|
||||||||
ட்ரம்ப்பால் அசாத்திய உச்சங்களைத் தொட்ட கிரிப்டோகரன்சியின் மதிப்பு! |
||||||||
அமெரிக்க அதிபர் தேர்தல் பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ட்ரம்ப்புக்குச் சாதகமான அலை உருவாகிக்கொண்டிருந்த சமயத்தில் இருந்தே பிட் காயின் எனப்படும் மெய்நிகர் நாணயங்களின் மதிப்பு ஏறத் தொடங்கியது.
ட்ரம்ப் அமெரிக்காவின் புதிய அதிபர் என்பது உறுதியான பிறகு பிட்காயின் எனப்படும் கிரிப்டோகரன்சியின் மதிப்பு அசாத்திய உச்சங்களைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. அதிலும் வரலாறு காணாத வகையில் பிட்காயின் விலை ஒரு லட்சம் டாலர்களை கடந்து விட்டது.
பிட்காயினுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் ட்ரம்ப், அமெரிக்காவின் பங்கு- பரிவர்த்தனை ஆணையத்தின் தலைவராக பவுல் ஆட்கின்ல் என்பவரை நியமித்துள்ளார்.
டிஜிட்டல் சொத்துகள் மற்றும் பிற புதுமையான டிஜிட்டல் பரிவர்த்தனைகள், முதலீட்டுச் சந்தை உத்திகளில் நம்பிக்கை கொண்டவரான பவுல் ஆட்கின்ஸ் நியமனம் அமெரிக்காவில் பிட்காயின் வளர்ச்சிக்கு இன்னும் தூண்டுகோலாக அமையும் என்று கருதப்படுகிறது.
2008 ஆம் ஆண்டு சட்டோஷி நாக்கமோட்டோ என்பவரால் உருவாக்கப்பட்ட முதல் கிரிப்டோகரன்சியான பிட்காயின், 2009 முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இதுபோன்ற கிரிப்டோ கரன்சிகளில் பரிவர்த்தனை செய்வதும், சட்டவிரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதும் நடப்பதால் பல நாடுகள் இன்னும் கிரிப்டோகரன்சியை மதிப்புமிகு நாணயமாக அங்கீகரிக்கவில்லை. ஆனால், அமெரிக்காவின் புதிய அதிபராகப்போகும் டொனால்ட் ட்ரம்ப் இதனை ஆதரிப்பதால் சர்வதேச அளவிலேயே இதன் தாக்கம் எதிரொலிக்கும் என்று கருதப்படுகிறது.
|
||||||||
by hemavathi on 09 Dec 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|