LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

"குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்" - மணமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 3ம் தேதி நாகப்பட்டினத்துக்குப் பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தில் நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்தும்  புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு நாகை மாவட்டம் புத்தூரில், திமுக மாவட்டச் செயலாளரும், மீன் வளா்ச்சிக் கழகத் தலைவருமான ந.கௌதமன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திப் பேசினார். 


அப்போது பேசிய முதல்வர்,  "மத்திய அரசு மும்மொழிக் கொள்கை மூலம் இந்தியைத் திணிக்க முயற்சி செய்கிறது. அடுத்து, தொகுதி மறுசீரமைப்பு எனத் தமிழ்நாட்டின் உரிமையை மத்திய அரசு பறிக்கப் பார்க்கிறது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மூலம், நாட்டின் பிரதமரைத் தேர்வு செய்யும் உரிமையைத் தமிழ்நாட்டிற்குக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


இது குறித்து விவாதிக்கவே, வரும் மார்ச் 5ஆம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம். இதில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட  தமிழ்நாட்டில் உள்ள 40க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  அதில் பெரும்பாலான கட்சிகள் வருவதாகக் கூறியுள்ளனர். குறிப்பிட்ட சிலர் மட்டும் வர முடியாது எனக் கூறியுள்ளனர். இந்தத் தொகுதி மறுவரையறை என்பது திமுக பிரச்சனை அல்ல. இது தமிழ்நாட்டின் பிரச்சனை.


முன்பெல்லாம் திருமண விழாவுக்குச் சென்று அங்கு மணமக்களை வாழ்த்திவிட்டு குழந்தைகளைப் பொறுமையாகப் பெற்றுக்கொள்ளுங்கள் எனக் கூறுவோம். ஆனால், இப்போது அப்படிச் சொல்ல முடிவதில்லை. மக்கள் தொகை அடிப்படையிலேயே தொகுதி மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதனால், நான் அப்படிச் சொல்ல மாட்டேன். சீக்கிரம் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். தம்பதிகளுக்கு நான் வைக்கும் கோரிக்கை ஒன்று தான். உங்கள் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்" என்றார். 

 

 

by hemavathi   on 04 Mar 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கன்னியாகுமரியில் குறளங்காடி திறப்பு விழா கன்னியாகுமரியில் குறளங்காடி திறப்பு விழா
வலைத்தமிழ் ச.பார்த்தசாரதிக்கு  'தகைமைசால் திருக்குறள் பல்நோக்கு ஆளுமையர்' விருது! வலைத்தமிழ் ச.பார்த்தசாரதிக்கு 'தகைமைசால் திருக்குறள் பல்நோக்கு ஆளுமையர்' விருது!
ஜெய்சங்கர் சாலை ஆனது சென்னை கல்லூரி சாலை ஜெய்சங்கர் சாலை ஆனது சென்னை கல்லூரி சாலை
விவசாயத்துக்கு ட்ரோன்களைப் பயன்படுத்தும் தஞ்சாவூர் விவசாயிகள் விவசாயத்துக்கு ட்ரோன்களைப் பயன்படுத்தும் தஞ்சாவூர் விவசாயிகள்
ஸ்ரீ லஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமிகள் மகா சமாதியடைந்தார் ஸ்ரீ லஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமிகள் மகா சமாதியடைந்தார்
தாம்பரத்தில் ரூ.110 கோடியில் பிரமாண்ட மருத்துவமனை - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் தாம்பரத்தில் ரூ.110 கோடியில் பிரமாண்ட மருத்துவமனை - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஆகஸ்ட் 15 முதல்;சுங்கசாவடி ஆண்டு சந்தா  அமல் ஆகஸ்ட் 15 முதல்;சுங்கசாவடி ஆண்டு சந்தா அமல்
14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டிய தமிழ்நாடு 14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டிய தமிழ்நாடு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.