|
||||||||
பென்சில்வேனியா மாகாணத்தில் திருக்குறள் முற்றோதல் பயிற்சி தொடக்கவிழா |
||||||||
அமெரிக்காவில்முதன்முதலாகப்பென்சில்வேனியாமாகாணத்தில் திருக்குறள் முற்றோதல் பயிற்சி தொடக்கவிழா ஆகஸ்ட் 5-ஆம் நாள் திங்கட்கிழமை அன்று இனிதேநடைபெற்றது. உலகத் திருக்குறள் முற்றோதல்இயக்கமும், பென்சில்வேனியாதமிழ்ப்புத்தகக்குழுவும், வலைத்தமிழ்ஊடகமும் இணைந்து இப்பயிற்சிவகுப்புகளை நடத்துகின்றனர். க.காமராசு, தலைமைப் பயிற்சியாளர், உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம், விஜய்மணிவேல், தலைவர், வடஅமெரிக்கத்தமிழ்ச்சங்கப் பேரவை(FeTNA), மருத்துவர். விஜய்ஜானகிராமன், ஒருங்கிணைப்பாளர், உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம், கொழந்தவேல் இராமசாமி, வாசிங்டன், டி.சி., ச. பார்த்தசாரதி, ஒருங்கிணைப்பாளர், உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம், வாசுதேவன் வரதராஜன், மகேந்திரன் சுந்தர்ராஜ், விஸ்வநாதன்ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு இவ்விழாவினைசிறப்பித்தனர். விஜய்மணிவேல் அவர்கள் FeTNA-தலைவராகப்பொறுப்பேற்றுப்பங்கேற்கும் முதல் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு திருக்குறள் முற்றோதல்பயிற்சிபற்றிஅரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ் வளர்ச்சித்துறை, மாணவர்கள்அரசு வழங்கும் ரூபாய் 15 ஆயிரம் சிறப்புப் பரிசு, சான்றிதழ் பெற நன்னெறி வகுப்புப்பயிற்சியினைப் பயன்படுத்தி 1330 குறள்களையும் மனப்பாடம் செய்வதற்கும், ஒப்பித்தல் செய்வதற்கும், முற்றோதல்செய்வதற்கும் முறையான பயிற்சி அளித்து மாணவமாணவியர்களின்நினைவாற்றலைமேம்படுத்தலாம். இதைப்பின்பற்றித் தற்போது அமெரிக்காவிலும்முற்றோதல் பயிற்சி அளிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இத்தொடக்கவிழாவின் முழு நேரக்காணொலியைக் காண இந்தச்சுடக்கைஅழுத்தவும். https://www.youtube.com/watch?v=YUDx8Zen-Cw
நமது செய்தியாளர்– முருகவேலு வைத்தியநாதன் |
||||||||
by Swathi on 13 Aug 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|