LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- மற்றவை

Selections of Archina in Tamil used in Hindu Temples

தமிழ் அர்ச்சனைகள்

அருள்மிகு விநாயகர் போற்றி

 

 

 

 


திருச்சிற்றம்பலம்

நட்சத்திரம்..................... நாள்சேர்
பெயர்.............................பெயர்க்காக

செய்யும் இவ்வருச்சனை சேர்ந்த துதியை
ஐயனே ஏற்று அருள்க ! அருள்கவே !!

ஓம் அத்தி முகனே போற்றி
" அரியின் மருகா போற்றி
" அருளாம் ஆழி போற்றி
" அறுமுகன் துணைவா போற்றி
" இடைமுடை வயிற்றோய் போற்றி
" இண்டைச் சடையோய் போற்றி
" உத்தமக் களிறே போற்றி
" உமைதிரு மகனே போற்றி
" உயிர்க்குயிராய் இருப்பாய் போற்றி
" எண்குணச் செல்வா போற்றி 10

ஓம் எண்ணிய ஈவாய் போற்றி
" எமையாள் பவனே போற்றி
" எய்ப்பில் வைப்பே போற்றி
" ஏழைபங் காளா போற்றி
" ஐங்கர அமுதே போற்றி
" ஐந்தொழில் புரிவோய் போற்றி
" ஒப்பிலா மணியே போற்றி
" ஒருகைக் கற்பகமே போற்றி
" ஔ¢நிறை வௌ¢யே போற்றி
" ஔ¢ர்முக இறைவா போற்றி 20

ஓம் ஒற்றை மருப்பா போற்றி
" ஓமேனும் உருவே போற்றி
" ஓங்காரப் பொருளே போற்றி
" ஓதிய மறையே போற்றி
" அ·காப் பொருளே போற்றி
" கண்ணுள் மணியே போற்றி
" கருணையங் கடலே போற்றி
" கவளமா களியே போற்றி
" கழியவரு பொருளே போற்றி 30

ஓம் கற்பகக் களிறே போற்றி
" காராணப் பொருளே போற்றி
" கீதக்கிண் கிணியாய் போற்றி
" குடவயிற்று வரதா போற்றி
" குணக் குன்றே போற்றி
" கைம்மா முகனே போற்றி
" கௌவைத் துணையே போற்றி
" சக்தி தலைப்பிள்ளை போற்றி
" சாய்மறைச் செவியாய் போற்றி
" சித்தி விநாயகர் போற்றி 40

ஓம் சிந்தா மணியே போற்றி
" சிவஞானச் செல்வா போற்றி
" சிவானந்த ஔ¢யே போற்றி
" சுருதி விளக்கே போற்றி
" செல்வக் கணேசா போற்றி
" செழுஞ் சுடரே போற்றி
" சைவக் குருவே போற்றி
" சொல்லும் பொருளே போற்றி
" ஞானக் குன்றே போற்றி
" தண்டைக் காலாய் போற்றி 50

ஓம் தத்துவப் பொருளே போற்றி
" தமிழ்நுகர் செவியாய் போற்றி
" தாமரைக் கரத்தாய் போற்றி
" தாழ்தடக் கையனே போற்றி
" தீங்குதீர்ப் பவனே போற்றி
" தெய்வசிகா மணியே போற்றி
" தொப்பை யப்பா போற்றி
" தொளைபடு கரமலை போற்றி
" நந்தா மணியே போற்றி
" நந்தி மகனே போற்றி 60

ஓம் நம்பும் துணையே போற்றி
" நான்மறை விநாயகா போற்றி
" நீறணி பவனே போற்றி
" நுகருமா ரமுதே போற்றி
" நூறாப் பெயரோய் போற்றி
" நெற்றிக் கண்ணாய் போற்றி
" நொந்தவர்க் காவாய் போற்றி
" பவளக் குன்றே போற்றி
" பாரதம் தீட்டியோய் போற்றி
" பிணிக்கு மருந்தே போற்றி 70

 

