LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மகளிர் மட்டும் Print Friendly and PDF
- மற்றவை

சானிட்டரி நாப்கின் - பெண்கள் அறிய வேண்டிய உண்மைகள்

 

இன்றைக்கு அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களில் முதலாவதாக இருப்பது சானிட்டரி நாப்கின். வளர்ந்த நாடுகளில் கூட எந்த ஒரு சானிட்டரி நாப்கினும் பாதுகாப்பானது என்பதற்குச் சான்றுகள் இல்லை என்பது வருத்தத்திற்குரியது. 
1987-ல் சி பி ஏ மற்றும் சில பிரபலமான நிறுவனங்கள் தயாரிக்கும் சானிட்டரி நாப்கின்களை சோதனைக்கு உட்படுத்தினர். அதில் 11000-க்கும் மேல் நுண்ணுயிர்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அதாவது International Safety Standards நிர்ணயம் செய்ததைக் காட்டிலும் 10 மடங்கு அதிகமானது. உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காகவே மீள் சுழற்சி செய்யப்பட்ட காகிதங்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. ஓரு பெண் தான் வாழ்நாளில்
சராசரியாக 15000 சானிட்டரி நாப்கின்களை உபயோகிப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. 15000 பருத்தி மூலப்பொருளினால் செய்யப்பட்ட உற்பத்திப் பொருட்களை நாம் பயன்படுத்துகிறோம் என்றுதான் நாம் நினைத்துகொள்வோம். ஆனால் நம் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ ரசாயனங்கள் இதில்
இருப்பது நம்மிடத்தில் மறைக்கப்படும் ஒரு விஷயம். 
பெரும்பாலான நாப்கின்கள், வண்ணம் போக்குகின்ற ரசாயனங்களாலும், மீள்சுழற்சி செய்யப்பட்ட காகிதங்களாலும் தயாரிக்கப்படுகி ன்றன. இதில் டயாக்சின் என்ற ரசாயனம் கலக்கப்படுக்கிறது. இது மிகவும் சிறிதளவே கலக்கப்படுவதாகத் தயாரிப்பாளர்கள் கூறினாலும், இது கர்ப்பப்பையைப் பாதிக்கும் அளவிற்குத்
தீங்கானது என்று ஆய்வுகள் கூறுகின்றன. சானிட்டரி நாப்கினில் ஈரத்தை உறிஞ்சுவதற்காக Hxcdf கலக்கப்படுகிறது. இந்த ரசாயனங்கள் நோய்த் தடுப்பாற்றலையும், கருமுட்டை உற்பத்தித் திறனையும் குறைக்கக்கூடியவை. 
நாப்கின் வாங்குவதற்கு முன்பு: பொதுவாகவே சானிட்டரி நாப்கின்கள் அசுத்தமான இடங்களில் தான் வைக்கப்படுகின்றன. (கழிப்பறை சிங்க் அடியில்,
கழிப்பறை மேஜை மீது அல்லது பைக்குள், மற்ற பொருட்களின் நடுவில் குப்பை போல் வீசப்படுகின்றன) ஒவ்வொரு பாக்கெட்டும் முறையாக சீல் செய்யபடுவது அவசியமாகும். இன்றைக்கு மார்க்கெட்டில்  கிடைக்கும் பெரும்பாலான நாப்கின்கள் பிளாஸ்டிக் கவரில் பேக் செய்யபடுகின்றன. 
ஒருமுறை திறந்தவுடனேயே இவை தூய்மைக்கேட்டின ால் பாதிப்புக்குள்ளாகின்றன.  பெரும்பாலான நாப்கின் கவர்கள்ஒருமுறை திறந்தால் மீண்டும் சீல்
செய்ய முடியாத நிலையிலேயே உள்ளன. நன்றாக பேக் செய்யப்பட்ட நாப்கின் பாக்கெட்டுகளைத் தேர்ந்தெடுத்து வாங்குவது அவசியம். மார்க்கெட்டில் கிடைக்கும் பெரும்பாலான நாப்கின்கள் செயற்கையான மூலப்பொருட்களைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. இதில் உள்ள ரசாயனங்கள் உடல்நலப் 
பாதிப்புகளை விளைவிக்கக் கூடியவை. முதல் படுகை மிகவும் முக்கியமானதாகும். ஏனென்றால் அதுதான் தோலுடன் நேரடியாகத் தொடர்பில் இருப்பது. நாப்கினின் முதல் படுகை காட்டனால் செய்யப்படுவதே சிறந்ததாகும். 
பிளாஸ்டிக் அல்லது செயற்கையான மூலப்பொருட்களை கொண்டுள்ளனவற்றை அறவே தவிர்க்க வேண்டும். இதற்கு நாப்கின் பாக்கெட்டின் லேபிளை சரிபார்த்துக் கொள்ளுங்கள். சானிட்டரி நாப்கின் பாக்கெட்டில் அதன் மூலப்பொருட்களைக் குறிப்பிடுவதை FDA கட்டாயம் செய்யவில்லை. இருப்பினும் முதல்
