LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அமெரிக்காவில் பகல் சேமிப்பு நேரம் நீக்கப்படும் : டொனால்டு டிரம்ப்

 

அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளில் பகல் சேமிப்பு நேரம் (Daylight Saving Time-DST) என்ற முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

நீண்ட கோடைக்காலங்களில் பகல் நேரத்தை அதிகரிக்க 'பகல் சேமிப்பு நேரம்' என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.  அதாவது,  கோடைக்காலம் துவங்கும்போது கடிகாரங்களில் 1 மணிநேரத்தை முன்னோக்கி நகர்த்தி வைப்பர். இதன் மூலம் அதிகமான பகல் நேரம் கிடைக்கும். பின்னர் கோடைக்காலம் முடியும்போது கடிகாரங்களில் 1 மணிநேரத்தைப் பின்னோக்கி நகர்த்தி வைப்பர். முதல் உலகப் போரின் போது இந்த நடைமுறை உருவானது, 

பின்னர் இரண்டாம் உலகப் போரில் ஆற்றலைச் சேமிப்பதற்காக மீண்டும்  அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 1966 இல் சீரான நேரச் சட்டத்துடன் மேலும் தரப்படுத்தப்பட்டது. அதே சமயம், ஹவாய் மற்றும் அரிசோனாவின் பெரும் பகுதி 'பகல் சேமிப்பு நேரம்' என்ற நடைமுறையைக் கடைப்பிடிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த 'பகல் சேமிப்பு நேரம்' முறைக்கு அமெரிக்காவில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பகல் நேரங்களில் ஏற்படும் நேர மாறுதல்களால் தூக்கம் மற்றும் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் பகல் சேமிப்பு நேர முறையை அகற்றுவேன் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "குடியரசுக் கட்சி பகல் சேமிப்பு நேரத்தை அகற்றச் சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும்.  பகல் சேமிப்பு நேர முறை நமக்குத் தேவையில்லை. அது சிரமமானது மற்றும் செலவு மிகுந்தது" என்று பதிவிட்டுள்ளார்.

 

by hemavathi   on 15 Dec 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அயலகத் தமிழர் நலனுக்கான திட்டங்களும் விளக்கங்களும்!  கூட்ட அறிக்கை(Minutes Of Meeting) அயலகத் தமிழர் நலனுக்கான திட்டங்களும் விளக்கங்களும்! கூட்ட அறிக்கை(Minutes Of Meeting)
இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது -  ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது - ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர்
ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின் ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்
வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ் வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ்
ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம் ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம்
இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம் இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம்
2025 இறுதிக்குள் ஒரு  மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம் 2025 இறுதிக்குள் ஒரு மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம்
அமெரிக்க நாட்டுக்கான தபால் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியது இந்தியா அமெரிக்க நாட்டுக்கான தபால் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியது இந்தியா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.