ஓம் பிரணவ ஔ¢யே போற்றி
" புகர்முக வேழா போற்றி
" பூங்கமலப் பாதனே போற்றி
" பூமகள் மருகா போற்றி
" பெற்றோர் மகிழ்வே போற்றி
" பேரானந்த நிறைவே போற்றி
" பொள்ளா மணியே போற்றி
" பொன்றாக் குன்றே போற்றி
" மகா கணபதி போற்றி
" மங்கள மூர்த்தி போற்றி 80

ஓம் மணி விளக்கே போற்றி
" மததாரைக் கடவுளே போற்றி
" மதியளிப் பவனே போற்றி
" மதோற் கடனே போற்றி
" மழஇளம் கன்றே போற்றி
" மறை முதலெ போற்றி
" மாங்கனி பெற்றாய் போற்றி
" மாதவக் குன்றே போற்றி
" முக்கட் கணபதி போற்றி
" முதல்வரு பொருளே போற்றி 90

ஓம் மும்மத வாரியே போற்றி
" மூல முதல்வா போற்றி
" மூவரின் முதலாய் போற்றி
" மூவேறு உருவே போற்றி
" மேலாம் பதமே போற்றி
" மொழிவார்க் கருளே போற்றி
" மோதகச் செங் கையனே போற்றி
" மௌலி தரித்தோய் போற்றி
" யானைதிறை கொண்டாய் போற்றி
" வல்லபை கணவா போற்றி 100

ஓம் விக்கின விநாயகா போற்றி
" வித்தைக் கிறைவா போற்றி
" வெண்தந் தத்தவா போற்றி
" வேட்கை தணிவிப்பாய் போற்றி
" வேத கணபதி போற்றி
" வேதச் சுடரே போற்றி
" வினைவேர் அறுப்பாய் போற்றி
" விநாயகா போற்றி போற்றி 108

 

 

அருள்மிகு முருகப் பெருமான் போற்றி


திருச்சிற்றம்பலம்

(நட்சத்திரம்)...................நாள்சேர்
(பெயர்) ..........................பெயர்க்காக

செய்யும் இவ்வருச்சனை சேர்ந்த துதியை
ஐயனே ஏற்று அருள்க ! அருள்கவே !!

ஓம் அடியவர்க் கஞ்சல் அளிப்பாய் போற்றி
" அருணகிரிக்கு அருள் அப்பா போற்றி
" அருளொளிப் பிழம்பாம் அன்பே போற்றி
" அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
" அறமுதல் நான்கும் அருள்வாய் போற்றி
" அறிவுக்கு அறிவாய் அமர்வாய் போற்றி
" ஆசைத் தளையை அறுப்பாய் போற்றி
" ஆடும் பரிவேல் அரசே போற்றி
" ஆண்டியின் வேடம் பூண்டாய் போற்றி 10

ஓம் ஆதியும் அந்தமும் இல்லாய் போற்றி
" ஆரா அமுத வாரியே போற்றி
" ஆறு சமயமும் ஆனாய் போற்றி
" ஆறு முகத்தெம் அப்பா போற்றி
" ஆவினன் குடிவாழ் அமுதே போற்றி
" இடர்களைந் தின்பம் அருள்வாய் போற்றி
" இம்மையில் மறுவை ஈவாய் போற்றி
" இருநிலங் கோயிலா ஏற்றாய் போற்றி
" இன்பே உருவாம் எந்தாய் போற்றி
" ஈர்த்தெனை ஆண்ட இறைவா போற்றி 20

ஓம் உலகா இன்பம் தருவாய் போற்றி
" உள்குவார் உள்ளத்து உணர்வே போற்றி
" உள்ளங் கவரும் கள்வா போற்றி
" ஊனம் எல்லாம் ஒழிப்பாய் போற்றி
" எண்ணில் நாமம் ஏற்றாய் போற்றி
" எய்ப்பினில் வைப்பாம் எந்தாய் போற்றி
" எல்லா உயிர்க்கும் நல்லாய் போற்றி
" ஏழு பிறப்பும் எனை ஆள்வாய் போற்றி
" எந் நாட் டவர்க்கும் இறைவா போற்றி 30

