LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

ஆம் ஆத்மி தமிழகத்தில் சாதிக்குமா?

தலைநகர் டெல்லியில் 15 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியை கூட்டித் தள்ளும் வரை துடைப்பம் சின்னத்தை  காங்கிரசும், பிஜேபி-யும் ஏளனமாகத்தான் பார்த்தது. முதல்வன் படத்தில் வரும் வசனம் போல் அரசியலுக்கு வந்து பாருங்கள், அப்போதுதான் நாங்கள் படும் சிரமம் தெரியும் என்று அடிக்கடி ஒரு தத்துவத்தை உதிர்த்து வந்தது இந்த பழம்பெரும் கட்சிகள். இப்படி ஒரு மாற்றம் ஒரே தேர்தலில் ஏற்படும் என்றோ தன் இருப்பு மிகப்பெரிய கேள்விக்குறி ஆகும் என்றோ இரு கட்சிகளுமே நினைத்துகூடபார்க்கவிலை. 

 

இதைப் பார்க்கும்போது நமக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை ஒரு நிறுவனத்தின் உயரதிகாரிக்கு உதவியாளர் என்று ஒருவர் இருப்பார், அவர் சொல்வதை தட்டச்சு செய்ய ஒருவர் , கார் ஓட்ட ஒருவர் என்று பலர் இருந்தால்தான் ஒருவர் நிர்வாகியால் இயங்கமுடியும் என்ற பிம்பம் இருந்தது. இன்று 30-35 வயதில் நிர்வாகம் படித்து தலைமை நிர்வாகிகளாக வரும் பல இளைஞர்கள், யாருடைய உதவியும் இல்லாமல் தானே கைபேசியில் இணையம் பயன்படுத்தி, தானே வண்டியை ஒட்டி, தன் வேலையை தானே செய்வது மிகவும் எளிமையாகவும், வேகமாகவும்,வசதியாகவும்  இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளார்கள். மேலும் இதுவரை இயலாமையாலும், புதிய தொழில்நுட்பமின்மை அல்லது கற்க ஆர்வமின்மையாலும் முந்தைய தலைமுறை நிர்வாகிகள் சிரமப்பட்டார்கள், ஆனால் அதையே தனக்கு சாதகமாக, பெருமையாக,கம்பீரமாக  மாற்றி வைத்திருந்தார்கள். அதை இன்றைய இளைய தலைமுறை மாற்றியதைப் பார்த்து முந்தைய தலைமுறை விழி பிதுங்கி பார்த்துக்கொண்டுள்ளதை அலுவலகங்களில் காணலாம். இந்த மாற்றம்  காலத்தின் மாற்றம். அரசியலுக்கும் இது பொருந்தும். 

 

