-க்கும் மேற்பட்ட நிழல், மற்றும் பூ மரக்கன்றுகளை நட்டோம். ஒவ்வொரு கிராமத்திற்கும் ரூபாய் ஐம்பதாயிரம் வழங்கப்பட்டது. மரக்கன்றுகள் மற்றும் பாதுகாப்புக் கூண்டுகள் வாங்குவதற்காக இருபத்தைந்தாயிரம் ரூபாயும், மற்றும் மரக்கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்க ஒரு வருடப் பராமரிப்பு செலவிற்கு இருபத்தைந்தாயிரம் ரூபாயும் வழங்கினோம். 

இரமா: மிக்க மகிழ்ச்சி இரவி. உங்களின் மற்ற சமூகப் பணிகளைப் பற்றிக் கொஞ்சம் கூற முடியுமா?

 

இரவி: 2018 நவம்பரில் கஜா புயல் வந்த போது முதல் கட்ட நிவாரண நிதியாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டரை இலட்சம் ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்களை வழங்கினோம். கஜா புயல் இரண்டாம் கட்ட நிவாரப்பணியாக வெட்டிக்காடு கிராமத்திலுள்ள இருநூறு விவசாயிகளுக்கும் 800 தென்னம் பிள்ளைகள், 400 மாமரக் கன்றுகள் (ஒரு விவசாயக் குடும்பத்திற்கு நான்கு தென்னம் பிள்ளைகள் மற்றும் இரண்டு மாமரக் கன்றுகள்) ஜனவரி 17, 2019 அன்று வழங்கப்பட்டன.அந்த மாமரக் கன்றுகளில் தற்போது மாங்கனிகள் காய்க்கத் தொடங்கி விட்டன. 

 

இரமா: மிகவும் சிறப்பு இரவி. இந்த ஆண்டு என்னென்ன திட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகிறீர்கள்?

 

இரவி: இந்த ஆண்டு பொங்கலன்று பத்துக் கிராமங்களில் உள்ள எட்டாயிரம் வீடுகளுக்கும் இரண்டு லட்சம் ரூபாயில் ஒரு வீட்டிற்கு  இரண்டு பழமரக் கன்றுகளை வழங்கிப் பொங்கல் பண்டிகையை “பசுமைப் பொங்கலாகக்” கொண்டாடினோம்.

 

“நமது கிராமம்” அமைப்பிலுள்ள பத்துக் கிராமங்களின் கல்வி வளர்ச்சி தான் இந்த ஆண்டின் முக்கியத் திட்டம்.  அதற்காகக் கிராமங்களில் இலவசப் படிப்பகம் (Tuition centers)  ஆரம்பிக்கப் போகிறோம். அதற்கு முன்னோடியாக இரண்டு கிராமங்களில் ஏற்கனவே இந்தப் பொங்கல் பண்டிகையன்று இலவசப் படிப்பகங்களை ஆரம்பித்து விட்டோம்.இதற்காக ஒவ்வொரு மையத்திலும் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் இரண்டு ஆசிரியர்களை நியமித்துள்ளோம்.தினமும் மாலை இரண்டு மணி நேரம் கிராமத்தினர் வழங்கிய இலவச இடத்தில் இந்த மையம் செயல் படுகிறது.

 

இரமா: உங்கள் சமூகப் பணிகளை எடுத்துக் கூறியதற்கு மிகவும் நன்றி இரவி. உங்கள் சமூகப் பணிகள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள். உங்களைப் போன்றோர் தான் இந்த உலகில் இன்று அதிகம் தேவைப்படுகிறார்கள்

 

இரவி: நன்றி இரமா. வலைத்தமிழுக்காக உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. 

by Swathi   on 08 Feb 2020  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும் தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும்
தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி
[ம.சு.கு]வின் :  மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம் [ம.சு.கு]வின் : மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம்
கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு
கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை
“இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?” “இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?”
வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு
நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா
கருத்துகள்
25-Jun-2020 15:28:40 Dr Ram said : Report Abuse
மிக அருமையான, இயல்பான நல்ல தகவல்கள்ஃ, செயல்கள் , செயல்பாடுகள். தங்களின் சமூகப் பணி செழித்து உதவ நல்வாழ்த்துகள். நன்றி!
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.