படுகை காட்டனால் தயாரிக்கப்பட்டிருந்தால், அதுபற்றி கண்டிப்பாகத் தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டு இருப்பார்கள். இல்லையென்றால், அது அவ்வாறு செய்யவில்லை என்று நாம் எடுத்து கொள்ள வேண்டும்.
அடுத்த படுகை நம்முடைய உடல்நலத்திற்கும் வசதிக்கும் மிகவும் முக்கியமான விஷயமாகும். இதில் ஏற்படும் பிரச்சினைகளால் உண்டாகும் சூடும்,ஈரப்பதமும்,தேக்கமும் நுண்ணுயிர்க் கிருமிகளை வளரத் தூண்டும். இதனால்தான் மாதவிடாயின் போது தோலில் சொறியும் எரிச்சலும் ஏற்படுகிறது. 
இது பெண்களுக்கான நோய்களை விளைவிக்கும். பெரும்பாலான நுண்ணுயிரிகள் நேரடியாகக் காற்றோட்டமில்லாத சூழ்நிலையில் வாழக்கூடியவை.
இதனால் சானிட்டரி நாப்கின் காற்றோட்டமாக இருப்பது அவசியமாகும். 
இரண்டு மணிநேரத்திற்கு மேல் பயன்படுத்தினால் 107 நுண்ணுயிரிகள் வரை வளர்வதற்கு வாய்ப்புண்டு. நடுவில் இருக்கும் படுகைக்கு உறிஞ்சும் தன்மை அதிகமாக இருப்பது அவசியம். உறிஞ்சும் தன்மையிருந்தால் மட்டுமே, தொற்று மேலும் தோலில் பரவாமல் இருப்பதைத் தடுக்க முடியும் அல்லது மிகவும்
அசௌகரியமான உணர்வை ஏற்படுத்தும். நாப்கின் பயன்படுத்தும் போது நாம் செய்ய கூடிய தவறுகள் :
நாப்கின் மாற்றும்போது கைகளைக் கழுவாமல் இருப்பது: (Negligence of Hygienic process while Changing Napkins ) புதிய நாப்கினை பயன்படுத்துவதற் குக் கைகளை கழுவாமல் உபயோகிப்பது தவறான பழக்கம். உபயோகித்த நாப்கினை எடுத்துவிட்டுக் கை கழுவாமல் புதிய நாப்கினை பாக்கெட்டில் இருந்து எடுப்பது, நுண்ணுயிரிகளை மேலும் பரவச் செய்யும். பெரும்பாலான கழிவறைகள் இருட்டாகவும், ஈரமாகவும் இருப்பதால் நுண்ணுயிரிகள் எளிதாக நாப்கினில் தொற்றிக் கொள்ள வழிவகை செய்யும். 
2. காலாவதி தேதியைப் பார்க்காமல் வாங்குவது: (Without care about Expiry Date on Napkin Packets)
காலவதி தேதி கடந்து விட்டாலோ அல்லது காலாவதி தேதி பயன்படுத்தும் காலத்திற்கு நெருக்கமாக இருந்தாலோ, அதைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
உணவுப்பொருட்களில் இருப்பது போல் எல்லா நாப்கின் பாக்கெட்களிலும் காலாவதி தேதி இருப்பதில்லை. நாப்கின்கள் காட்டன் மூலம் தயாரிக்கப்படுவதால்,
காலாவதி தேதி அவசியம் இல்லை என்று தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். ஆனால் காலாவதி தேதி குறிப்பிட்டிருக ்கும் நாப்கினை வாங்கிப்
பயன்படுத்துவதே பாதுகாப்பானது. பொதுவாக சிறப்பு விற்பனையில் அல்லது இலவசமாகவோ,தள்ளு படி விலையில் விற்கப்படும் நாப்கின்கள், தரம் குறைந்த
மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகும். அவை கண்டிப்பாகச் சோதனைக்கு உட்படுத்தப்படாத நாப்கின்களாகும். அவற்றை வாங்குவதைத் தவிர்க்க
வேண்டும். சோதனை முயற்சி அடிப்படையில் பயன்படுத்துவது. புதிய தரவகைகள், புதிய பொருட்கள், புதிய முறைகள், புதிய மூலப்பொருட்கள்
என்று புதியதாக மார்க்கெட்டில் நாப்கின்கள் வந்து கொண்டே தான் இருக்கும். அவற்றி சிறந்தவற்றை, சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வையையே வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
3. வாசனைப் பொருட்கள் உள்ள நாப்கினை பயன்படுத்துவது: (Using Artificial Perfumed Napkins) வாசனைப் பொருட்கள் கலந்த நாப்கின்களைப்
பொதுவாக மருத்துவர்கள் ஊக்குவிப்பது இல்லை. இவை, உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. 
