LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF
- சுதந்திரப்போராட்ட தமிழர்கள்

அ வைத்தியநாதய்யர்

அ வைத்தியநாதய்யர் (1890-1955) மதுரை வைத்தியநாதய்யர் என அறியப்படும் இவர் இந்திய விடுதலைப்போராட்ட வீரர்.
இளமைப்பருவம்
தஞ்சாவூர் மாவட்டம் விஷ்ணாம்பேட்டையில் அருணாசலம் அய்யர்-லட்சுமி அம்மாள் மகனாகப் பிறந்த வைத்தியநாதய்யர் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியிலும், மதுரைக் கல்லூரி மற்றும் சென்னை மாநிலக் கல்லூரியில் படித்தார். பின்னர் வழக்கறிஞர் ஆனார்.
சுதந்திரப் போராட்டத்தில்
புகழ்பெற்ற வழக்கறிஞரான அவர் செல்வம் ஈட்ட வாய்ப்பு கிடைத்தபோதும் அதைவிடுத்து நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தன்னையும் தனது குடும்பத்தையும் ஈடுபடுத்திக் கொண்டார். வேதாரண்யத்தில் நடந்த உப்புச்சத்தியாக் கிரகத்தின்போது ராஜாஜி கைதான பின் அங்கு நடந்த கூட்டத்தில் வைத்தியநாதய்யர் தடையை மீறிப் பேசினார். அப்போது "புளியமர விளாரால்' அய்யரை தாக்கிய ஆங்கிலேயப் போலீஸார் அவரை சுமார் அரைகிலோ மீட்டர் தூரம் தரையில் இழுத்துச் சென்று சித்திரவதை செய்தனர். உடலெங்கும் காயத்துடன் சிறையிலும் அடைத்தனர். கள்ளுக்கடை மறியல், சட்டமறுப்பு இயக்கம் என ஒவ்வோர் விடுதலைப் போராட்டத்திலும் ஆங்கிலேயப் போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டவர் ஆவார். விடுதலைப் போராட்டத்துக்கான செலவுக்காக தனது மனைவியின் நகைகளையும், வீட்டுப் பொருள்களையும் அடகுவைத்தும், விற்றும் பணம் அளித்தவர். நீதிமன்ற அபராதத்துக்காக ஆங்கிலேய அரசு அவரது கார் மற்றும் சட்டப்புத்தகங்களை ஜப்தி செய்துள்ளது.
சுதந்திரப் போராட்டத்தில் குடும்பம்
தனிநபர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தனது மனைவி அகிலாண்டம்மாளை ஈடுபடச் செய்தார். இதனால் அகிலாண்டம்மாள் பல மாதம் வேலூர் சிறையில் கடும்தண்டனையும் அனுபவித்தார். தனது இளையமகன் சங்கரனையும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவைத்தார். சங்கரனும் பலமாதம் சிறையில் வாடினார். வைத்தியநாதய்யர் அலிப்புரம் சிறையில் இருந்தபோது அவரது மூத்த மகன் இறந்தார். இதனால் அவரால் மகன் இறுதிச் சடங்கில் கூட பங்கேற்க முடியவில்லை. மகளின் திருமணத்தைக்கூட சிறை தண்டனை பரோல் காலத்திலேயே நடத்தமுடிந்தது. அந்த அளவுக்கு சுதந்திரத்துக்காக சிறையில் பல ஆண்டுகள் கொடுமை அனுபவித்த "தியாகதீபம்' வைத்தியநாதய்யர்.
தீண்டாமை ஒழிப்பு
அரிசனசேவக சங்கத்தின் தலைவராக திகழ்ந்த மதுரை நகர காங்கிரஸ் தலைவர் வைத்தியநாதய்யர் வீட்டில் எப்போதும் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் தங்கியிருந்தனர். அவர் தாழ்த்தப்பட்ட மக்களை ஆலயத்துக்குள் அழைத்துச் செல்வதில் தீவிரமாக இருந்தார்.
1934 -ல் மதுரையிலிருந்து நாகர்கோவிலுக்கு அரிசன மக்களை தம்மோடு அழைத்துச் சென்ற அவர் நாகநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்யவைத்தார். இதுபோல பல கோயில்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்றார்.செய்வதில் சிறந்திருக்கிறார்கள்.
அரிசனர், நாடார் இனத்தினர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள்மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நுழையத் தடை என்றொரு நிலை இருந்து பின்னர் 1939-ல் ஆலய பிரவேசப் போராட்டம் நடந்த பின்னரே அனைத்து சமுகத்தினரும் நுழைய அனுமதிக்கப்பட்டனர். 1937-ல் மகாத்மா காந்தி தமிழகம் வந்த போது, இந்து அரிசனங்களையும், நாடார் சமூகத்தினரையும் கோவிலுக்குள் அனுமதி மறுக்கப் பட்டுள்ளது என்பதை அறிந்து, அதைக் கண்டித்து தானும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள்மீனாட்சியம்மன் ஆலயத்திற்கு செல்ல மறுத்து விட்டார். காங்கிரசாரிடமும், ஆச்சாரக் காப்பாளர்களிடமும் சலசலப்பை ஏற்படுத்திய நிகழ்வு மகாத்மா காந்தியின் மறுப்பு. 1930-க்குப் பிறகு தாழ்த்தப்பட்டோர் ஆலயங்களுக்குள் நுழைவது குறித்து வலியுறுத்தும் எண்ணம் மகாத்மா காந்தியிடம் இருந்தது.
