LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

செய்திச்சுருக்கம் (அக்டோபர் மாதம், 2019)

செய்திச்சுருக்கம் (அக்டோபர் மாதம், 2019) 

தொகுப்பு: நீச்சல்காரன்

  • 2019 அமைதிக்கான நோபல் பரிசை எத்தியோப்பியப் பிரதமர் அபிய் அகமதும், வேதியியலுக்கான பரிசை ஜான் பி. குடெனாப், ஸ்டான்லி விட்டிங்காம், அகிரா யோஷினா ஆகிய மூவரும், இயற்பியலுக்கான பரிசை ஜேம்ஸ் பீப்லெஸ், மிச்செல் மேயார், டிடியர் குயல்ஸ் ஆகிய மூவரும், மருத்துவத்திற்கான பரிசை வில்லியம் கேலின், பீட்டர் இராட்கிளிஃபு, கிரெகு செமென்சா ஆகிய மூவரும், பொருளாதாரத்திற்கான பரிசை அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டப்லோ, மைக்கேல் கிரமர் ஆகிய மூவரும்,  இலக்கியத்துக்கான பரிசை பீட்டர் ஹேண்ட்கேவும் பெற்றுள்ளனர்
  • இந்தியாவிலேயே முதல்முறையாக கிண்டி பூங்காவில் புனை மெய்யாக்கத் தொழில்நுட்பத்தில் திரையரங்க அமைக்க, பணிகள் நடைபெற்று வருகின்றன
  • இயக்குநர் மணிரத்னம், வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா, அனுராக் காஷ்யப், நடிகை ரேவதி  உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக புகாரை நிராகரிக்க பீகார் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
  • அக்டோபர் முதல் வாரம் மலேசியாவில் உள்ள கேடாக் நகரில் ‘உலக சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டி’ நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், மலேசியா உட்பட 7 நாடுகளைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அதில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கீர்த்தனா இரட்டை வாள்வீச்சு மற்றும் குழு கம்பம் வீச்சுப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார்
  • International Astronomical Union’s Minor Planet மையமானது, சனியைச் சுற்றி வரும் 20 புதிய துணைக்கோள்களை உறுதிப்படுத்தியது. இதனால் மொத்தம் 82 துணைக்கோளுடன் நமது சூரிய குடும்பத்தில் அதிக துணைக்கோளைக் கொண்ட கிரகமாக சனி பெயர்பெற்றுள்ளது.
  • அக்டோபர் 11 ஆம் நாள் பிரபல சாக்சபோன் இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார்
  • இந்தியாவில் 150 ரயில்கள் மற்றும் 50 ரயில் நிலையங்களை விரைவில் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சோதனை முயற்சியாக  லக்னோ- டெல்லி இடையே முதல் தனியார் ரயில் சேவை தொடங்கப்பட்டது
  • இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களுள் ஒன்றான ஹாட்ஸ்டார் டிஸ்னியிடம் சென்றதால் தற்போது சர்வதேச அந்தஸ்து பெற்றுள்ளது.
  • ஃபோர்ப்ஸ் பணக்கார இந்தியர்கள் பட்டியல்: 12வது ஆண்டாக முதல் இடத்தில் முகேஷ் அம்பானி உள்ளார்.
  • சக மாணவிகளுக்கு முன்பு வகுப்பு ஆசிரியை திட்டியதால் திருச்சியைச் சேர்ந்த ஏஞ்சலின் லெமோ தந்தையின் கண் முன்னே மாடியில் இருந்து குதித்த தற்கொலை செய்துகொண்டார்
  • கீழடியில் ஆறாம் கட்ட ஆய்வு தொடங்கவுள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார். கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை ஆகிய நான்கு பகுதிகளில் அகழாய்வுப் பணிகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
  • ஜப்பானில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான ஹகிபிஸ் புயல் தாக்கி கடுமையான சேதங்களை விளைவித்துள்ளது. இந்நிலையில், புயலின் பாதிப்பில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களும், மீட்புதவியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
  • ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் நமக்கல் ஆகிய  இடங்களில் புது மருத்துவக் கல்லூரிகள் அமைக்க இந்திய மருத்துவ கவுன்சிலின் தொழில்நுட்பக்குழு ஒப்புதல் அளித்துள்ளது
  • தேனி மாவட்டம் மாரியம்மன் கோவில்பட்டியில் ஈஸ்டர்ன் மசாலா நிறுவனத்துக்குச் சொந்தமான சேமிப்புக் கிடங்கில் தீவிபத்து
