|
||||||||
சீனாவின் டீப்சீக் செயலிக்குத் தடை விதித்தது தென்கொரியா |
||||||||
உலக அளவில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த ஒரு வாரத்திலேயே, சீனாவின் டீப்சீக் தென் கொரியாவில் மிகவும் பிரபலமடைந்தது. ஒரு வாரத்திலேயே ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுடன் ஆப் ஸ்டோர்களில் முதலிடத்தைப் பிடித்தது டீப்சீக் செயலி.
இந்நிலையில் டீப்சீக் செயலிக்குத் தடை விதிப்பதாகத் தென்கொரிய அரசு தெரிவித்துள்ளது. டீப்சீக் செயலி பிரபலமடைந்து வருவதால், தனியுரிமை மற்றும் தேசிய பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாக இந்தச் செயலியின் மீது பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன.
இந்நிலையில் தென் கொரியா, டீப்சீக் செயலிக்குத் தடை விதித்துள்ளது. பல தென் கொரிய அரசு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் தங்கள் பணி சாதனங்களில் chatbot பதிவிறக்கம் செய்வதைத் தடை செய்ததைத் தொடர்ந்து டீப் சீக் செயலி நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தென் கொரியாவின் தற்காலிகத் தலைவர் சோய் சாங்-மோக், டீப்சீக்கை ஒரு "அதிர்ச்சி" என்று கூறியுள்ளார்.
இது செயற்கை நுண்ணறிவைத் தாண்டி நாட்டின் தொழில்களைப் பாதிக்கக்கூடும் என்றும் விமர்சித்துள்ளார். இதனிடையே புதிய பதிவிறக்கங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தாலும், ஏற்கனவே தங்கள் தொலைப்பேசிகளில் அதை வைத்திருப்பவர்கள் அதைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும் அல்லது அவர்கள் அதை டீப்சீக்கின் வலைத்தளம் வழியாக அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தைவான் மற்றும் ஆஸ்திரேலியா அனைத்து அரசு சாதனங்களிலிருந்தும் டீப்சீக் செயலியைத் தடை செய்துள்ளன. ஆஸ்திரேலிய அரசு இந்தச் செயலியைச் சீன தயாரிப்பு என்பதன் காரணமாகத் தடை செய்யப்படவில்லை என்றும் மாறாகத் தேசியப் பாதுகாப்புக்கு "ஏற்றுக்கொள்ள முடியாத ஆபத்து" இருப்பதாகக் கூறி தடை விதித்தது.
2023 ஆம் ஆண்டில் ChatGPT-ஐச் சிறிது காலம் தடை செய்த இத்தாலியின் ஒழுங்குமுறை ஆணையம், DeepSeek-கிலும் அதையே செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
|
||||||||
by hemavathi on 18 Feb 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|