வழக்கறிஞர் வைத்தியநாதய்யர் தலைமையில், அப்போதைய சென்னை ராஜதானியின் பிரதம மந்திரியான ராஜாஜி வழிகாட்டுதலுடனும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆதரவுடனும் ஆலயப் பிரவேசம் நடத்த ஆலோசிக்கப்பட்டது. மீனாட்சியம்மன் கோவில் நிர்வாக அதிகாரியும் ‘பச்சைக்கொடி‘ காட்டினார். அர்ச்சகர்கள் மத்தியில் இத்தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
8.7.1939-ல் காலை 10 மணிக்கு கக்கன், முருகானந்தம், பூவலிங்கம், சின்னையா, அரிசன தேவாலய ஊழியர் முத்து என ஐந்து அரிசன சமூகத்தினரும். விருதுநகர் நகராட்சி உறுப்பினராக இருந்த எஸ்.எஸ்.சண்முக நாடாருடன் சேர்ந்து ஆறு பேர் வைத்திய நாதய்யருடன் ஆலயத்தில் நுழைந்து வணங்கினர். ஆலயப்பிரவேசம் செய்தால் வைத்தியநாதய்யரைக் கொன்றுவிடுவதாகக் கூட சிலர் மிரட்டியுள்ளனர். ஆனால் எதற்கும் அஞ்சாமல் அவர் தாழ்த்தப்பட்ட மக்களுடன் தனது ஆதரவாளர் புடைசூழ ஆலயப் பிரவேசம் செய்தார். இதற்காக அவர் பிராமணர்களால் சாதி விலக்கம் செய்யப்பட்டார். ஆனாலும் அவர் சோர்ந்துவிடவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக அவர் தீவிரமாகப் போராடினார்.
அதன் பிறகு எதிர்ப்பு மேலும் கூடியது. இருந்தாலும் ஆலயப் பிரவேசத்தை சட்டப் பூர்வமாக அங்கீகரித்து சட்டம் பிறப்பித்தார் ராஜாஜி. இதையறிந்து ‘அற்புதம்‘ என பாராட்டினார் காந்தி. குறிப்பிட்ட சமூகத்தினரை கோவிலுக்குள் வரவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தவர்கள் இந்த நுழைவைத் தாங்க முடியாமல், மீனாட்சி கோவிலை விட்டு வெளியேறி விட்டாள் என்று கூறி, மதுரை தமிழ்ச்சங்கம் சாலையில் நடேசய்யர் பங்களாவில் மீனாட்சி கோவில் அமைத்து அங்கு பூசையும் நடத்தியுள்ளனர். 1945 வரை இக்கோவிலில் பூசை நீடித்து பிறகு சிதைந்து போனது. பின்னர் பழையபடி மீனாட்சியம்மன் கோவிலுக்கே திரும்பியுள்ளார்கள் அங்கிருந்த அர்ச்சகர்கள்.
முன்னதாக ஆலயப் பிரவேசத்தை ஆதரித்து நடந்த மதுரைக் கூட்டத்தில் பெரியார் பங்கேற்றபோது அவரது மேடையில் தீவைத்தனர். அப்போது மேடைக்கே ஓடிவந்து பெரியாரை தனது காரில் அழைத்துச் சென்று காப்பாற்றியவர் வைத்தியநாதய்யர்.
மறைவு
நாட்டுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தனது வாழ்வை அர்ப்பணித்த வைத்தியநாதய்யர் மேலூர் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்து மக்கள் நலப்பணிகளைச் செய்துள்ளார். தியாகச் சீலரான வைத்தியநாதய்யர் 1955 பிப்ரவரி 23 -ல் உயிரிழந்தார்.

by Swathi   on 27 Nov 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பன்முகத் திறன் கொண்டவர் ஞாநி சங்கரன் பன்முகத் திறன் கொண்டவர் ஞாநி சங்கரன்
தோழர் இரா.நல்லகண்ணு 99-வது பிறந்தநாள் தோழர் இரா.நல்லகண்ணு 99-வது பிறந்தநாள்
வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்காக செலவிட்டவர் மைதிலி சிவராமன் வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்காக செலவிட்டவர் மைதிலி சிவராமன்
சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவி பாரதி சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவி பாரதி
கர்நாடக இசையுலகின் பேரரசி எம். எஸ். சுப்புலட்சுமி கர்நாடக இசையுலகின் பேரரசி எம். எஸ். சுப்புலட்சுமி
உவமை கவிஞர் சுரதா உவமை கவிஞர் சுரதா
நூற்றாண்டு கண்ட விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா நூற்றாண்டு கண்ட விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா
மனித நேயம் மிக்கவராக வாழ்ந்தவர் தியாகராஜபாகவதர் மனித நேயம் மிக்கவராக வாழ்ந்தவர் தியாகராஜபாகவதர்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.