LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

எச்-1 பி விசாவை நான் எப்போதும் ஆதரிக்கிறேன் - அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்

 

எச்-1 பி விசாவை நான் எப்போதும் ஆதரிக்கிறேன் என அமெரிக்கா அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் 2016-ம் ஆண்டில், ட்ரம்ப் இந்தத் திட்டத்தைக் கடும் விமர்சனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ம் தேதி ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்க உள்ளார்.  இதனிடையே அவர் தனது ஆட்சியில் குடியேற்றம் தொடர்பாகக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதனால் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்1-பி விசாவுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.


குறிப்பாக, 2016-ம் ஆண்டில், ட்ரம்ப் இந்தத் திட்டத்தைக் கடும் விமர்சனம் தெரிவித்திருந்தார். பின்னர் கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதாரச் சவால்களை அடுத்து, கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டன என்பது கவனிக்கத்தக்கது.


இந்நிலையில், இது குறித்து ட்ரம்ப் கூறும்போது, “மிகவும் திறமையான தொழிலாளர்கள் நாட்டுக்குள் நுழைய உதவும் சிறப்பு விசா திட்டத்தை நான் ஆதரிக்கிறேன். நான் எப்பொழுதும் எச்1-பி விசாக்களை விரும்புகிறேன். நான் எப்போதும் விசாக்களுக்கு ஆதரவாக இருக்கிறேன். அதனால்தான் நாங்கள் அவற்றை வைத்திருக்கிறோம்.” என்றார்.


டிரம்ப்பின் ஆதரவாளரான எலான் மஸ்க் மற்றும் தொழிலதிபரும், முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான விவேக் ராமசாமிக்கும் இது குறித்து வார்த்தைப் போர் வெடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

by hemavathi   on 31 Dec 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அயலகத் தமிழர் நலனுக்கான திட்டங்களும் விளக்கங்களும்!  கூட்ட அறிக்கை(Minutes Of Meeting) அயலகத் தமிழர் நலனுக்கான திட்டங்களும் விளக்கங்களும்! கூட்ட அறிக்கை(Minutes Of Meeting)
இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது -  ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது - ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர்
ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின் ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்
வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ் வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ்
ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம் ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம்
இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம் இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம்
2025 இறுதிக்குள் ஒரு  மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம் 2025 இறுதிக்குள் ஒரு மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம்
அமெரிக்க நாட்டுக்கான தபால் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியது இந்தியா அமெரிக்க நாட்டுக்கான தபால் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியது இந்தியா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.