LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

30 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் பதிவு செய்யாவிட்டால் சிறை - ட்ரம்ப் நிர்வாகம்

அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டும், இதற்கு இணங்க மறுத்தால் அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் வெளிநாட்டினர், உடனடியாக அமெரிக்க அரசில் தங்களைப் பதிவு செய்துகொள்ளவேண்டும். இதனை ஏற்கத் தவறுவது சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் குற்றமாகும்.
அதிபர் ட்ரம்ப் அரசு நிர்வாகமும், உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை செயலாளர் க்ரிஷி நோம் ஆகியோர் வெளிநாட்டினருக்குத் தெளிவான செய்தியைத் தெரிவிக்கின்றனர். இப்போதே நீங்களாகவே உங்களை நாடு கடத்திக் கொள்ளுங்கள் என்பதே அது." என்று தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்க அதிபர் அலுவலகம் மற்றும் க்ரிஷி நோமை டேக் செய்துள்ளது.
மேலும் சட்டவிரோதமாகத் தங்கி இருப்பவர்களுக்கான செய்தி என்று, சுயமாக நாட்டை விட்டு வெளியேறுவதன் நன்மை மற்றும் பின்விளைவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதன் படி, சுயமாக வெளியேறுவது மிகவும் பாதுகாப்பானது. நீங்கள் செல்லவிருக்கும் விமானத்தை உங்களின் விருப்பப்படி தேர்வு செய்யலாம். நீங்கள் குற்றமற்ற சட்ட விரோதமில்லாமல் சுயமாக வெளியேறினால் அமெரிக்காவில் சம்பாதித்த பணத்தை உங்களுடன் எடுத்துச் செல்லலாம்.
நீங்களாகவே சுயமாக வெளியேறும் போது எதிர்காலத்தில் சட்டப்பூர்வமாக அமெரிக்காவுக்கும் வரும் வாய்ப்பைப் பெறலாம். ஒருவேளை அவ்வாறு வெளியேற முடியாதவர்கள், சலுகை விலையில் விமானப்பயணத்துக்கான வாய்ப்பினைப் பெறலாம் என்று தெரிவித்துள்ளது.
அதேபோல் வெளியேறாதவர்கள் சந்திக்க இருக்கும் விளைவுகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. சுயமாக வெளியேறாதவர்களை உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை அடையாளம் கண்டவுடன் அவர்கள் நாடுகடத்தல் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
நீங்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான இறுதி உத்தரவைப் பெற்ற பின்பு நாளொன்றுக்கு 998 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்படும். நீங்கள் வெளியேறுவதாகக் கூறிவிட்டு அதைச் செய்யத்தவறினால், 1000 முதல் 5000 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும்.
சுயமாக நீங்கள் நாட்டைவிட்டு வெளியேறாவிட்டால் சிறைத்தண்டனைக்கு ஆளாகலாம். அதேபோல் தங்களைப் பதிவு செய்யாதவர்கள், சட்டப்பூர்வக் குடியேற்ற முறைப்படி அமெரிக்காவுக்கு மீண்டும் வரத் தடைவிதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவுகள் அமெரிக்க ஹெச் 1 பி மற்றும் மாணவர் அனுமதி விசா வைத்திருப்பவர்களை நேரடியாகப் பாதிக்காது, என்றாலும் முறையான அனுமதி இல்லாமல் அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்குவதைத் தடுக்கச் சட்டப்பூர்வமான எச்சரிக்கையை வழங்குகிறது.
ஹெச் 1 பி விசா வைத்திருப்பவர்கள் வேலை இழந்திருந்தாலும் குறிப்பிட்ட காலத்துக்குள் அமெரிக்காவை விட்டு வெளியேறத்தவறினால் சட்டப்பூர்வ நடவடிக்கையைச் சந்திக்க வேண்டி இருக்கும். எனவே ஹெச் 1 பி மற்றும் மாணவர் விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் தங்கியிருப்பதற்கான காரணத்தையும் அதற்கான தேவையையும் தெரிவித்திருக்க வேண்டும்.

by hemavathi   on 14 Apr 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பிரிட்டனில் ஓட்டளிக்கும் வயது 16 ஆகக் குறைப்பு பிரிட்டனில் ஓட்டளிக்கும் வயது 16 ஆகக் குறைப்பு
இணைய ஏலத்தில் ரூ.1.7 கோடிக்கு விற்பனை ஆன காந்தி ஓவியம் இணைய ஏலத்தில் ரூ.1.7 கோடிக்கு விற்பனை ஆன காந்தி ஓவியம்
அத்தியாவசியமற்ற ஈரான் பயணத்தைத் தவிருங்கள் - இந்தியத் தூதரகம் அத்தியாவசியமற்ற ஈரான் பயணத்தைத் தவிருங்கள் - இந்தியத் தூதரகம்
மாஸ்கோவில்   8.5 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்த இந்திய உத்சவ் விழா மாஸ்கோவில் 8.5 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்த இந்திய உத்சவ் விழா
இந்திய மாணவர்களின் சேர்க்கை குறைந்ததால் நிதி நெருக்கடி - 10,000 பேரைப் பணி நீக்கம் செய்த கனடா கல்வி நிறுவனங்கள் இந்திய மாணவர்களின் சேர்க்கை குறைந்ததால் நிதி நெருக்கடி - 10,000 பேரைப் பணி நீக்கம் செய்த கனடா கல்வி நிறுவனங்கள்
"சிங்கப்பூரோடு ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது" - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
2026 முதல் எச் 1 பி விசா கட்டணம் 40 ஆயிரமாக அதிகரிப்பு 2026 முதல் எச் 1 பி விசா கட்டணம் 40 ஆயிரமாக அதிகரிப்பு
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கனடா பொருள்களுக்கு 35 சதவிகித வரி -  ஆகஸ்ட் 1  முதல் அமலுக்கு வரும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கனடா பொருள்களுக்கு 35 சதவிகித வரி - ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.