கடின உழைப்பால் அமெரிக்க அதிபரான ஜோபைடன்
அமெரிக்க அதிபராகத் தனது 78வது வயதில் தேர்வு பெற்ற ஜோபைடன் அவர்கள் வாழ்க்கை பற்றி கேள்விப்பட்டால் ஆச்சரியமாக இருக்கிறது. ஜோபைடன் அவர்கள் கல்வியில் ஆரம்பநிலையில் பல சறுக்கல்கள் மற்றும் தோல்விகளைக் கண்டிருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு மனைவி, மகன், மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருந்தார். அவ்வாறு வாழ்ந்துக் கொண்டிருக்கும் போது அன்பு மனைவியும், பாச மகளும் சாலை விபத்தில் உயிரிழந்தனர். மகனோ புற்று நோயால் மரணமடைந்தார்.
ஒபாமா குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் இரு முறை துணை அதிபராக இருந்து அடுத்த முறை அதிபராக ஜோபைடனுக்கு அதிக வாய்ப்பு இருந்த காலத்தில் கடுமையான வாத நோயால் தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார்.
ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் சோதனைகள் வரும். ஆனால் இவருக்கோ சோதனைகளுக்கிடையே வாழ்க்கை அமைந்தது. இத்தனை சோதனைகளையும் தாண்டி, நெருப்பாற்றில் நீந்தி 78 வயதில் ஒரு மனிதன் மீண்டும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபராக வெற்றி பெறுகிறார் என்றால், இவருடைய விடாமுயற்சியும், மனவலிமையும், கடுமையான உழைப்பும் நிச்சயம் பாராட்டத்தக்கதே.
|