ஓம் ஏரகத் துறையும் எந்தாய் போற்றி
" ஏழை பங்காளா ஏற்பாய் போற்றி
" ஐம்புலன் அடக்கம் அருள்வாய் போற்றி
" ஒப்பிலா மணியே ஔ¢யே போற்றி
" ஒன்றும் பலவும் ஆனாய் போற்றி
" ஓங்கா ரத்துள் ஔ¢யே போற்றி
" ஓரெழுத்து ஆறெழுத் தானாய் போற்றி
" கண்ணிற் கருமா மணியே போற்றி
" கதிர்காமத்து உறை கந்தா போற்றி
" கருணையங் கடலே காவாய் போற்றி 40

ஓம் கருவினில் உயிரைக் கலந்தாய் போற்றி
" கலங்கரை விளக்காய்க் காப்பாய் போற்றி
" கலியுக வரதக் கடவுள் போற்றி
" கல்நார் உரித்த என் மன்னா போற்றி
" கள்ளப் புலனைக் களைவாய் போற்றி
" கற்பனைகடந்த கதிரே போற்றி
" கற்றவர் விழுங்குங் கனியே போற்றி
" காக்காக் கடவிய காவல போற்றி
" காவில உடையணி கடவுள் போற்றி
" குகைவாழ் குகனே குமரா போற்றி 50

ஓம் குருவாய் வருவாய் அருள்வாய் போற்றி
" குறைவிலா நிறைவாம் குணமே போற்றி
" குன்றுதோ றாடும் குழந்தாய் போற்றி
" கைவேல் கொண்ட காவல் போற்றி
" சமரா புரிவாழ் சாமியே போற்றி
" சிவகுரு நாதச் செல்வா போற்றி
" சின்மயா னந்த சிவமே போற்றி
" சுத்தசன் மார்க்கத் துணையே போற்றி
" சும்மா இருஎனச் சொன்னாய் போற்றி
" செந்தமிழ்ப் பாட்டின் சிறப்பே போற்றி 60

ஓம் செந்திலில் வாழும் சேயே போற்றி
" சேவலங் கொடிச் செம்மலே போற்றி
" ஞானதண் டாயுத பாணீ போற்றி
" தணிகை மலையுறை தலைவா போற்றி
" தண்தமிழ்ப் புலமை தருவாய் போற்றி
" திசைமுகம் விளக்கும் தேவே போற்றி
" திருப்பரங் குன்றத் திருவே போற்றி
" திருவடி ஞானம் சேர்ப்பாய் போற்றி
" தீரா நோய்கள் தீர்ப்பாய் போற்றி 70

ஓம் துதிப்பார் துன்பம் துடைப்பாய் போற்றி
" துறந்தோர் உள்ளத் தூமணி போற்றி
" தூண்டா விளக்கின் சுடரே போற்றி
" தெய்வமா மயிலோய் சேவடி போற்றி
" தெவிட்டா இன்பத் தேனே போற்றி
" தேவர்கள் சேனா பதியே போற்றி
" தேனினும் இனிய சுவையே போற்றி
" தோன்றாத் துணையாய் வருவாய் போற்றி
" நக்கீரர் தமிழ் நயந்தாய் போற்றி
" நம்புவோர்க் கின்பம் நல்குவாய் போற்றி 80

ஓம் நாடுவோர் நாவில் இருப்பாய் போற்றி
" நானெனும் நெஞ்சில் நசித்தாய் போற்றி
" நினைப்பவர் அகந்தை நிற்பாய் போற்றி
" நீக்கமற நின்ற நிறைவே போற்றி
" நேயத்தே நின்ற நிமலா போற்றி
" பக்தி வலையிற் படுவாய் போற்றி
" பதிபசு பாசம் பகர்ந்தாய் போற்றி
" பவப்பிணி மருந்தாம் பரமா போற்றி
" பழமுதிர சோலைப் பரனே போற்றி
" பழநிப் பதிவாழ் பாலா போற்றி 90