4.நீண்ட நேரம் நாப்கின் மாற்றாமல் இருப்பது ( Without Changing Napkins for longer Period) ஒவ்வொரு நாப்கினையும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்துவது, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருக்கும் பெண்களைக் காட்டிலும் ஆசியாவில் இருக்கும் பெண்களிடையே அதிகம். இது மாதவிடாய் சுழற்சியின் போது செய்யக்கூடிய மிகத் தவறான அணுகுமுறை. உடல் நலத்தைப் பணயம்  வைத்துப் பணத்தைச் சேமிப்பது ஆக்கபூர்வமான செயல் அல்ல. அதிகமாக உறிஞ்சக்கூடிய தன்மையுடைய நாப்கின் என்ற போதும் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றுவது அவசியமாகும். பெரும்பாலான நாப்கின் பாக்கெட் ஓரங்களில் ஈரப்பதம் உறிஞ்சக்கூடிய தன்மையை விளக்கும் அட்டவணை குறிப்பிடப்பட்டிருக்கும்.
அதற்கேற்றவாறு, பயன்படுத்துவது நல்லது. சில நிறுவனங்கள் இரவு நேரங்களில் பயன்படுத்துவதற்கென்றே, சில வகையான நாப்கின்களை தயாரிக்கின்றன.
அதாவது அவற்றை அதிக நேரம் பயன்படுத்தினாலும், பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தயார் செய்யபடுகிறது. மேலும் சில நிறுவனங்கள் தயாரிக்கும் நீளமான
நாப்கின்களைப் பயன்படுத்தினாலும் கறை ஏற்படாது. 
4.பயன்படுத்திய நாப்கின்களை அப்புறப்படுத்துவது: (Disposing the used Napkins into Trash)
நாப்கின்களைப் பயன்படுத்துவதைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பதைப் போல், அதை அப்புறபடுத்துவதைப் பற்றித் தெரிந்துகொள்வதும் மிக அவசியம். உபயோகப்படுத்திய நாப்கினை டாய்லெட் பிளஷ்ஷில் போடுவது மிகவும் தவறான ஒன்றாகும். இதற்கு காரணம் ஒன்று அறியாமை. மற்றொன்று வீட்டில் இருப்போர்,மற்றவர்கள், குறிப்பாக ஆண்கள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகப்  பெண்கள் இத்தவறைச் செய்கின்றனர். மாதவிடாய் என்பது பெண் உடலில்
ஏற்படும் இயற்கையான ஒரு வளர்சிதை மாற்றம் என்ற எண்ணத்தையும், விழிப்புணர்வையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். உபயோகித்த நாப்கினை பேப்பரில் சுற்றிக் குப்பைத் தொட்டியில் போடவும். மேலும் குப்பைத் தொட்டிகளை நீண்டகாலம் காலிசெய்யாமல் வைத்திருந்தால் கிருமிகள் தொற்றிகொள்ளும்.
பெண் பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு: (Awareness to our Girls) 
நாப்கின் என்பது நம் பாதுகாப்புக்கும், உடல்நலத்திற்கு தீங்கு வராமல் தடுப்பதற்கும், மாதவிடாய்க் காலங்களில் பயன்படுத்தியாக வேண்டிய அத்தியாவசியமான ஒன்று. இதை வாங்குவதற்கோ,பயன்படுத்துவதற்கோ எந்தத் தயக்கமும் வேண்டாம். காகிதத்தில் எழுதி கொடுப்பதோ அல்லது ஆண்கள் இல்லாத நேரங்களில்
வாங்குவதோ அல்லது சத்தமில்லாமல் கேட்டு வாங்குவதையோ தவிர்க்கப் பழகுங்கள். உங்களின் பழக்கம் தான், உங்கள் பிள்ளைகளுக்கும் வரும் என்பதை மறவாதீர்கள். எந்த கூச்சமும் இல்லாமல் நாப்கினை வாங்குவதற்கு கற்று கொடுங்கள். எத்தனை பாதுகாப்பாக இருந்தாலும் கறை ஏற்படுவது சில சமயங்களில்
தவிர்க்க முடியாது என்பதைப் பிள்ளைகளுக்குத்  தெளிவுபடுத்துங்கள். அது இயல்பான ஒன்றே. அதனால் இதை குறித்து எந்தவிதமான அவமான உணர்வும் கொள்ள வேண்டாம் என்று நம்பிக்கை ஏற்படுத்துங்கள். பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் அவர்களுக்குத் தேவையான நாப்கின்களை எடுத்து செல்லுமாறு பார்த்துக்
கொள்ளுங்கள். எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஆசிரியரிடம் கேட்டுக் கொண்டு நாப்கினை மாற்றிக் கொள்வதற்கு, அவர்களைப்  பழக்கப்படுத்துங்கள் 
நன்றி: ஆர்த்தி வேந்தன்

