LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் ஆர்வலர்கள்

கணினித்தமிழ் ஆய்வாளர் முனைவர் செல்வி கி. பரமேஸ்வரி

முனைவர் செல்வி கி. பரமேஸ்வரி (1986) .... ஈரோடு நகரில் பிறந்து வளர்ந்த இவர், ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்று, பின்னர் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் மொழியியல்துறையில் கணினிமொழியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதன்பின்னர் ஹைதராபாத்தில் அமைந்துள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தின் செயற்பாட்டுமொழியியல், மொழிபெயர்ப்பியல் மையத்தில் ( Ceentre for Applied Linguistics and Translation Studies- CALTS ) தனது எம்ஃபில் படிப்பைத் தொடர்ந்தார். அதற்காகத் தமிழ் உருபன்பகுப்பாய்விபற்றிய ஆய்வை ( An improvized morphological analyser for Tamil : A case of implementing Open Source Platform Apertium) மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, அந்த மையத்திலேயே தனது முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். அந்த ஆய்வின் தலைப்பு தெலுங்கு - தமிழ் இயந்திரமொழிபெயர்ப்பு பற்றியதாகும் ( Development of Telugu - Tamil Machine Translation: With special reference to Divergence) .

இவருடைய எம்ஃபில், முனைவர் பட்டம் இரண்டிற்கும் அந்த மையத்தில் பேராசிரியர்களாகப் பணியாற்றும் பேரா. ஜி. உமா மகேஸ்வர ராவ், பேரா. என். கிருபானந்தம் ஆகியோர் வழிகாட்டிகளாக அமைந்தனர். முனைவர் பட்டத்திற்குப் பின்னர் அந்த மையத்திலேயே தற்போது உதவிப் பேராசிரியராக இணைந்து, தனது ஆய்வைத் தொடர்ந்துவருகிறார். இந்த மையம் கணினிமொழியியல், மொழித்தொழில்நுட்பத்தில் முக்கியமான ஆய்வுகள் பலவற்றைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பேரா. என். கிருபானந்தம் அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு சிறந்த பேராசிரியர். தெலுங்குக் கணினிமொழியியலில் குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டு வருபவர் பேரா. உமா என்றழைக்கப்படும் பேரா. ஜி. உமா மகேஸ்வர ராவ். திராவிடமொழியியலில் மிகச் சிறந்த ஆய்வுகளைத் தந்த பேரா. பி எச் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உருவாக்கமான பேரா. உமா அவர்களின் வழிகாட்டுதலில் , இந்த இளம் ஆய்வாளர் முனைவர் பரமேஸ்வரி அவர்களும் செயல்பட்டுவருகிறார்கள். இவர் தமிழ், தெலுங்கு இரண்டுமொழிகளுக்கும் உருபன் பகுப்பாய்விக்கும் ஆய்வுக்கும் ( Morphological Analysis and Generation ) அடிப்படையான மொழிக்கருவிகளை உருவாக்குவதில் முனைப்பாகச் செயல்பட்டுவருகிறார்.

தெலுங்கு - தமிழ் இயந்திரமொழிபெயர்ப்பில் குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டுவருகிறார். இந்தி - தெலுங்கு - தமிழ் இயந்திரமொழிபெயர்ப்பிலும் சில பணிகளை மேற்கொண்டுள்ளார். கணினிமொழியியலில் முறைசார் கல்வியைப் பெற்றுள்ள இவர். கணினிமொழியியல், மொழித்தொழில்நுட்பம் துறை அறிவைத் தமிழுக்கும் தெலுங்கிற்கும் செயல்படுத்துவதில் முனைப்பாக ஈடுபட்டுவருகிறார். இதுதொடர்பாக ஏராளமான ஆய்வுக்கட்டுரைகளைத் தேசிய, சர்வதேசிய கருத்தரங்குகளில் அளித்துள்ளார். பேர்ல் (PERL), புரோலாக் (PROLOG) போன்ற கணினிமொழியியலுக்கு மிகவும் பயன்படும் நிரலாக்கமொழிகளில் திறன்பெற்றுள்ளார் இவர். 2011 -இல் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் நடைபெற்ற உலகத் தெலுங்கு மாநாட்டில் பேரா. ஜி. உமா மகேஸ்வர ராவ், பேரா. என். கிருபானந்தம் , பேரா. அம்பா குல்கர்ணி ஆகியோருடன் இணைந்து இரண்டு ஆய்வுக்கட்டுரைகளைக் கணினிமொழியியில் துறையில் அளித்தார். அண்மையில் - 2015 செப்டம்பரில் - இயந்திரமொழிபெயர்ப்புக் கருத்தரங்கு ஒன்றிற்காக , செக்கோஸ்லேவிகியா சென்றிருந்தார்.

சொற்பிழை திருத்தி, உருபன் ஆய்வி, இயந்திரமொழிபெயர்ப்பு ஆகியவை இவருடைய குறிப்பான ஆய்வுகளாக அமைந்துள்ளன. தமிழ் , தெலுங்கு இரண்டுமொழிகளுக்கும் இடையில் உள்ள ஒற்றுமை , வேற்றுமைபற்றிய ஆய்விலும் இவர் பங்களித்துள்ளார். திராவிட மொழிகளுக்கு ஆண்டிராய்டு குறுஞ்செயலிகள் உருவாக்கத்திலும் இவருக்கு ஈடுபாடு உண்டு. பல்வேறு கணினிமொழியியல் கருத்தரங்குகளில் இவரைச் சந்தித்து, இவருடைய கணினிமொழியியல், மொழியியல் அறிவைத் தெரிந்துகொண்ட நான், எனது முகநூல் பக்கத்தில் கணினித்தமிழ் ஆய்வாளர்கள் தலைப்பில் இவரை அறிமுகப்படுத்துவதில் மகிழ்வடைகிறேன்.

 

-தெய்வ சுந்தரம் நயினார்

 

by Swathi   on 19 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.