|
||||||||
சிங்கப்பூர் தேர்தலில் மக்கள் செயல் கட்சி 14வது முறையாக வெற்றி |
||||||||
சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில், ஆளும் பி.ஏ.பி., எனப்படும் மக்கள் செயல் கட்சி, தொடர்ந்து 14வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சியின் லாரன்ஸ் வாங் மீண்டும் பிரதமராகிறார்.
சிங்கப்பூரில் நாடாளுமன்றத் தேர்தல் சமீபத்தில் நடந்தது. நேற்று இதன் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இந்தத் தேர்தலில் மொத்தமுள்ள 97 இடங்களில், ஆளும் பி.ஏ.பி., 87ல் வென்றது. கடந்த 2020 தேர்தலில், 61.2 சதவீத ஓட்டுகள் பெற்றிருந்த நிலையில், 65.6 சதவீத ஓட்டுகளைத் தற்போது பி.ஏ.பி., பெற்றுள்ளது. பிரதமர் லாரன்ஸ் வாங், கட்சிக்கு இமாலய வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார்.
கடந்த, 1965ல் நாடு சுதந்திரம் பெற்ற பின் நடந்துள்ள, 14 தேர்தல்களிலும், பி.ஏ.பி., கட்சியே வென்று தொடர்ந்து ஆட்சியைப் பிடித்துள்ளது.
தொடர்ந்து, 20 ஆண்டுகள் பிரதமராக இருந்த லீ ஹசைன் லாங்க், கடந்தாண்டு மே மாதம் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து, 52 வயதான வாங் பிரதமரானார். தற்போது ஆளுங்கட்சி வெற்றி பெற்றதன் வாயிலாக, மீண்டும் அவர் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, தன், 10 தொகுதிகளைத் தக்க வைத்துள்ளது.
|
||||||||
| by hemavathi on 05 May 2025 0 Comments | ||||||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|