LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

வரலாற்றுச் சிறப்புமிக்க ஹார்வார்ட் தமிழ் இருக்கை கனவு நிறைவேறியது ..

 

ஹார்வார்டில் தமிழ் இருக்காய் அமைக்கும் மிகப்பெரிய சாதனை நிகழ்வு, உலகத் தமிழர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் மே, 2018 -ல் நிறைவேறியது . ஹார்வார்ட் பல்கலைக்கழகக் குழுவுடன் இறுதிப் பேச்சுவார்த்தை நடத்தி , மீதம் கொடுக்கவேண்டிய தொகையை கையளித்து திரும்பிய ஹார்வார்ட் தமிழ் இருக்கை செயற்குழுவின் சார்பாக முனைவர் சொர்ணம் சங்கர் இந்த தகவலை தெரிவித்தார் .

 

தமிழ் பல்வேறு பெருமைகளை கொண்டிருந்தாலும், உலகின் தொன்மையான மொழியாக விளங்கினாலும், கடந்த பல ஆண்டுகளாக அதற்கு கிடைத்திருக்க வேண்டிய பெருமைகளும், சிறப்பும், உலக அங்கீகாரமும், ஆராய்ச்சி  வசதிகளும் இன்னும் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

 

இந்த நிலையில்  கடந்த 2015-ம் ஆண்டு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையில் கலந்துகொண்ட திருமதி.வைதேகி ஹெர்பர்ட் , மருத்துவர் சம்பந்தன் மற்றும் மருத்துவர் ஜானகிராமன் ஆகியோரது சந்திப்பில் உதித்த சிந்தனைதான் இந்த ஹார்வார்ட் தமிழ் இருக்கை.

 

உலகின் தொன்மையான பல மொழிகளுக்கு  ஹார்வார்டில் தமிழ் இருக்கை இருக்கிறது, பன்னாட்டு மாணவர்கள் அந்த மொழியை அறிந்துகொள்ளவும், ஆய்வுகளை மேற்கொள்ளவும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது , அந்த வாய்ப்பு தமிழுக்கு இதுவரை கிடைக்கவில்லையே என்ற ஒரு சிந்தனை,  ஒரு மிகப்பெரிய  திட்டமாக உருவாகி, மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட நாற்பது கோடி ரூபாய் (6 மில்லியன் அமெரிக்க டாலர்கள்)  நிதி திரட்டி உலகத் தமிழர்கள் சாதித்திருக்கிறார்கள்.

 

இந்த வரலாற்று சிறப்புமிக்க தமிழ்த் தொண்டுக்கு தலைமையேற்ற மருத்துவர்கள் திரு.சம்பந்தன் ஐயா மற்றும் திரு.ஜானகிராமன் இருவரும் தங்கள் பங்களிப்பாக ஆளுக்கு அரை மில்லியன் டாலர்கள் நன்கொடை கொடுத்து ஒரு மில்லியனில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்கள் ..

 

இது தமிழ் சமூகத்திற்கு புதிய சாதனை. காரணம் நமக்குத் உள்ள சரியான தேவையை சிந்திக்கவேண்டும் , சிந்திப்பவர்கள் தங்கள் கையிலிருந்து நன்கொடை கொடுத்து நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும், அதை எல்லாம் விட உலகின் எந்த மூலையில் சிறு தொகையை தருகிறேன் என்று சொன்னாலும் உடனே அங்கே சென்று அவர்களை ஊக்கப்படுத்தி திட்டம் நிறைவேறும்வரை தொடர்ந்து உலகின் அனைத்து பகுதிகளுக்கும் பயணிக்கவேண்டும்.   இதற்கு சிந்தனை , நிதியை விட மிகப்பெரிய நேரப் பங்களிப்பு வழங்க முன்வரவேண்டும். இது அனைத்தும் தமிழ் சமூகத்தில் முன்மாதிரியான இந்த கொடை வள்ளள்களால் தாய்மொழிமேல் கொண்ட பற்றுடன்   ஏற்றுக்கொண்ட  அர்பணிப்பு உணர்வே இவ்வளவு பெரிய சாதனையை செய்து முடிக்க அடித்தளமாக அமைந்தது . தமிழக அரசு, தமிழ்நாட்டின் பல்வேறு கட்சிகள் இதில் இணைந்தது இதை மேலும் வலுவான திட்டமாக மாற்றியது . 

 

தமிழ் சமூகத்தில் தங்கள் மிகப்பெரிய அர்பணிப்பால் இன்று முன்மாதிரியாகப் பார்க்கப்படும் நிலையில்  மருத்துவர்கள் இருவரும் உயர்ந்துள்ளார்கள் . 

 

பல்வேறு சோதனைகள், பல்வேறு தடைகள், முட்டுக்கட்டைகள் ஏற்பட்டாலும், ஹார்வர்ட் திட்டம் குறித்து வதந்திகள் பரப்பப்பட்டாலும், அனைத்தையும் இனிய புன்னகையுடன் எவரையும் காயப்படுத்திவிடாமல் ஒரு அறிக்கையை அளித்துவிட்டு அடுத்த நிதிபெறும் கூட்டத்திற்கு செல்லும் பண்பு மருத்துவர்களிடம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியதாக இருந்தது.