  • பி.சி.சி.ஐ தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி பொறுப்பேற்றுள்ளார்
  • ‘உங்கள் மருமகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்றுள்ளீர்கள்’ – சுபஸ்ரீ விபத்திற்குக் காரணமான பேனர் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் கண்டனம்
  • இந்திய தொழிலதிபர்களில் நன்கொடை வழங்குவதில் 2018-ம் ஆண்டு ஷிவ் நாடார் முதலிடம் பிடித்துள்ளார். இவரின் ஹெச்.சி.எல் நிறுவனம் ரூ.826 கோடி நன்கொடை வழங்கியுள்ளது.
  • டாக்டர்.எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
  • மனித உரிமை ஆர்வலர் பர்வீனா அஹாங்கெர், பாலின சமத்துவ நிபுணர் சுபலட்சுமி நந்தி, மருத்துவர் பிரகதி சிங், யோகா நிபுணர் நட்டாஷா நோயல், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் வந்தனா சிவா, விண்வெளி தொழில்முனைவர் சுஷ்மிதா மொஹந்தி, கவிஞர் ஆரண்யா ஜோஹர் ஆகிய ஏழு இந்தியர்கள் இந்த ஆண்டு பிபிசியின் 100 பெண்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
  • மறுசுழற்சி செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து கழிவு நெகிழிப் பொருட்களை இறக்குமதி செய்ய இந்திய அரசு தடை விதித்திருக்கிறது.
  • கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்குப் புதிய துணை வேந்தராக பி. காளிராஜை ஆளுநர் நியமனம் செய்துள்ளார்
  • அமெரிக்காவின் ஹெச்1 பி விசா குறித்த நடைமுறையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட சீர்திருத்தங்களுக்கு, அமெரிக்காவின் முன்னணி கல்வி நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளன.
  • சேலம் மாநகராட்சி சார்பில் ஆறு இடங்களில் இலவச வை ஃபை சேவையை  மாநகராட்சி ஆணையாளர் தொடங்கிவைத்தார். அரசு இணையதள சேவைகளைப் பார்க்க 24 மணிநேரமும், சமூக வலைதளங்களை ஒரு மணி நேரமும் பயன்படுத்திக் கொள்ள வசதி.
  • மெக்ஸிகோ வழியாக அமெரிக்கா நுழைய முயன்ற 311 இந்தியர்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்
  • இந்தியாவின் மிக முக்கிய கடல் வாழ் பல்லுயிர் பகுதியான மன்னார் வளைகுடாவில் 62 புதியவகை உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஏற்கனவே 4,223 கடல்வாழ் உயிரினங்கள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்தக் கண்டுபிடிப்பு கூடுதல் கவனத்தைப் பெறுகிறது.
  • இலங்கை ஊவா மாகாணத்தில் சிங்களப் பெயர்களில் காணப்பட்ட, 140 தமிழ் மொழி பாடசாலைகளின் பெயர்கள் தமிழ் மொழியில் மாற்றப்பட்டுள்ளன.
  • தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் திருநங்கையின் பெயரை பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.
  • இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த தொழிலதிபர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இனி அனுமதிச் சீட்டில்லாமல் பிரேசில் நாட்டுக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கே இந்தச் சலுகை ஏற்கனவே வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
  • நாங்குநேரி, விக்கிரவாண்டி, காமராஜ் நகர் தொகுதிகளில் அக்டோபர் 21 சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்று நாராயணன்(அதிமுக) நாங்குநேரியிலும், முத்தமிழ்ச் செல்வன்(அதிமுக) விக்கிரவாண்டியிலும், ஜான்குமார்(காங்) காமராஜ் நகரிலும் வெற்றிபெற்றனர்.
  • திருச்சி மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டு வயது சிறுவன் சுஜித் வில்சனை நான்கு நாட்களாக மீட்கப் போராடியும் பலனின்றி பலியானான். தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்திய நிகழ்விற்குப் பலர் இரங்கல் தெரிவித்தனர்
  • அக்டோபர் 25 அன்று நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த மூத்த பத்திரிகையாளர் திருநாவுக்கரசு மறைவு
  • அக்டோபர் 26 அன்று பத்மஸ்ரீ விருது பெற்ற யோகா பாட்டி நானம்மாள் காலமானார்

 

 

 

 

 

 

by Swathi   on 06 Nov 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.