|
|||||
சென்னை உயர்நீதிமன்றத்தில் பயன்பாட்டுக்கு வந்த வாய்ஸ் மெசேஜ் தொழில்நுட்பம் |
|||||
சென்னை உயர் நீதிமன்றத்தில் வாய்ஸ் மெசேஜ் என்ற தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்கு வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்புக் கிடைத்துள்ளது. . இதனால் நீதிமன்ற உத்தரவுகள் வெகு விரைவில் வெளிவர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்) தொழில்நுட்பம் வெகு வேகமாகப் பரவி வருகிறது. மனிதக் கண்டுபிடிப்பின் அடுத்த பரிணாமமாகக் கருதப்படும் இந்தத் தொழில் நுட்பம் மனிதனின் பல்வேறு பணிகளை எளிமையாக்கும். இந்தத் தொழில் நுட்பம் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த நிலையில், இதன் முன்னோடியான வாய்ஸ் மெசேஜ் தொழில்நுட்பம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படுகிறது.
வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் உத்தரவைப் பிறப்பிக்கும்போதே தானாக திரையில் அச்சாகும். நீதிபதிகளின் சுருக்கெழுத்தர் இந்தப் பதிவை உடனே எடுத்து உத்தரவுகளைச் சரிபார்க்க முடியும். இதன்மூலம் வழக்குகளில் ஒரே நாளில் தீர்ப்பு, உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும்.
இந்தத் தொழில்நுட்பத்தை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.பரதச் சக்கரவர்த்தி நீதிமன்றத்தில் பயன்படுத்தினார். அவர் வழக்கு விசாரணை முடிந்து உத்தரவுகளை இந்தத் தொழில்நுட்பம் மூலம் பிறப்பித்தபோது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர்கள் எல்இடி திரையில் உத்தரவுகளைப் பார்த்தனர். இதன் மூலம் நிலுவை வழக்குகள் பெருமளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
|
|||||
by hemavathi on 04 Mar 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|