இன்றைக்கு அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களில் முதலாவதாக இருப்பது சானிட்டரி நாப்கின். வளர்ந்த நாடுகளில் கூட எந்த ஒரு சானிட்டரி நாப்கினும் பாதுகாப்பானது என்பதற்குச் சான்றுகள் இல்லை என்பது வருத்தத்திற்குரியது. 


1987-ல் சி பி ஏ மற்றும் சில பிரபலமான நிறுவனங்கள் தயாரிக்கும் சானிட்டரி நாப்கின்களை சோதனைக்கு உட்படுத்தினர். அதில் 11000-க்கும் மேல் நுண்ணுயிர்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அதாவது International Safety Standards நிர்ணயம் செய்ததைக் காட்டிலும் 10 மடங்கு அதிகமானது. உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காகவே மீள் சுழற்சி செய்யப்பட்ட காகிதங்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. ஓரு பெண் தான் வாழ்நாளில்சராசரியாக 15000 சானிட்டரி நாப்கின்களை உபயோகிப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. 15000 பருத்தி மூலப்பொருளினால் செய்யப்பட்ட உற்பத்திப் பொருட்களை நாம் பயன்படுத்துகிறோம் என்றுதான் நாம் நினைத்துகொள்வோம். ஆனால் நம் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ ரசாயனங்கள் இதில்இருப்பது நம்மிடத்தில் மறைக்கப்படும் ஒரு விஷயம். 


