LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

திருமணத்தை இனி இணையதளத்திலேயே பதிவு செய்யலாம்!

 

தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் செல்லாமல் திருமணத்தைப் பதிவு செய்யும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. 

தமிழகத்தில், பத்திரப்பதிவு அலுவலகங்களில் திருமணங்களைப் பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. அதற்காகத் தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம் 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் நடைபெறும் திருமணங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது, திருமணம் நடைபெறும் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே திருமணத்தைப் பதிவு செய்ய முடியும்.


பின்னர் 2020-ம் ஆண்டு இந்தச் சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் ஒன்று கொண்டு வந்தது. அதன்படி மணமகன் அல்லது மணமகள் வசிக்கும் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் கூட திருமணங்களைப் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. 


 திருமணப் பதிவுக்கு ரூ.300 கட்டணம் என்ற நிலையில் சில இடங்களில் ரூ.5,000 வரை கேட்பதாகப் புகார் எழுந்துள்ளது. நடைமுறைச் சிக்கல்களைக் களையத் திருமணப் பதிவு முறையை எளிதாக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.


இணையதளம் அல்லது கைப்பேசி வாயிலாகத் திருமணப் பதிவைச் செய்து கொள்ள விரைவில் வழிவகை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. முதற்கட்டமாகத் தமிழ்நாடு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்பவர்களுக்குப் பொருந்தும் எனவும், பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் சிறப்புத் திருமணங்கள் போன்றவற்றில் ஏற்கனவே உள்ள நடைமுறைகள் இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இவை செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

by   on 03 Jan 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருச்சி-சென்னை  புதிய விமானச் சேவை அறிமுகம் திருச்சி-சென்னை புதிய விமானச் சேவை அறிமுகம்
விருதுநகரில் வெகு சிறப்பாக நடந்த 2--ஆவது திருக்குறள் மாணவர் மாநாடு விருதுநகரில் வெகு சிறப்பாக நடந்த 2--ஆவது திருக்குறள் மாணவர் மாநாடு
அயலகத் தமிழர் நலத்துறையின் இணை இயக்குநர்  இரமேஷ் காலமானார் அயலகத் தமிழர் நலத்துறையின் இணை இயக்குநர் இரமேஷ் காலமானார்
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ. 6,626 கோடி ஒதுக்கீடு தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ. 6,626 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் புதிதாக 5 விமான நிலையங்கள்- மத்திய அரசு தகவல் தமிழகத்தில் புதிதாக 5 விமான நிலையங்கள்- மத்திய அரசு தகவல்
மதுரை பறையிசை கலைஞர் வேலு ஆசானுக்குப் பத்மஸ்ரீ விருது மதுரை பறையிசை கலைஞர் வேலு ஆசானுக்குப் பத்மஸ்ரீ விருது
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் - தவெக தலைவர் விஜய் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் - தவெக தலைவர் விஜய்
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராஜனுக்கு திருவுருவச் சிலை மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராஜனுக்கு திருவுருவச் சிலை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.