ஓம் பாட்குக் குருகும் பதியே போற்றி
" பிரணவம் மொழிந்த பிள்ளாய் போற்றி
" பிறவா இறவாப் பெம்மான் போற்றி
" பிறவி அறுக்கும் பிரானே போற்றி
" புகழும் போகமும் புணர்ப்பாய் போற்றி
" மணங்கமழ் தெய்வத்து இளநலம் போற்றி
" மம்மர் அறுக்கும் மருந்தே போற்றி
" மருவே மலரே மணியே போற்றி 100

ஓம் மலர்மிசை ஏகியா மாண்பே போற்றி
" முத்தமிழ் முழுமுதற் பொருளே போற்றி
" வரம்பல வழங்கும் வள்ளால் போற்றி
" வள்ளலார் போற்றும் வாழ்வே போற்றி
" வீட்டினைக் காட்டும் விளக்கே போற்றி
" வேண்டுநர் வேண்டிய தருள்வாய் போற்றி
" அருளும் பொருளும் அளிப்பாய் போற்றி
" முருகா முருகா முருகா போற்றி 108

திருச்சிற்றம்பலம்

 

 

அருள்மிகு சிவபெருமான் போற்றி


திருச்சிற்றம்பலம்

(நட்சத்திரம்) ............................ நாள்சேர்
(பெயர்)...................................பெயர்க்காக

செய்யும் இவ்வருச்சனை சேர்ந்த துதியை
ஐயனே ஏற்று அருள்க ! அருள்கவே !!

ஓம் கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி
" கழல் அடைந்தார் செல்லுங் கதியே போற்றி
" அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி
" அல்லலறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி
" மற்றொருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி
" வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
" செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி
" திருமூலட் டானனே போற்றி போற்றி 1(9)

ஓம் வங்கமலி கடல்நஞ்சம் உண்டாய் போற்றி
" மதயானை ஈர்உரிவை போர்த்தாய் போற்றி
" கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி
" கொல்புலித்தோல் ஆடைக் குழகா போற்றி
" அங்கணணே அமரர்கள்தம் இறைவா போற்றி
" ஆலமர நீழல்அறஞ் சொன்னாய் போற்றி
" செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி
" திருமூலட் டானனே போற்றி போற்றி 2(18)

ஓம் மலையான் மடந்தை மணாளா போற்றி
" மழவிடையாய் என்நெஞ்சில் நின்றாய் போற்றி
" நெற்றிமேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி
" இலையார்ந்த மூவிலைவேல் ஏந்தீ போற்றி
" ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி
" சிலையால் அன்று எயில்எரித்த சிவனே போற்றி
" திருமூலட் டானனே போற்றி போற்றி 3 (28)

ஓம் பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி
" பூதப் படையுடையாய் போற்றி போற்றி
" மன்னியசீர் மறைநான்கும் ஆனாய் போற்றி
" மறயேந்து கையானே போற்றி போற்றி
" உன்னும் அவர்க்கு உண்மையனே போற்றி போற்றி
" உலகுக்கு ஓருவனே போற்றி போற்றி
" சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி
" திருமூலட் டானனே போற்றி போற்றி 4 (43)

ஓம் நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி
" நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி
" வெஞ்சுடரோன் பல்இறுத்த வேந்தே போற்றி
" வெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி
" துஞ்சிருளில் ஆடல் உகந்தாய் போற்றி
" தூநீறு மெய்க்கணிந்த சோதீ போற்றி
" செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி
" திருமூலட் டானனே போற்றி போற்றி 5 (55)

ஓம் சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
" சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி
" பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி
" புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி
" அங்கமலத்து அயனோடு மாலும் காணா போற்றி
" அனல்உருவா நின்பாதம் போற்றி போற்றி
" செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
" திருமூலட் டானனே போற்றி போற்றி 6(69)

