|
|||||
சென்னை புத்தகத் திருவிழாவில் |
|||||
"ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள்" என்ற வலைத்தமிழ் தொடரின் ஒருங்கிணைப்பாளர் முனைவர். மெய்.சித்ரா எழுதியுள்ள காவ்யா பதிப்பகத்தின் "தமிழர் உணவு" என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு காவ்யா பதிப்பகத்தின் ஒருங்கிணைப்பில் 20.01.2024 அன்று சென்னை புத்தகத் திருவிழாவில் நடைபெற்றது. அருமையாக வெளிவந்துள்ள "தமிழர் உணவு" என்ற நூலில் நம் முன்னோர்களின் உணவு குறித்த சிந்தனை, சங்க இலக்கியங்களில் எந்தெந்த உணவுகள் குறிப்புகள் உள்ளன என்பது உள்ளிட்ட பல குறிப்புகளைத் தொகுத்து இந்நூல் நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது.
பிரபலங்கள் பங்கேற்பு
இந்நிகழ்வில் முனைவர்.திருப்பூர் கிருஷ்ணன், நகைச்சுவை நடிகர் முனைவர். சார்லி, புதுவை நாடகத்துறை ஆளுமை முனைவர். ஆறுமுகம், திரு.கபிலன் வைரமுத்து, மேனாள் மாநிலத் தேர்தல் ஆணையாளர் முனைவர் சோ.அய்யர், IAS (ஓய்வு) ,தமிழிசை அறிஞர், எழுத்தாளர் திரு.அரிமளம் பத்மநாபன், காவ்யா பேராசிரியர் முனைவர். சண்முகசுந்தரம் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.
இந்த நூலை எழுத்தாளர் திருப்பூர் முனைவர்.கிருஷ்ணன் வெளியிட வலைத்தமிழ் ஆசிரியர் ச. பார்த்தசாரதி பெற்றுக்கொண்டார். |
|||||
by Kumar on 21 Jan 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|