பெரும்பாலான நாப்கின்கள், வண்ணம் போக்குகின்ற ரசாயனங்களாலும், மீள்சுழற்சி செய்யப்பட்ட காகிதங்களாலும் தயாரிக்கப்படுகி ன்றன. இதில் டயாக்சின் என்ற ரசாயனம் கலக்கப்படுக்கிறது. இது மிகவும் சிறிதளவே கலக்கப்படுவதாகத் தயாரிப்பாளர்கள் கூறினாலும், இது கர்ப்பப்பையைப் பாதிக்கும் அளவிற்குத்தீங்கானது என்று ஆய்வுகள் கூறுகின்றன. சானிட்டரி நாப்கினில் ஈரத்தை உறிஞ்சுவதற்காக Hxcdf கலக்கப்படுகிறது. இந்த ரசாயனங்கள் நோய்த் தடுப்பாற்றலையும், கருமுட்டை உற்பத்தித் திறனையும் குறைக்கக்கூடியவை. 


நாப்கின் வாங்குவதற்கு முன்பு: பொதுவாகவே சானிட்டரி நாப்கின்கள் அசுத்தமான இடங்களில் தான் வைக்கப்படுகின்றன. (கழிப்பறை சிங்க் அடியில்,கழிப்பறை மேஜை மீது அல்லது பைக்குள், மற்ற பொருட்களின் நடுவில் குப்பை போல் வீசப்படுகின்றன) ஒவ்வொரு பாக்கெட்டும் முறையாக சீல் செய்யபடுவது அவசியமாகும். இன்றைக்கு மார்க்கெட்டில்  கிடைக்கும் பெரும்பாலான நாப்கின்கள் பிளாஸ்டிக் கவரில் பேக் செய்யபடுகின்றன. 


ஒருமுறை திறந்தவுடனேயே இவை தூய்மைக்கேட்டின ால் பாதிப்புக்குள்ளாகின்றன.  பெரும்பாலான நாப்கின் கவர்கள்ஒருமுறை திறந்தால் மீண்டும் சீல்செய்ய முடியாத நிலையிலேயே உள்ளன. நன்றாக பேக் செய்யப்பட்ட நாப்கின் பாக்கெட்டுகளைத் தேர்ந்தெடுத்து வாங்குவது அவசியம். மார்க்கெட்டில் கிடைக்கும் பெரும்பாலான நாப்கின்கள் செயற்கையான மூலப்பொருட்களைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. இதில் உள்ள ரசாயனங்கள் உடல்நலப் பாதிப்புகளை விளைவிக்கக் கூடியவை. முதல் படுகை மிகவும் முக்கியமானதாகும். ஏனென்றால் அதுதான் தோலுடன் நேரடியாகத் தொடர்பில் இருப்பது. நாப்கினின் முதல் படுகை காட்டனால் செய்யப்படுவதே சிறந்ததாகும். 


பிளாஸ்டிக் அல்லது செயற்கையான மூலப்பொருட்களை கொண்டுள்ளனவற்றை அறவே தவிர்க்க வேண்டும். இதற்கு நாப்கின் பாக்கெட்டின் லேபிளை சரிபார்த்துக் கொள்ளுங்கள். சானிட்டரி நாப்கின் பாக்கெட்டில் அதன் மூலப்பொருட்களைக் குறிப்பிடுவதை FDA கட்டாயம் செய்யவில்லை. இருப்பினும் முதல்படுகை காட்டனால் தயாரிக்கப்பட்டிருந்தால், அதுபற்றி கண்டிப்பாகத் தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டு இருப்பார்கள். இல்லையென்றால், அது அவ்வாறு செய்யவில்லை என்று நாம் எடுத்து கொள்ள வேண்டும்.


