LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஆன்மீகத் தமிழர்கள் Print Friendly and PDF

“மனநலனுக்கு தியானம் மிகச் சிறந்த கருவி” - ஐ.நா சபையில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உரை

 

மனநலனுக்குத் தியானம் மிகச் சிறந்த கருவி என்றும், தியானம் ஒவ்வொரு வீட்டுக்கும் செல்ல வேண்டும் என்றும் ஐநா தலைமையகத்தில் நடைபெற்ற முதல் உலக தியான தினத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்தார். 
டிசம்பர் 21-ம் தேதி உலக தியான தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதையொட்டி   நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற உலக தியான தின கொண்டாட்டத்தின் தொடக்க அமர்வில் 'வாழும் கலை' அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சிறப்புரை ஆற்றினார்.
"இன்று தியானம் என்பது ஆடம்பரம் அல்ல, அது அத்தியாவசியமான ஒன்று. மனநலனுக்குத் தியானம் மிகச் சிறந்த கருவி. பல் சுகாதாரம் (Dental Health) இருப்பது போல் மனதுக்கான சுகாதாரமும் (Mental Health) உள்ளது. தியானத்தில் ஈடுபடுபவர்கள் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியை உணர்கிறார்கள். அவர்கள் உலகத்தை மகிழ்ச்சியாக வைக்கிறார்கள். மன ரீதியிலான பிரச்சினை என்பது உலக மக்கள் தொகையில் மிகப் பெரிய எண்ணிக்கையில் இருக்கிறது. ஒருபுறம் தீவிர பதற்றம் மறுபுறம் தீவிர மனச்சோர்வு என மனநல நெருக்கடி நம் மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது. ஒருபுறம், நம்முடைய இளைஞர்கள் ஆக்ரோஷமான நடத்தைக்கு உள்ளாகிறார்கள். மறுபுறம், மனச்சோர்வுடன் உள்ளார்கள்.
நாம் நம்மைப் பற்றியும், சக உயிரினங்களைப் பற்றியும், சுற்றுச்சூழலைப் பற்றியும் உணர்திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். தியானம் நமது சுற்றுச்சூழலைப் பற்றி அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. மேலும், நம்மைச் சுற்றியுள்ள மக்களின் உணர்வுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. தனக்கும் பிறருக்கும் தீங்கு விளைவிக்கும் சமூக விரோதச் செயல்களிலிருந்து விலகி இருக்கத் தியானம் நமக்கு உதவுகிறது.
தியானம் செய்வதற்காக மக்கள் மலைகளைத் தேடியும் கடற்கரைகளைத் தேடியும் சென்றார்கள். ஆனால், இன்று தியானம் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் செல்ல வேண்டும். ஒவ்வொரு வீட்டுக்கும் தியானம் என்ற இயக்கத்தைக் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி இந்திய அரசு அறிவித்தது. ஒரு சதவீத மக்கள் அமைதியற்ற நிலையில் இருந்தால் அவர்கள் மற்ற அனைவரையும் அமைதியற்றவர்களாக மாற்றுவார்கள். அதேபோல், ஒரு சதவீத மக்கள் தியானத்தில் ஈடுபட்டு உணர்திறனுடனும் உணர்வுப்பூர்வமாகவும் இயங்கினால் அதன் பலன்களை நம்மால் கணக்கிடவே முடியாது.
உடல் சார்ந்த பிரச்சினைகள் காரணமாகச் சிலரால் யோகா செய்ய முடியாமல் போகலாம். ஆனால், தியானம் எங்கேயும் எப்போதும் எல்லோராலும் மேற்கொள்ள முடியும். மன ரீதியாகக் கட்டுப்பாடுகளை வைத்திருப்பவர்களுக்குச் சர்வதேசத் தியான தினம் மிகப் பெரிய கதவைத் திறந்து வைக்கிறது. தியானத்துக்கு நாடு, இனம், வயது என எந்த எல்லையும் இல்லை. தியானம் செய்வது கடினம் எனப் பொதுவான கருத்து இருக்கிறது. ஆனால், தியானம் மிக எளிதானது. அது நம்மை ஆசுவாசப்படுத்துகிறது. மனப்பதற்றம், பயம், தனிமை உணர்வு போன்றவற்றிலிருந்து நம்மை விடுவிக்கிறது" என்று  ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குறிப்பிட்டார்.
உலக தியான தினமான இன்று, தியானத்தை தங்களின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "இன்று, உலக தியான தினத்தில், தியானத்தை தங்கள் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக ஆக்கி, அதன் மாற்றும் திறனை அனுபவிக்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.
தியானம் என்பது ஒருவரின் வாழ்க்கையிலும், நமது சமூகம் மற்றும் பூமிக் கிரகத்திற்கும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதற்கான ஒரு சக்திவாய்ந்த வழியாகும். தொழில்நுட்ப யுகத்தில், செயலிகள் மற்றும் வழிகாட்டும் காணொலிகள் தியானத்தை நமது அன்றாட நடவடிக்கைகளில் இணைக்க உதவும் மதிப்புமிக்க கருவிகளாக இருக்கும்’’ என தெரிவித்துள்ளார்.
உலக தியான தினத்தை முன்னிட்டு சத்குரு ஜக்கி வாசுதேவ் விடுத்துள்ள செய்தியில், "மன உறுதி, சமநிலை மற்றும் ஆரோக்கியம் ஆகியவை இன்று மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று. டிசம்பர் 21-ம் தேதியை உலக தியான தினமாக ஐக்கிய நாடுகள் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இது பாராட்டுக்குரியது. ஐக்கிய நாடுகள் சபை, தியானத்தை மன ஆரோக்கியம், உணர்ச்சி நிலைத்தன்மை மற்றும் சமநிலையை உருவாக்குவதற்கான ஒரு கருவியாக அங்கீகரித்துள்ளது.
வல்லுநர்கள் அனைவரும் ஒரு மனநல தொற்றுநோய் உருவாகிறது என கணித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இது மிகவும் முக்கியமான படியாகும். மனித மனம் மிகப்பெரிய அதிசயம். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான மக்கள் அதை ஒரு துன்பகரமான உற்பத்தி இயந்திரமாக அனுபவிக்கிறார்கள். அது தொடர்ந்து அவர்களுக்கு எதிராகத் திரும்புகிறது. தியானம் என்பது மனம் அதிசயமான முறையில் செயல்படுவதற்கு ஏற்ப மாற்றும் செயல்முறையாகும்" என குறிப்பிட்டுள்ளார்.