காங்கிஸ்-ம், பிஜேபியும் செய்ய சிரமப்படுவதை ஒரு நல்லவர், இளைஞர், நன்கு படித்தவர், நாட்டுப்பற்று மிக்கவர் மிக அசாதாரணமாகச் செய்யமுடியும். தேர்தலில் வெற்றிபெறுவதுதான் சிரமமே தவிர, ஒரு நல்ல அரசை நடத்துவதற்கு ஒருவர் நல்லவராகவும், நிர்வாகத்திறமை உள்ளவராகவும் இருந்தால் போதும். நல்லவர்கள் பெரும்பாலும் தேர்தல் அரசியலில் வெற்றிபெருபவர்களாக இருப்பதில்லை. இதில் விதிவிலக்காக இன்று அரவிந்த் கேஜ்ரிவால் இந்தியாவில் ஒரு மகத்தான மாற்றத்திற்கு, புதிய அரசியலுக்கு வழிகாண்பித்திருக்கிறார். ஆம் ஆத்மி என்பதை அரசியலாகப் பார்ப்பதைவிட அதை ஒரு "கருத்தாக"  மக்கள் தற்போதைய ஊழல் நிர்வாகத்தில் நம்பிக்கையற்றுபோய் மாற்றத்திற்கு தயாராகிவிட்டார்கள் என்ற பொருளில்தான் பார்க்கவேண்டும். ஆம் ஆத்மி இன்னும் எத்தனை நாட்கள் டெல்லியில் ஆட்சிசெய்ய அனுமதிக்கப்படுவார்கள் அல்லது  வேறு எந்த மாநிலங்களில் வெற்றிவாகை சூடுவார்கள் என்பதெல்லாம் முக்கியமில்லை. இந்த அசாதாரண நிகழ்வு சொல்லும் செய்தியானது, இனி பழங்கதை பேசி ஊழலில் திளைத்த பழைய கட்சிகள் விடைபெறவேண்டும் அல்லது ஆம் ஆத்மி கொடுக்கும் அழுத்தத்தில் மாற்றத்திற்கு தயாராக வேண்டும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆம் ஆத்மிக்கு டெல்லியில் பல்வேறு சாவால்கள் காத்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அவர்களை இரண்டு பெரும் முதலைகளும் எவ்விதத்திலும் மக்களிடம் நல்லப்பெயர் பெற்றுவிடாமல் கண்ணும் கருத்துமாக காரியமாற்றுவார்கள். தேவை ஏற்பட்டால் கூட்டணி அமைத்துகூட வியூகம் வகுப்பார்கள். ஏனெனில் அவர்களது அரசியல் எதிர்காலம், ஐம்பது ஆண்டு கால இருப்பு இன்று கேள்விக்குறியாகியுள்ளது. இதை அரவிந்த் கேஜ்ரிவால் எவ்வாறு கையாளப் போகிறார் என்பதைப் பொறுத்தே ஆம் ஆத்மி ஆட்சியின் எதிர்காலம் இருக்கிறது. இருப்பினும் ஆம் ஆத்மி தொட்டதற்கெல்லாம் போராடாமல், நிர்வாகத்திறமையை வளர்த்துக்கொண்டு, இந்த கிடைத்தற்கரிய வாய்ப்பை நழுவவிடாமல் சரியான வெற்றி வியூகம் வகுத்து,  அரசை திறம்பட நடத்தி, இந்திய அரசியலில் ஒரு முன்மாதிரியை  ஏற்படுத்தவேண்டும் என்று நல்லவர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

 

தமிழகத்திற்கு வருவோம்.  இன்று தமிழகத்தில் சில வாரங்களாக காட்சிகள் மாறியவண்ணம் இருக்கிறது. முதலில் ஆம் ஆத்மி பல்வேறு குழுக்களாக செயல்பட்டு தமிழகத்தின் தனித்தன்மையை காட்டிவிட்டது. இம்மாதிரி ஒரு நிகழ்வு ஏற்படாமல் ஒரு வலுவான கட்டமைப்பை ஆரம்பத்திலேயே ஏற்படுத்த தவறியது, ஆம் ஆத்மி எந்த அளவு டெல்லி தாண்டிய அரசியலுக்கு தயாராகி இருக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது. காரணம், டெல்லியில் அவர்களது முழு கவனத்தையும் செலுத்தி, ஒரு முன்மாதிரி அரசை நடத்தி, அந்த மாதிரியை வைத்து மற்ற மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத் தனித்தன்மையுடன் தன்னாட்சி கட்டமைப்பை ஏற்படுத்தி, நிதானமாக  அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவது சாத்தியமான ஒன்றாக  இருந்திருக்கும். அவர்கள் அகல கால்வைக்கிறார்கள் என்பதும் டெல்லியை விட ஆயிரம் மடங்கு அரசியல் சிக்கல்கள் உள்ள மாநிலங்கள் மற்ற மாநிலங்கள், குறிப்பாக தமிழகம் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்களா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. ஒருவேளை அவர்கள் தமிழகத்தில் வலுவான தலைவரை அடையாளம் கண்டாலும், தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் எம்மாதிரியான நிலைப்பாட்டை, கொள்கையை எடுக்கிறார்கள் என்பதை முதலில் அறிவிக்க வேண்டும்.  காரணம், ஊழல் என்ற ஒரு பிரச்சினை முக்கியமானதாக இருந்தாலும், மற்ற தமிழகம் சார்ந்த பிரச்சினைகளில் தமிழர்கள் விருப்பத்திற்கு எதிரான முடிவு எடுத்தால், தமிழகத்தில் நிற்பது கடினம். அதில் இதுவரை ஒரு தெளிவு இல்லை. 

