LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- சொற்களின் பொருள் அறிவோம்

ஆகிய, முதலிய, போன்ற - இந்த மூன்று சொற்களுக்கும் இடையே என்ன வேறுபாடு ?

 ஆகிய, முதலிய, போன்ற – இச்சொற்கள் அடுத்து ஒரு பெயர்ச்சொல்லால் மட்டுமே பின் தொடரப்படவேண்டும் என்பதால் பெயரெச்சம் எனலாம்.

சனி ஞாயிறு திங்கள் ஆகிய நாள்களில் நாங்கள் உதகை சென்றிருந்தோம்.

சித்திரை வைகாசி முதலிய பன்னிரண்டு மாதங்களும் தமிழ் மாதங்களாம்.

ஆடு மாடு போன்ற கால்நடைகளை வளர்த்தால் நல்ல இலாபமிருக்கிறது.

ஆகிய - என்கின்ற பயன்பாட்டில் முன்னால் சொல்லப்பட்டவை முழுமையாகத் தொகுக்கப்பட்டுவிடுகிறது. சனி ஞாயிறு திங்கள் – இந்த மூன்று நாள்கள் மட்டுமே தொகுப்பில் இருக்கிறது. சனிக்கு முன்புள்ள வெள்ளியோ திங்களை அடுத்துள்ள செவ்வாயோ இத்தொகுப்பில் உடன்வர இயலாது. தொகுக்கப்பட்ட முழுமையான பட்டியல் என்றால் ஆகிய போடுக !

முதலிய - என்கின்ற பயன்பாட்டில் முன்னால் சொல்லப்பட்டவை ஒரு தொகுப்பின் முதல் சில பெயர்களாகும். சித்திரை வைகாசி முதலிய பன்னிரண்டு மாதங்கள். அ ஆ இ ஈ முதலிய உயிரெழுத்துகள். இந்தப் பயன்பாட்டில் தொகுக்கப்பட்டுள்ளவை ஒரு நீள் சங்கிலியின் முதல் சில கண்ணிகள். அவற்றை அடுத்து வரிசையில் மீதமுள்ளவை உள்ளன என்று பொருள் கொள்ளவேண்டும்.

போன்ற - என்கின்ற பயன்பாட்டில் முன்னால் சொல்லப்பட்டவை ஏதாவது ஒரு வகையில் உவமை கொள்ளத்தக்க, இனமாகக் கொள்ளத்தக்க, நிகரான ஒன்றாக இருந்தால் போதுமானது. ஆடு மாடு போன்ற கால்நடைகளை வளர்த்தால் நல்ல இலாபமிருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகள் தமிழ் நாட்டில் இருக்கின்றன.

இந்த விளக்கங்களை ஒரே வாக்கியத்தில் உதாரணப் படுத்துகிறேன், பாருங்கள் :-

தொல்காப்பியம் நன்னூல் ஆகிய இலக்கண நூல்களில் உள்ள எழுத்திலக்கணம் சொல்லிலக்கணம் முதலிய பகுதிகளைக் கற்றால் ஒழிய இதைப் போன்ற ஐயங்களிலிருந்து விடுபடுவது அரிது !

by Swathi   on 17 Dec 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு – 3 -  பேராசிரியர் முனைவர் பா. இறையரசன் – பகுதி – 2 தகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு – 3 - பேராசிரியர் முனைவர் பா. இறையரசன் – பகுதி – 2
தகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு- 3 - பேராசிரியர் முனைவர்.பா.இறையரசன்- பகுதி-1 தகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு- 3 - பேராசிரியர் முனைவர்.பா.இறையரசன்- பகுதி-1
தகைமைசால் தமிழறிஞர்கள் - முனைவர். தெய்வசுந்தரம் நயினார் தகைமைசால் தமிழறிஞர்கள் - முனைவர். தெய்வசுந்தரம் நயினார்
உலகத் தாய்மொழி நாள், 21 பிப்ரவரி | தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன? - இஸ்ரோ தலைவர் டாக்டர்.மயில்சாமி அண்ணாதுரை உலகத் தாய்மொழி நாள், 21 பிப்ரவரி | தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன? - இஸ்ரோ தலைவர் டாக்டர்.மயில்சாமி அண்ணாதுரை
தாய்மொழி முக்கியத்துவம் - பன்னாட்டு அறிஞர்களின் சிற்றுரை தாய்மொழி முக்கியத்துவம் - பன்னாட்டு அறிஞர்களின் சிற்றுரை
தாய்மொழியாம் தமிழுக்கு நம் வாழ்நாளில் ஒரு நன்மையேனும் செய்ய வேண்டுமெனில் இவற்றைச் செய்யுங்கள்.  1 தாய்மொழியாம் தமிழுக்கு நம் வாழ்நாளில் ஒரு நன்மையேனும் செய்ய வேண்டுமெனில் இவற்றைச் செய்யுங்கள். 1
"ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்? ஒரு எளிய விளக்கம்
என்னய்யா சும்மா தமிழ் தமிழ்-ன்னு என்ன இருக்கு அதில்?  என்னய்யா சும்மா தமிழ் தமிழ்-ன்னு என்ன இருக்கு அதில்? 
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.