மனநலனுக்குத் தியானம் மிகச் சிறந்த கருவி என்றும், தியானம் ஒவ்வொரு வீட்டுக்கும் செல்ல வேண்டும் என்றும் ஐநா தலைமையகத்தில் நடைபெற்ற முதல் உலக தியான தினத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்தார்.


டிசம்பர் 21-ம் தேதி உலக தியான தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதையொட்டி   நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற உலக தியான தின கொண்டாட்டத்தின் தொடக்க அமர்வில் 'வாழும் கலை' அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சிறப்புரை ஆற்றினார்.


"இன்று தியானம் என்பது ஆடம்பரம் அல்ல, அது அத்தியாவசியமான ஒன்று. மனநலனுக்குத் தியானம் மிகச் சிறந்த கருவி. பல் சுகாதாரம் (Dental Health) இருப்பது போல் மனதுக்கான சுகாதாரமும் (Mental Health) உள்ளது. தியானத்தில் ஈடுபடுபவர்கள் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியை உணர்கிறார்கள். அவர்கள் உலகத்தை மகிழ்ச்சியாக வைக்கிறார்கள். மன ரீதியிலான பிரச்சினை என்பது உலக மக்கள் தொகையில் மிகப் பெரிய எண்ணிக்கையில் இருக்கிறது.