 

அடுத்து கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராடிவரும் போராட்டக் குழுவை, திரு.உதயகுமார் அவர்களை ஆம் ஆத்மி-க்கு அழைத்ததை செய்திகளில் பார்த்தோம். அது ஆம் ஆத்மிக்கு எந்த அளவு பயன்படும் என்பதை விட, அணுஉலைப் போராட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த அந்த போராட்டக் குழுவிற்கு பல்வேறு பலன்களை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே, போராட்டக்குழு அவர்கள் விடுத்துள்ள கோரிக்கைகள் நிறைவேறும் பட்சத்தில் ஆம் ஆத்மியுடன் சேர வாய்ப்புள்ளது. குறிப்பாக அவர்கள் ஆதரவு உள்ள மூன்று மாவட்டங்களில் வெற்றிக்குக் கைகொடுக்கலாம். 

 

அடுத்ததாக தேமுதிக விஜயகாந்த், ஆம் ஆத்மியில் சேர திட்டமிடுவதாகத் தெரிகிறது. இது எந்த அளவு பலன் தரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆம் ஆத்மி என்பது ஊழல் தவிர்த்து மாற்றத்தை கொண்டுவர நினைக்கும் கட்சி, அனால் ஒரு அருமையான எதிர்க்கட்சித் தலைவர் என்ற வாய்ப்பு வந்தும் அதை திறம்பட கையாளாமல் கோட்டை விட்டுள்ள விஜயகாந்த், ஆம் ஆத்மியில் சேர்வதை ஆம் ஆத்மி விரும்புமா என்பதை பார்க்கவேண்டும். ஒருவேளை ஆம் ஆத்மி தன்னை தமிழகத்தில் நிலைநிறுத்த தேமுதிக-வை வாய்ப்பாக பயன்படுத்த நினைத்தால் அது இருவருக்கும் நல்லதாகவே முடியும். மேலும் மக்கள் பலம் உள்ள வேறு எந்த கட்சியுடனும் தமிழகத்தில் கூட்டணி வைப்பது ஆம் ஆத்மியின் வளர்ச்சிக்கு உதவாது என்பதே அரசியல் நோக்கர்களின் பார்வையாகும்.

 

இன்றைய காலக்கட்டத்தில் ஆம் ஆத்மி போன்று ஒரு மாற்று அரசியல், பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வெற்றி வாய்ப்புள்ள கட்சி ஒன்று தமிழகத்தில் உருவாகவில்லை என்பதும், அப்படி ஒரு குழுவோ, தலைமையோ இன்னும் அடையாளம் காணப்படவில்லை  என்றே தோன்றுகிறது. அறிக்கை விடும் கட்சிகளைவிட, மைக்கை கடித்து துப்பும் தலைவர்களைவிட, அடுக்குமொழி வசனங்களை அள்ளிவிடும் வித்தகர்களைத் தாண்டி, முக்கியமான மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்து அதற்காக நேர்மையாக, நெஞ்சுறுதியுடன் கடைசி வரை போராடும் கட்சி ஒன்று இல்லை என்றே தோன்றுகிறது.

 

ஆம் ஆத்மி தன் வெற்றிக்கு பிரதானமாக மின் கட்டணம், விஐபி கலாச்சாரம் போன்ற சில உடனடிப் பிரச்சினைகளை கையில் எடுத்து உறுதியாகப் போராடி, தொழில்நுட்ப வசதிகளை முழுமையாகப் பயன்படுத்தி, தங்கள் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்ற முறை அரசியலில் மிகவும் புதியது. இன்று தமிழகத்தில் களத்தில் உள்ள  பல்வேறு கட்சிகள் தங்களை மக்களின் மிக அருகாமையில் கொண்டு செல்ல சரியாக வியூகம் வகுக்கவில்லை என்பதே நிதர்சனம்.  