ஓம் வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி
" வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி
" கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி
" குரைகழலால் கூற்றுதைத்த கோவே போற்றி
" நம்புவர்க்கு அரும்பொருளே போற்றி
" நால்வேதம் ஆறங்கம் ஆனாய் போற்றி
" செம்பொனே மரகதமே மணியே போற்றி
" திருமூலட் டானனே போற்றி போற்றி 7 (79)

ஓம் உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி
" உகப்பாய் மனத்தென்றும் நீங்காய் போற்றி
" வள்ளலே போற்றி மணாளா போற்றி
" வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி
" மேலோர்க்கு மேலோர்க்கும் மேலாய் போற்றி
" தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி
" திருமூலட் டானனே போற்றி போற்றி 8 (89)

ஓம் பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி
" புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
" தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி
" திருமாலுக்கு ஆழி அளித்தாய் போற்றி
" சாவாவே காத்தென்னை ஆண்டாய் போற்றி
" சங்கொத்த நீற்றெம் சதுரா போற்றி
" சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி
" திருமூலட் டானனே போற்றி போற்றி 9 (99)

ஓம் பிரமன்தன் சிரம் அரிந்த பெரியோய் போற்றி
" பெண்உருவோடு ஆணுருவாய் நின்றாய் போற்றி
" கரநான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி
" காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய் போற்றி
" அருமந்த தேவர்க்கு அரசே போற்றி
" சிரம்நெரித்த சேவடியாய் போற்றி போற்றி
" திருமூலட் டானனே போற்றி போற்றி 10 (108)

திருச்சிற்றம்பலம்

 

 

அருள்மிகு உமையம்மை போற்றி


திருச்சிற்றம்பலம்

(நட்சத்திரம்)........................நாள்சேர்
(பெயர்)...................பெயர்க்காக

செய்யும் இவ்வருச்சனை சேர்ந்த துதியை
அம்மையே ஏற்று அருள்க! அருள்கவே !!

ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி
" அகிலாண்ட நாயகியே போற்றி
" அருமறையின் வரம்பே போற்றி
" அறம்வளர்க்கும் அம்மையே போற்றி
" அரசிளங் குமரியே போற்றி
" அப்பர் பிணிமருந்தே போற்றி
" அமுத நாயகியே போற்றி
" அருந்தவ நாயகியே போற்றி
" அருள்நிறை அம்மையே போற்றி
" ஆலவாய்க் கரசியே போற்றி 10

ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
" ஆதியின் பாதியே போற்றி
" ஆலால சுந்தரியே போற்றி
" ஆனந்த வல்லியே போற்றி
" இளவஞ்சிக் கொடியே போற்றி
" இமயத் தரசியே போற்றி
" இடபத்தோன் துணையே போற்றி
" ஈசு வரியே போற்றி
" உயிர் ஓவியமே போற்றி
" உலகம் மையே போற்றி 20

ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
" எண்திசையும் வென்றோய் போற்றி
" ஏகன் துணையே போற்றி
" ஐங்கரன் அன்னையே போற்றி
" ஐயந் தீரப்பாய் போற்றி
" ஒப்பிலா அமுதே போற்றி
" ஓங்கார சுந்தரியே போற்றி
" கற்றோர்க் கினியோய் போற்றி
" கல்லார்க்கும் எளியோய் போற்றி
" கடம்பவன சுந்தரியே போற்றி 30

ஓம் கலியாண சுந்தரியே போற்றி
" கனகமணிக் குன்றே போற்றி
" கற்பின் அரசியே போற்றி
" கருணை யூற்றே போற்றி
" கல்விக்கு வித்தே போற்றி
" கதிரொளிச் சுடரே போற்றி
" கற்பனை கடந்த கற்பகமே போற்றி
" காட்சிக்கு இனியோய் போற்றி
" காலம் வென்ற கற்பகமே போற்றி 40