ஒருபுறம் தீவிர பதற்றம் மறுபுறம் தீவிர மனச்சோர்வு என மனநல நெருக்கடி நம் மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது. ஒருபுறம், நம்முடைய இளைஞர்கள் ஆக்ரோஷமான நடத்தைக்கு உள்ளாகிறார்கள். மறுபுறம், மனச்சோர்வுடன் உள்ளார்கள்.நாம் நம்மைப் பற்றியும், சக உயிரினங்களைப் பற்றியும், சுற்றுச்சூழலைப் பற்றியும் உணர்திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். தியானம் நமது சுற்றுச்சூழலைப் பற்றி அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.


மேலும், நம்மைச் சுற்றியுள்ள மக்களின் உணர்வுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. தனக்கும் பிறருக்கும் தீங்கு விளைவிக்கும் சமூக விரோதச் செயல்களிலிருந்து விலகி இருக்கத் தியானம் நமக்கு உதவுகிறது.தியானம் செய்வதற்காக மக்கள் மலைகளைத் தேடியும் கடற்கரைகளைத் தேடியும் சென்றார்கள். ஆனால், இன்று தியானம் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் செல்ல வேண்டும். ஒவ்வொரு வீட்டுக்கும் தியானம் என்ற இயக்கத்தைக் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி இந்திய அரசு அறிவித்தது. ஒரு சதவீத மக்கள் அமைதியற்ற நிலையில் இருந்தால் அவர்கள் மற்ற அனைவரையும் அமைதியற்றவர்களாக மாற்றுவார்கள். அதேபோல், ஒரு சதவீத மக்கள் தியானத்தில் ஈடுபட்டு உணர்திறனுடனும் உணர்வுப்பூர்வமாகவும் இயங்கினால் அதன் பலன்களை நம்மால் கணக்கிடவே முடியாது.


உடல் சார்ந்த பிரச்சினைகள் காரணமாகச் சிலரால் யோகா செய்ய முடியாமல் போகலாம். ஆனால், தியானம் எங்கேயும் எப்போதும் எல்லோராலும் மேற்கொள்ள முடியும். மன ரீதியாகக் கட்டுப்பாடுகளை வைத்திருப்பவர்களுக்குச் சர்வதேசத் தியான தினம் மிகப் பெரிய கதவைத் திறந்து வைக்கிறது.


தியானத்துக்கு நாடு, இனம், வயது என எந்த எல்லையும் இல்லை. தியானம் செய்வது கடினம் எனப் பொதுவான கருத்து இருக்கிறது. ஆனால், தியானம் மிக எளிதானது. அது நம்மை ஆசுவாசப்படுத்துகிறது. மனப்பதற்றம், பயம், தனிமை உணர்வு போன்றவற்றிலிருந்து நம்மை விடுவிக்கிறது" என்று  ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குறிப்பிட்டார்.

 

by hemavathi   on 22 Dec 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருவையாற்றில் தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆராதனை விழா - பஞ்சரத்தினக் கீர்த்தனைகளைப் பாடி கலைஞர்கள் இசையஞ்சலி. திருவையாற்றில் தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆராதனை விழா - பஞ்சரத்தினக் கீர்த்தனைகளைப் பாடி கலைஞர்கள் இசையஞ்சலி.
திருமுருக கிருபானந்த வாரியார் திருமுருக கிருபானந்த வாரியார்
தமிழும் சமயமும் ஒரு சிறப்பு கட்டுரை தமிழும் சமயமும் ஒரு சிறப்பு கட்டுரை
தங்கம்மா அப்பாக்குட்டி தங்கம்மா அப்பாக்குட்டி
பத்திரகிரியார் பத்திரகிரியார்
முரளீதர சுவாமிகள் முரளீதர சுவாமிகள்
முகவை கண்ண முருகனார் முகவை கண்ண முருகனார்
மத்துவர் மத்துவர்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.