|
||||||||
வெளிநாட்டுப் பணக்காரர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்க தங்க அட்டை’ திட்டம் அறிமுகம் |
||||||||
அமெரிக்காவில் பணக்காரர்கள் நிரந்தரமாக வசிப்பதற்குத் தங்க அட்டை எனும் " கோல்டு கார்டு" திட்டத்தை அறிமுகம் செய்ய அதிபர் டொனால்டு ட்ரம்ப் முடிவு செய்துள்ளார். இந்த தங்க அட்டையின் விலை 5 மில்லியன் டாலராக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ.43 கோடி ரூபாய் ஆகும்.
"இபி-5” புலம்பெயர் முதலீட்டாளர் விசா திட்டம் மாற்றியமைக்கப்படுகிறது. அமெரிக்காவில் வேலைகளை உருவாக்கும் அல்லது முதலீடு செய்யும் வெளிநாட்டுப் பணக்கார முதலீட்டாளர்கள் தங்க அட்டை வசதியைப் பெறுவதன் மூலம் அவர்கள் அமெரிக்காவில் நிரந்தரக் குடியிருப்பாளர்களாக மாற அனுமதிக்கிறது.
தற்போது நாங்கள் கொண்டு வர உள்ள தங்க அட்டையின் விலை 5 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும். இந்தத் திட்டம் குறித்து இன்னும் அதிகமான தகவல்கள் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் வெளியாகும்.
இந்த அட்டை கிரீன் அட்டைகளுக்கு நிகரான சலுகைகளை வழங்கும். மேலும், இது அமெரிக்கக் குடியுரிமைக்கான பாதையாகவும் இருக்கும். மேலும், இந்த அட்டையை வாங்குவதன் மூலம் அதிகப் பணக்காரர்கள் அமெரிக்காவுக்கு எளிதான முறையில் வரமுடியும். இந்தப் பணத்தைக் கொண்டு நாட்டின் கடனை விரைவாக அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் ரஷ்யர்கள் தகுதி பெறுவார்களா என்ற கேள்வி செய்தியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனக்குத் தெரிந்த நல்ல பணக்காரர்கள் ரஷ்யாவிலும் உள்ளனர். அவர்களும் தங்க அட்டையைப் பெறுவது சாத்தியம்தான்..". என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
"இபி-5 திட்டம் முட்டாள்தனமானது. மோசடி நிறைந்தது. குறைந்த விலையில் கிரீன் கார்டை பெறுவதற்கான குறுக்கு வழியாக உள்ளது. எனவேதான் இந்த அபத்தமான இபி-5 திட்டத்தைக் கைவிட ட்ரம்ப் முடிவெடுத்துள்ளார். அதற்கு மாற்றாக அவர் கோல்டு கார்டை கொண்டுவந்துள்ளார்" என்று வர்த்தக அமைச்சர் ஹேவர் லுட்நிக் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
|
||||||||
by on 27 Feb 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|