 

ஒருவழியாக அனைத்து நடைமுறைகளும் முடிந்து மீதம் கொடுக்கவேண்டிய பணமும் ஹார்வார்ட் குழுவிடம் கையளிக்கப்பட்டு திரும்பிய முனைவர்.சொர்ணம் சங்கர் அவர்களிடம் வலைத்தமிழ் நிருபர் உரையாடியபோது குறிப்பிடுகையில், ஹார்வார்ட் எதிர்பார்த்த  அனைத்து தேவைகளும் நிறைவடைந்து பணம் முழுவதுமாக கையளிக்கப்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் , அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆய்வு இருக்கைகள் அமையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது . 

 

இதன் அடுத்த கட்டமாக சரியான பேராசியரை அடையாளம் காணும் பணி தொடங்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.

 

இதுகுறித்து மருத்துவர். ஜானகிராமன் அவர்கள் வெளியுட்டுள்ள அறிக்கையில்

 

ஹார்வர்ட் தமிழ் இருக்கை நன்கொடையாளர்களுக்கும் வணக்கம்,

வாழ்த்துக்கள்!

மே மாதம் 4ஆம் நாள், நானும், சம்பந்தம், சங்கர், ஆகியோர் முனைவர் செல்வகுமார்அவர்கள் தலைமையில், ஹார்வர்ட் பல்கலைக்கழக நிர்வாகிகளை சந்தித்தோம்.தென்னாசிய துறையின் தலைவர் திரு.சுனில் அம்ரித் ,நீனா சிப்செர்(Nina Zipser , Dean of Faculty Affairs and Planning),பேராசிரியர் விட்சல், பரிமள், மற்றும் நிர்வாகி குரோன் ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றனர். உங்களின் எண்ணங்களையும், பரிந்துரைகளையும் பிரிதிபலிக்கும் கோரிக்கைகளை அவர்களிடம் அளித்தோம். உடனேயே தமிழ் இருக்கைக்கு,பேராசிரியரை தேடும் பணி தொடங்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

 

தமிழ் இருக்கைக்கு தேவையான ஆறு மில்லியன் டொலர்களை எட்டும் மீதித் தொகையினை காசோலையாக அளித்து நம் கடமையினை நிறைவேற்றிவிட்ட மகிழிச்சியுடன் நிர்வாகத்தினரிடம் விடை பெற்றோம்.
இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்.
அன்புடன்
ஜானகிராமன், தலைவர், தமிழ் இருக்கை குழுமம்.

தமிழ் இருக்கைக்கு தேவையான ஆறு மில்லியன் டொலர்களை எட்டும் மீதித் தொகையினை காசோலையாக அளித்து நம் கடமையினை நிறைவேற்றிவிட்ட மகிழிச்சியுடன் நிர்வாகத்தினரிடம் விடை பெற்றோம்.

இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி, வணக்கம்.

அன்புடன்

ஜானகிராமன், தலைவர், தமிழ் இருக்கை குழுமம்.

 

by Swathi   on 08 May 2018  5 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
19-May-2018 14:34:44 வெ தி முருக வினோத் குமார் said : Report Abuse
வணக்கம்.இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஹார்வார்டு தமிழ் இருக்கைக்கு வித்திட்ட மருத்துவர்கள் திரு சம்பந்தன் ஐயா மற்றும் திரு ஜானகிராமன் ஐயா அவர்களுக்கு உலகம் முழுவதும் வாழும் தமிழ்ச்சமூகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.
 
19-May-2018 03:39:17 SILVESTER DANIEL said : Report Abuse
Victory for passion, coordination love and eager. All the very best for further actions. Congratulations to every tamizhan
 
18-May-2018 10:25:12 இரத்தினசுவாமி ஆ நாடார் said : Report Abuse
தங்கள் தகவல் அனைவருக்கும் பயனுள்ளது. தமிழா நீ வாழு தமிழால்!!! உன் சுய அடையாளத்தை எங்கும் எதிலும் விட்டுக்கொடுக்காதே. ஏனெனில் நீ யாரென்பது அகிலம் அறியும். உன்னை அழிக்க நினைப்பவர்கள், அவர்கள் எண்ணம்போலவே போவார்களாக........ தமிழால் தங்கள் உறவுப்பாலம் தொடர வாழ்த்துக்கள்.
 
18-May-2018 05:44:07 தாமோதரன்.ஸ்ரீ said : Report Abuse
நான் தங்களது வலைதளத்தில் சிறு கதைகள்,கவிதைகள்,மழலை பாட்டு,சிறுவர் கதைகள் எழுதி வருகிறேன். முகப்பில் எழுத்தாளர் வரிசையில் என் பெயர் இடம் பெற நான் செல்ல வேண்டிய தூரம் எவ்வளவு?
 
17-May-2018 18:27:27 மண்டகொளத்தூர் சுப்ரமணியன் said : Report Abuse
நான் ஏற்கனவே உங்கள் வெப்சைட்-ல் பதிவு பண்ணியுள்ளேன். எப்படியோ நான் அப்போது கொடுத்த பச்ச்வோர்து-ஐ சேமிக்கவில்லை. இப்போது மறுபடியும் நான் பதிவு பண்ண முயற்சி செய்த போது "நான் ஏற்கனவே பதிவு பண்ணியிருக்கிறேன்" என்கின்ற செய்தியை அளித்தீர்கள். நான், இப்போது, உங்களை கேட்டுக்கொள்வது என்னவென்றால் அப்போது கொடுத்த பாஸ்ஒர்ட-ஐ எனக்கு இ.மெயில் செய்யுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன். சிரமம் கொடுப்பதற்கு மன்னிக்கவும். இப்படிக்கு, "மண்டகொளத்தூர் சுப்ரமணியன்"
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.