|
||||||||
திருக்குறள் திறனாய்வுத் தேர்வு (இணையவழி) - Thirukkural Aptitude Test ( Online ) |
||||||||
திருக்குறள் திறனாய்வுத் தேர்வு (இணையவழி) - Thirukkural Aptitude Test ( Online )
உலகெங்கும் இன்று திருக்குறளை மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த திருக்குறள் பாதிப்பானது இரண்டு நிலைகளில் செல்கிறது. 1. திருக்குறள் முற்றோதல் (இளநிலை) - மனப்பாடம் செய்து முழுமையாக குறளை ஒப்பித்தல் முதல் நிலைக்குத் தேவையான அனைத்தையும் , கையேட்டையும், அணுகுமுறைகளையும் தொகுத்து, உருவாக்கி அறிவித்துள்ளோம். இரண்டாவது நிலை சற்று கடினமானது. பொருள் உணர்ந்ததை நேரடியாக நேர்காணல் நடத்தி அவர்கள் புரிந்துகொன்டுள்ள திருக்குறளின் பொருள் சரியாக உள்ளது என்பதை உறுதிப்படுத்துவது உலகெங்கும் எளிதான செயலல்ல. எனவே இதை இணையத்தில் கேள்வி கேட்டு எளிதாக பல்வேறு குழப்பக்கூடிய பதில்களைக் கொடுத்து அதில் சரியானதை தேர்ந்தெடுக்கும் உத்தியை பின்பற்ற திருக்குறள் திறனாய்வுத் தேர்வு ஒன்றை இணையவழியில் கொண்டுவரவேண்டும் என்று வலைத்தமிழ் குழு, உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் முன்னெடுக்கிறது. இது முழு தீர்வாக இருக்காது என்றாலும் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் குறள் பயிற்சி பெற்று வரும்போது இத்தேர்வு பெரும் பலனை ஏற்படுத்தும். இதற்கு ஒரு திருக்குறளுக்கு இரண்டு அல்லது மூன்று கேள்விகள் வீதம் சுமார் 3000+ கேள்விகளைத் தயாரித்துக் கொண்டுவரும் சோதனை முயற்சி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. இது இரண்டு குழுக்கம் ஈடுபடும். 1. திருக்குறள் கேள்வி-பதில்களை உருவாக்குவது தேவையான அறிஞர்கள்: இதில் நம்பிக்கையுள்ளவர்கள் இணைந்து ஒரு நிதி ஏற்படுத்தும்போது, அல்லது போதிய நிதி கிடைக்கும்போது இத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைக்கு வரும்.
1330 X 3 கேள்விகள் = 3990 கேள்விகள் 3990 கேள்வி-பதில்கள் X ரூபாய் 200 = 7,98,000/- தொழில்நுட்ப செலவு = ரூபாய் 1,50,000/- தோராயமான திட்ட செலவு: ரூபாய் 9,48,000/-
அவன் வேண்டுகோளுக்கு இரங்கி, அம்மருத்துவர் அவன் இல்லத்துக்கு வந்தார் ; அம்மாவைப் பார்த்தார். "கவலைப்பட ஏதுமில்லை, வளவா!. இப்பொழுது, வளவனுக்கு உணவுக்கு என்ன செய்வது என்ற யோசனை வந்தது. கீழக்கண்டவற்றுள் எதனை அவன் செய்யலாம். அல்லது, வேறேதும் தீர்வுண்டா?. அ) பக்கத்திலுள்ள கடையில், கடைக்காரனுக்குத் தெரியாமல் ஒரு ரொட்டியைத் தூக்கிக் கொண்டு வந்து (திருட்டு) கொடுத்து அம்மாவின் பசியை ஆற்றலாமா?. ஆ) யாரிடமாவது இரந்து கேட்டு (பிச்சை) உணவுக்குப் பணம் பெறலாமா?. இ) அம்மா துயர்படினும் பரவாயில்லை. திருடியோ பிச்சை எடுத்தோ அம்மாவின் பசியாற்ற மாட்டேன் என்று "இறைவா, அம்மாவின் உணவுக்கு ஏதாவது வழி காண்பி" என்று வேண்டிவிட்டு, அருகில் உள்ள கடையில் பகுதி நேரம் வேலை செய்கிறேன் எங்கள் அம்மாவிற்கு உணவு கொடுங்கள் என்று மாற்று வழி தேடலாமா? ஈ ) இப்படி எதுவும் செய்யாமல் மேலே இருப்பவன் பார்த்துக்கொள்வான் என்று அமைதியாக தனது வீட்டுப்பாடத்தை செய்யச் சென்றுவிடலாமா?
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
by Swathi on 05 Mar 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|