|
||||||||
ஐக்கிய அரபு அமீரகத்தின் விதிமுறை மாற்றம் : துபாய் செல்லும் இந்தியர்களுக்குச் சிக்கல் |
||||||||
விசா கொள்கையில் ஐக்கிய அரபு அமீரகம் கொண்டு வந்துள்ள மாற்றத்தால் தற்போது இந்தியர்களுக்கு விசா கிடைப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது. துபாய், சார்ஜா, அபுதாபி என ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் இந்தியர்களின் தெளிவாகத் தயார் செய்யப்பட்ட விசா விண்ணப்பம் கூட நிராகரிக்கப்படுவதால் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இந்தியர்கள் பலரும் சுற்றுலா செல்வது வழக்கம். இப்படி துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பிற பகுதிகளுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இதற்கு முன்பாக எளிதில் விசா கிடைத்தது. கிட்டத்தட்ட 100 இல் 99 சதவிகித விசாக்கள் ஏற்கப்பட்டு, அவர்களுக்கு விசா எளிதாகக் கிடைத்துவிடும். ஆனால் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் கொண்டு வந்துள்ள மாற்றத்தால் இந்தியர்களுக்கு விசா கிடைப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது.
இதற்கு ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் விசா கொள்கையில் கொண்டு வந்த மாற்றம்தான் காரணம். புதிய விதிகளின் படி சுற்றுலாப் பயணிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கப் போகும் ஹோட்டல் புக்கிங் விவரங்கள் மற்றும் ரிட்டர்ன் டிக்கெட் ஆகிய விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கொண்டு வரப்பட்டுள்ளது.உறவினர் வீடுகளில் தங்கத் திட்டமிடுபவர்கள், அதற்கான ஆவணத்தையும் பிறகு சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு முன்பாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விசா கேட்டு இந்தியர்கள் விண்ணப்பித்தால் 1-2 சதவீத விண்ணப்பம் மட்டுமே நிராகரிக்கப்பட்டது. ஆனால் தற்போது, 5-6 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாகப் பயண ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
|
||||||||
by on 10 Dec 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|