LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்காக வெர்ஜினியாவில் இயங்கும் வள்ளுவன் தமிழ் மையம் 40000 வெள்ளிகளை திரட்டியது ..

நவம்பர் 4, 2017,  வெர்ஜினியாவில் இயங்கும் வள்ளுவன் தமிழ் மையம் என்ற தன்னார்வ அமைப்பு இந்த பகுதியை சார்ந்த பொதுமக்களை ஒருங்கிணைத்து ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்காக ஒரு நன்கொடை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.  இதில் இந்தப் பகுதியில் இயங்கும் மெட்ராஸ் சாப்ஸ்டிக்ஸ் (Madras Chopstics) உணவகம் இலவசமாக உணவை வழங்க முன்வந்தது . மதிய உணவில் திரட்டும் நிதியையும், நன்கொடையாளர்கள் வெளியில் இருந்து அளிக்கும் நிதியையும் ஒருங்கிணைத்து இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .  இதில் திரளாக வந்திருந்த தமிழ்ப்பள்ளியில் படிக்கும் பெற்றோர்களும் , பொதுமக்களும் தங்கள் பங்களிப்பை வழங்கினர். 
இந்நிகழ்வில் ஹார்வார்ட் இருக்காய் குழுவின் சார்பாக முனைவர். சொர்ணம் சங்கர் அவர்கள் கலந்துகொண்டு ஹார்வார்ட் இருக்கையின் முக்கியத்துவம், அதன் நிதி திரட்டும் திட்டங்கள் ஆகியவை குறித்து விளக்கினார். 
பள்ளியின் முதல்வர் திரு.பாஸ்கர் மற்றும் செயற்குழு உறுபினர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் என்று அனைவரும் ஒருங்கிணைந்து இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இதில் திரட்டிய நாற்பதாயிரம் வெள்ளிகளை ( சுமார் 25 லட்சம் இந்திய மதிப்பில் )  நவம்பர் 11, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் குழந்தைகள் விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த ஹார்வார்ட்  பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளர் திரு. ஜோனாதன் ரிப்ளி மற்றும் மருத்துவர். ஜானகிராமன், முனைவர் சொர்ணம் சங்கர் ஆகியோரை வள்ளுவன் பள்ளிக்கு அழைத்து சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து பள்ளியின் செயற்குழு மாணவர்கள் மத்தியில் நன்கொடையை ஹார்வார்ட் இருக்கை குழுவினரிடம் வழங்கினர். இதில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த திரு. ஜோனாதன் ரிப்ளி மற்றும் மருத்துவர். ஜானகிராமன் இருவரும் வள்ளுவன் தமிழ்ப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினர். 

by Swathi   on 17 Nov 2017  0 Comments
Tags: Harvard Tamil Chair   VTA   Valluvan Tamil Academy   ஹார்வார்ட் தமிழ் இருக்கை   வள்ளுவன் தமிழ் மையம்        
 தொடர்புடையவை-Related Articles
ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்காக வெர்ஜினியாவில் இயங்கும்  வள்ளுவன் தமிழ் மையம்  40000 வெள்ளிகளை திரட்டியது .. ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்காக வெர்ஜினியாவில் இயங்கும் வள்ளுவன் தமிழ் மையம் 40000 வெள்ளிகளை திரட்டியது ..
ஹார்வர்டில் தமிழ் இருக்கைக்காக அமெரிக்காவில் நடைபெற்ற பிரமாண்ட பேரணி.. ஹார்வர்டில் தமிழ் இருக்கைக்காக அமெரிக்காவில் நடைபெற்ற பிரமாண்ட பேரணி..
அமெரிக்க இலெளடெளன் (Loudoun) மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு அங்கீகாரம் கிடைக்க  1200 கையெழுத்து பிரதிகளுடன் பெருமுயற்சி அமெரிக்க இலெளடெளன் (Loudoun) மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு அங்கீகாரம் கிடைக்க 1200 கையெழுத்து பிரதிகளுடன் பெருமுயற்சி
தமிழ் பள்ளியில் இடம் கிடைக்காமல் அவதியுறும் அமெரிக்கத் தமிழர்கள்... பள்ளியின் முதல் நாள் வகுப்பிற்கு கட்டுக்கடங்காத கூட்டம்.. - இது கனவா? தமிழ் பள்ளியில் இடம் கிடைக்காமல் அவதியுறும் அமெரிக்கத் தமிழர்கள்... பள்ளியின் முதல் நாள் வகுப்பிற்கு கட்டுக்கடங்காத கூட்டம்.. - இது கனவா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.