அடுத்த படுகை நம்முடைய உடல்நலத்திற்கும் வசதிக்கும் மிகவும் முக்கியமான விஷயமாகும். இதில் ஏற்படும் பிரச்சினைகளால் உண்டாகும் சூடும்,ஈரப்பதமும்,தேக்கமும் நுண்ணுயிர்க் கிருமிகளை வளரத் தூண்டும். இதனால்தான் மாதவிடாயின் போது தோலில் சொறியும் எரிச்சலும் ஏற்படுகிறது. இது பெண்களுக்கான நோய்களை விளைவிக்கும். பெரும்பாலான நுண்ணுயிரிகள் நேரடியாகக் காற்றோட்டமில்லாத சூழ்நிலையில் வாழக்கூடியவை.இதனால் சானிட்டரி நாப்கின் காற்றோட்டமாக இருப்பது அவசியமாகும். 
இரண்டு மணிநேரத்திற்கு மேல் பயன்படுத்தினால் 107 நுண்ணுயிரிகள் வரை வளர்வதற்கு வாய்ப்புண்டு. நடுவில் இருக்கும் படுகைக்கு உறிஞ்சும் தன்மை அதிகமாக இருப்பது அவசியம். உறிஞ்சும் தன்மையிருந்தால் மட்டுமே, தொற்று மேலும் தோலில் பரவாமல் இருப்பதைத் தடுக்க முடியும் அல்லது மிகவும்அசௌகரியமான உணர்வை ஏற்படுத்தும். நாப்கின் பயன்படுத்தும் போது நாம் செய்ய கூடிய தவறுகள் :


நாப்கின் மாற்றும்போது கைகளைக் கழுவாமல் இருப்பது: (Negligence of Hygienic process while Changing Napkins ) புதிய நாப்கினை பயன்படுத்துவதற் குக் கைகளை கழுவாமல் உபயோகிப்பது தவறான பழக்கம். உபயோகித்த நாப்கினை எடுத்துவிட்டுக் கை கழுவாமல் புதிய நாப்கினை பாக்கெட்டில் இருந்து எடுப்பது, நுண்ணுயிரிகளை மேலும் பரவச் செய்யும். பெரும்பாலான கழிவறைகள் இருட்டாகவும், ஈரமாகவும் இருப்பதால் நுண்ணுயிரிகள் எளிதாக நாப்கினில் தொற்றிக் கொள்ள வழிவகை செய்யும். 


2. காலாவதி தேதியைப் பார்க்காமல் வாங்குவது: (Without care about Expiry Date on Napkin Packets) காலவதி தேதி கடந்து விட்டாலோ அல்லது காலாவதி தேதி பயன்படுத்தும் காலத்திற்கு நெருக்கமாக இருந்தாலோ, அதைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.உணவுப்பொருட்களில் இருப்பது போல் எல்லா நாப்கின் பாக்கெட்களிலும் காலாவதி தேதி இருப்பதில்லை. நாப்கின்கள் காட்டன் மூலம் தயாரிக்கப்படுவதால்,காலாவதி தேதி அவசியம் இல்லை என்று தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். ஆனால் காலாவதி தேதி குறிப்பிட்டிருக ்கும் நாப்கினை வாங்கிப்பயன்படுத்துவதே பாதுகாப்பானது. பொதுவாக சிறப்பு விற்பனையில் அல்லது இலவசமாகவோ,தள்ளு படி விலையில் விற்கப்படும் நாப்கின்கள், தரம் குறைந்தமூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகும். அவை கண்டிப்பாகச் சோதனைக்கு உட்படுத்தப்படாத நாப்கின்களாகும். அவற்றை வாங்குவதைத் தவிர்க்கவேண்டும். சோதனை முயற்சி அடிப்படையில் பயன்படுத்துவது. புதிய தரவகைகள், புதிய பொருட்கள், புதிய முறைகள், புதிய மூலப்பொருட்கள்என்று புதியதாக மார்க்கெட்டில் நாப்கின்கள் வந்து கொண்டே தான் இருக்கும். அவற்றி சிறந்தவற்றை, சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வையையே வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.


