LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நிலத்தில் உருக்கு இரும்பு தொழில்நுட்பம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

“5,300 ஆண்டுகளுக்கு முன்பே, உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகமாகிவிட்டது. இப்போது தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம், அண்மையில் கிடைக்கப்பெற்ற காலக் கணக்கீடுகள் இரும்பு அறிமுகமான காலத்தை கி.மு.4000-ம் ஆண்டின் முற்பகுதிக்குக் கொண்டு சென்றிருக்கிறது. தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு அறிமுகமாயிருக்கும் என்று உறுதியாகக் கூறலாம். இதை ஆய்வு முடிவுகளாகவே நான் அறிவிக்கிறேன்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். தொல்லியல் துறை சார்பில், தயாரிக்கப்பட்ட ‘இரும்பின் தொன்மை’ நூலை முதல்வர் வெளியிட்டார். பின்னர் இந்நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினார் முதல்வர் ஸ்டாலின். 

"தமிழர்களுடைய தொன்மையை உலகுக்குக் கூறும் மாபெரும் ஓர் ஆய்வு பிரகடனத்தை இப்போது நான் அறிவிக்கப் போகிறேன். இங்குக் கூடியிருப்பவர்களும், நேரலையில் இதைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களும் கவனமாகக் கேட்கவும்.

தமிழ் நிலப்பரப்பிலிருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது. இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகுக்கே திரும்பவும் கூறுகிறேன், தமிழ் நிலப்பரப்பிலிருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற மாபெரும் ஆய்வுப் பிரகடனத்தை இந்நிகழ்ச்சியின் வாயிலாக அறிவிக்கிறேன்

5,300 ஆண்டுகளுக்கு முன்பே, உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகமாகிவிட்டது. இப்போது தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம், அண்மையில் கிடைக்கப்பெற்ற காலக் கணக்கீடுகள் இரும்பு அறிமுகமான காலத்தை கி.மு.4000ம் ஆண்டின் முற்பகுதிக்குக் கொண்டு சென்றிருக்கிறது.

தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு அறிமுகமாயிருக்கும் என்று உறுதியாகக் கூறலாம். இதை ஆய்வு முடிவுகளாகவே நான் அறிவிக்கிறேன்.

தமிழக அரசால் தொல்லியல் துறையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள், உலகத்தின் தலைசிறந்த ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. புனேவில் உள்ள பீர்பால் சகானி தொல் அறிவியல் நிறுவனம், அகமதாபாத்தில் இருக்கும் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம், ஆகிய தேசிய அளவிலான புகழ்பெற்ற ஆய்வகங்களுக்கும், பன்னாட்டு அளவில் உயரிய நிறுவனமான அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருக்கும் பீட்டா ஆய்வகத்துக்கும் மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

தேசிய நிறுவனங்களில் ஓஎஸ்எல் பகுப்பாய்வுக்கும், பீட்டா ஆய்வகத்தில் கதிரியக்கக் காலப் பகுப்பாய்வுக்கும் ஒரே தாழியிலிருந்து மாதிரிகளை அனுப்பி வைத்தோம். இப்படியாக மூன்று நிறுவனங்களிடமிருந்தும் ஒரே மாதிரியான பகுப்பாய்வு முடிவுகள் பெறப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொல்லியல் துறை பல்வேறு ஆய்வு நிறுவனங்களுக்கு மாதிரிகளை அனுப்பிப் பெறப்பட்ட முடிவுகளைக் கூர்ந்து ஒப்பாய்வு செய்ததில் ஒரே மாதிரியான முடிவுகள் கிடைத்துள்ளது.

இப்போது கிடைத்திருக்கும் கதிரியக்கக் காலக் கணக்கீடு மற்றும் ஓஎஸ்எல் பகுப்பாய்வு காலக் கணக்கீடுகளின் அடிப்படையில் கி.மு.3345-லேயே தென்னிந்தியாவில் இரும்பு அறிமுகமாகிவிட்டது என்பது தெரியவருகிறது. அதற்கான ஆய்வுகள் முடிவுகள் வரப்பெற்றுள்ளது" என்றார் முதல்வர் ஸ்டாலின். 

 

by hemavathi   on 24 Jan 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ. 6,626 கோடி ஒதுக்கீடு தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ. 6,626 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் புதிதாக 5 விமான நிலையங்கள்- மத்திய அரசு தகவல் தமிழகத்தில் புதிதாக 5 விமான நிலையங்கள்- மத்திய அரசு தகவல்
மதுரை பறையிசை கலைஞர் வேலு ஆசானுக்குப் பத்மஸ்ரீ விருது மதுரை பறையிசை கலைஞர் வேலு ஆசானுக்குப் பத்மஸ்ரீ விருது
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் - தவெக தலைவர் விஜய் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் - தவெக தலைவர் விஜய்
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராஜனுக்கு திருவுருவச் சிலை மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராஜனுக்கு திருவுருவச் சிலை
மே 25-ம் தேதி குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வு மே 25-ம் தேதி குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வு
அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க உரிம ஏலம் ரத்து - மத்திய அரசு அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க உரிம ஏலம் ரத்து - மத்திய அரசு
அயலகத் தமிழர்களுக்கு தமி்ழ், கலைகளைப் போதிக்க 100 ஆசிரியர்கள் - அயலகத் தமிழர் தின மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அயலகத் தமிழர்களுக்கு தமி்ழ், கலைகளைப் போதிக்க 100 ஆசிரியர்கள் - அயலகத் தமிழர் தின மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.