தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக, தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியனை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1958-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி பிறந்த வி.ராமசுப்பிரமணியன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாகப் பதவி வகித்தார். அதன்பிறகு தெலங்கானா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்தார். அங்கிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட வி. ராமசுப்பிரமணியன், கடந்த ஆண்டு ஜூனில் பணி ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியனை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இவர் பல்வேறு வழக்குகளை விசாரித்து அதிரடி தீர்ப்புகள் வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
|