3. வாசனைப் பொருட்கள் உள்ள நாப்கினை பயன்படுத்துவது:(Using Artificial Perfumed Napkins) வாசனைப் பொருட்கள் கலந்த நாப்கின்களைப்பொதுவாக மருத்துவர்கள் ஊக்குவிப்பது இல்லை. இவை, உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. 


4.நீண்ட நேரம் நாப்கின் மாற்றாமல் இருப்பது ( Without Changing Napkins for longer Period)  ஒவ்வொரு நாப்கினையும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்துவது, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருக்கும் பெண்களைக் காட்டிலும் ஆசியாவில் இருக்கும் பெண்களிடையே அதிகம். இது மாதவிடாய் சுழற்சியின் போது செய்யக்கூடிய மிகத் தவறான அணுகுமுறை. உடல் நலத்தைப் பணயம்  வைத்துப் பணத்தைச் சேமிப்பது ஆக்கபூர்வமான செயல் அல்ல. அதிகமாக உறிஞ்சக்கூடிய தன்மையுடைய நாப்கின் என்ற போதும் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றுவது அவசியமாகும். பெரும்பாலான நாப்கின் பாக்கெட் ஓரங்களில் ஈரப்பதம் உறிஞ்சக்கூடிய தன்மையை விளக்கும் அட்டவணை குறிப்பிடப்பட்டிருக்கும்.அதற்கேற்றவாறு, பயன்படுத்துவது நல்லது. சில நிறுவனங்கள் இரவு நேரங்களில் பயன்படுத்துவதற்கென்றே, சில வகையான நாப்கின்களை தயாரிக்கின்றன.அதாவது அவற்றை அதிக நேரம் பயன்படுத்தினாலும், பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தயார் செய்யபடுகிறது. மேலும் சில நிறுவனங்கள் தயாரிக்கும் நீளமானநாப்கின்களைப் பயன்படுத்தினாலும் கறை ஏற்படாது. 


5.பயன்படுத்திய நாப்கின்களை அப்புறப்படுத்துவது: (Disposing the used Napkins into Trash) நாப்கின்களைப் பயன்படுத்துவதைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பதைப் போல், அதை அப்புறபடுத்துவதைப் பற்றித் தெரிந்துகொள்வதும் மிக அவசியம். உபயோகப்படுத்திய நாப்கினை டாய்லெட் பிளஷ்ஷில் போடுவது மிகவும் தவறான ஒன்றாகும். இதற்கு காரணம் ஒன்று அறியாமை. மற்றொன்று வீட்டில் இருப்போர்,மற்றவர்கள், குறிப்பாக ஆண்கள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகப்  பெண்கள் இத்தவறைச் செய்கின்றனர். மாதவிடாய் என்பது பெண் உடலில்ஏற்படும் இயற்கையான ஒரு வளர்சிதை மாற்றம் என்ற எண்ணத்தையும், விழிப்புணர்வையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். உபயோகித்த நாப்கினை பேப்பரில் சுற்றிக் குப்பைத் தொட்டியில் போடவும். மேலும் குப்பைத் தொட்டிகளை நீண்டகாலம் காலிசெய்யாமல் வைத்திருந்தால் கிருமிகள் தொற்றிகொள்ளும்.