ஓம் கிளியேந்திய கரத்தோய் போற்றி
" குலச்சிறை காத்தோய் போற்றி
" குற்றம்பொறுக்கும் குணமே போற்றி
" கூடற்கலாப மயிலே போற்றி
" கோலப் பசுங்கிளியே போற்றி
" சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
" சக்தி வடிவே போற்றி
" சங்கம் வளர்த்தாய் போற்றி
" சிவகாம சுந்தரியே போற்றி
" சித்தந் தௌ¢விப்பாய் போற்றி 50

ஓம் சிவயோக நாயகியே போற்றி
" சிவானந்த வல்லியே போற்றி
" சிங்கார வல்லியே போற்றி
" செந்தமிழ்த் தாயே போற்றி
" செல்வத்துக் கரசியே போற்றி
" சேனைத் தலைவியே போற்றி
" சொக்கர் நாயகியே போற்றி
" சைவநெறிநிலைக்கச் செய்தோய் போற்றி
" ஞானம் பிகையே போற்றி
" ஞானப் பூங்கோதையே போற்றி 60

ஓம் தமிழர்குலச் சுடரே போற்றி
" தண்டமிழ்த் தாயே போற்றி
" திருவுடை யம்மையே போற்றி
" திசையெலாம் புரந்தாய் போற்றி
" திரிபுர சுந்தரியே போற்றி
" திருநிலை நாயகியே போற்றி
" தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
" தென்னவர் செல்வியே போற்றி
" தேன்மொழி யம்மையே போற்றி 70

ஓம் தையல் நாயகியே போற்றி
" நற்கனியின் சுவையே போற்றி
" நற்றவத்தின் கொழுந்தே போற்றி
" நல்ல நாயகியே போற்றி
" நீலாம் பிகையே போற்றி
" நீதிக்கு அரசியே போற்றி
" பக்தர்தம் திலகமே போற்றி
" பழமறையின் குருந்தே போற்றி
" பரமானந்தப் பெருக்கே போற்றி
" பண்ணமைந்த சொல்லே போற்றி 80

ஓம் பவளவாய்க் கிளியே போற்றி
" பல்லுயிரின் தாயே போற்றி
" பசுபதி நாயகியே போற்றி
" பாகம்பிரியா அம்மையே போற்றி
" பாண்டிமா தேவியின் தேவே போற்றி
" பார்வதி அம்மையே போற்றி
" பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
" பெரிய நாயகியே போற்றி
" பொன்மயி லம்மையே போற்றி
" பொற்கொடி அன்னையே போற்றி 90

ஓம் மலயத்துவசன் மகனே போற்றி
" மங்கல நாயகியே போற்றி
" மழலைக் கிளியே போற்றி
" மனோன்மணித் தாயே போற்றி
" மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி
" மாயோன் தங்கையே போற்றி
" மாணிக்க வல்லியே போற்றி
" மீனவர்கோன் மகளே போற்றி
" மீனாட்சி யம்மையே போற்றி
" முழுஞானப் பெருக்கே போற்றி 100

ஓம் முக்கண்சுடர் விருந்தே போற்றி
" யாழ்மொழி யம்மையே போற்றி
" வடிவழ கம்மையே போற்றி
" வேலனுக்கு வேல்தந்தாய் போற்றி
" வேத நாயகியே போற்றி
" வையகம் வாழ்விப்பாய் போற்றி
" அம்மையே அம்பிகையே போற்றி போற்றி
" அங்கயற்கண் அம்மையே போற்றி போற்றி 108

திருச்சிற்றம்பலம் 

 

by Swathi   on 07 Jan 2013  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
16-Sep-2013 07:55:45 ராம கிருஷ்ணன் said : Report Abuse
தாய் மொழியில் பொருள் புரிந்து கடவுளை வேண்டும் பொழுது நிறைவு ஏற்படும். அதற்கு இந்த தமிழ் அர்ச்சனை தொகுப்பு மிகவும் உதவும்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.