பெண் பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு: (Awareness to our Girls) நாப்கின் என்பது நம் பாதுகாப்புக்கும், உடல்நலத்திற்கு தீங்கு வராமல் தடுப்பதற்கும், மாதவிடாய்க் காலங்களில் பயன்படுத்தியாக வேண்டிய அத்தியாவசியமான ஒன்று. இதை வாங்குவதற்கோ,பயன்படுத்துவதற்கோ எந்தத் தயக்கமும் வேண்டாம். காகிதத்தில் எழுதி கொடுப்பதோ அல்லது ஆண்கள் இல்லாத நேரங்களில்வாங்குவதோ அல்லது சத்தமில்லாமல் கேட்டு வாங்குவதையோ தவிர்க்கப் பழகுங்கள். உங்களின் பழக்கம் தான், உங்கள் பிள்ளைகளுக்கும் வரும் என்பதை மறவாதீர்கள். எந்த கூச்சமும் இல்லாமல் நாப்கினை வாங்குவதற்கு கற்று கொடுங்கள். எத்தனை பாதுகாப்பாக இருந்தாலும் கறை ஏற்படுவது சில சமயங்களில்தவிர்க்க முடியாது என்பதைப் பிள்ளைகளுக்குத்  தெளிவுபடுத்துங்கள். அது இயல்பான ஒன்றே. அதனால் இதை குறித்து எந்தவிதமான அவமான உணர்வும் கொள்ள வேண்டாம் என்று நம்பிக்கை ஏற்படுத்துங்கள். பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் அவர்களுக்குத் தேவையான நாப்கின்களை எடுத்து செல்லுமாறு பார்த்துக்கொள்ளுங்கள். எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஆசிரியரிடம் கேட்டுக் கொண்டு நாப்கினை மாற்றிக் கொள்வதற்கு, அவர்களைப்  பழக்கப்படுத்துங்கள் 


நன்றி: ஆர்த்தி வேந்தன்

by Swathi   on 25 Mar 2014  2 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு ஏன் செய்கிறார்கள் தெரியுமா..? கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு ஏன் செய்கிறார்கள் தெரியுமா..?
கர்பிணி பெண்கள் உட்கொள்ளத்தக்க சிறந்த ஆகாரங்கள் !! கர்பிணி பெண்கள் உட்கொள்ளத்தக்க சிறந்த ஆகாரங்கள் !!
கர்ப்பப்பை தன்னிலையடைய உதவும் ஓமக்களி !! கர்ப்பப்பை தன்னிலையடைய உதவும் ஓமக்களி !!
குழந்தையின்மை, மாதவிடாய் கோளாறுகள் - ஹீலர் பாஸ்கர் குழந்தையின்மை, மாதவிடாய் கோளாறுகள் - ஹீலர் பாஸ்கர்
இயற்கையான முறையில் குடும்ப கட்டுப்பாடு எவ்வாறு செய்ய வேண்டும்? ஹீலர் பாஸ்கர் இயற்கையான முறையில் குடும்ப கட்டுப்பாடு எவ்வாறு செய்ய வேண்டும்? ஹீலர் பாஸ்கர்
தாய் பால் சுரப்பதில்லை என்ன செய்ய வேண்டும்?  ஹீலர் பாஸ்கர் தாய் பால் சுரப்பதில்லை என்ன செய்ய வேண்டும்? ஹீலர் பாஸ்கர்
கர்ப்பிணிகளின் கனிவான கவனத்திற்கு... கர்ப்பிணிகளின் கனிவான கவனத்திற்கு...
மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும் ஐந்து ஆரோக்கியமான உணவுகள் !! மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும் ஐந்து ஆரோக்கியமான உணவுகள் !!
கருத்துகள்
29-Jun-2018 10:37:29 FATHIMA said : Report Abuse
மிகவும் பயனுள்ள கருத்துக்கள் குறிப்புகள் நன்றி
 
01-Mar-2017 10:32:27 mahalakshmi said : Report Abuse
என் மகன் வயது 11 அவன் படிப்பில் கவனம், ஆர்வம் குறைவாக உள்ளது.அதிகமாக டிவி பார்க்கிறான் .கோவம் அதிகம் வருகிறது ,அவனிடம் எவ்வாறு படிப்பில் கவனத் தையும் ,ஆர்வத்ததையும் , கொண்டு வருவது ,எவ்வாறு அவனிடம் அணுகுவது ,பெ ற்ரோரான நாங்கள் அவனிடம் செ ய்ய வேன்டியது என்ன ?
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.