 

அடுத்ததாக, பல்வேறு தமிழ் அமைப்புகள் ஒன்றிணைத்து தமிழர் அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று சிந்திப்பதை காண முடிகிறது. தமிழர்களுக்குள், தமிழ் அமைப்புகளுக்குள் ஒற்றுமை என்ற ஒன்று உருவானால் அதுவே தேர்தலில் பெரும் வெற்றியை விட மிகப்பெரிய வெற்றியாக இருக்கும். மேலும் தமிழர் சரித்திரத்திலும் இடம்பெறும். அப்படி ஒரு சாத்தியம் இருப்பதாகத் தோன்றவில்லை. மேலும் அவர்கள் ஒன்றினைந்தாலும் மக்களின் நம்பிக்கையைப் பெற ஆண்டுகள் களப்பணி  ஆற்றவேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே.  

 

எனவே இப்போது இருக்கும் தமிழக அரசியல் சூழ்நிலையில் “எதுவுமே நடக்காததற்கு பதில் ஏதாவது நடந்தால் சரி”  என்ற பார்வையில் பார்த்தால்,  ஆம் ஆத்மி தமிழகத்தில் வளர்வது பல்வேறு நன்மையை ஏற்படுத்தும். அதாவது தமிழகத்தில் ஆழ காலூன்றிய கட்சிகளின் ஓட்டை பிரிப்பதற்கும், மாற்றம் வேண்டும் என்ற கருத்தை வலுப்படுத்தவும், பழைய அரசியல் கலாச்சார, சிந்தாந்தங்களை புரட்டிப் போடவும் இது மிகவும் பயன்படும். மிகப்பெரிய வெற்றியை உடனே  அடையவில்லை என்றாலும், எதிகாலத்தில் உருவாகும் புதிய அரசியலுக்கு பாதை அமைக்கும் பணியாக இதைப் பார்க்கலாம். மேலும், தமிழகத்தின் ஓட்டுவங்கியை வைத்திருக்கும் இருபெரும் கட்சிகளிடம் உள்ள ஒட்டுக்களை கணிசமாக குறைப்பதற்கும், புதிதாக வரும்  இளம் வாக்காளர்கள், இன்று இருக்கும் எதோ ஒரு கட்சியில் ஐக்கியமாகாமல்,  ஆம் ஆத்மி போன்ற புதிய கட்சிக்கு வாக்களிக்கும் நிலை வரும். அது பல்வேறு அரசியல் மாற்றங்களை எதிர்காலத்தில் தமிழகத்தில் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.  தேசிய அரசியல் தமிழகத்திற்கு பயனளிக்குமா என்ற ஐயம் இருந்தாலும், தமிழக அரசியல் குட்டை ஏகத்திற்கு குழம்பியுள்ளது, எனவே உடனடித் தேவையாக கொஞ்சம் நல்ல தண்ணீரை பாய்ச்ச வேண்டியது அவசியமாகிறது. காரணம் இன்று தமிழகத்தில் சாதிச் கட்சிகள் மற்றும் ஊழல் கட்சிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டியது அனைவரின் உடனடித் தேவையாகும். இல்லையேல் தமிழகம் ஒரு நூற்றாண்டு பின்னால் கொண்டுசென்றுவிடும். அதன் எதிர் விளைவை நினைக்கும்போது, தமிழக நலனைப் போற்றும் ஒரு வலிமையான கட்சி இல்லாதபோது, ஆம் ஆத்மி போன்ற தேசிய சிந்தனை அரசியலை  விட்டால் வேறு வழியில்லை  என்ற எதார்த்த நிலை புரியும். 


-இலக்கியன் 

தலைநகர் டெல்லியில் 15 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியை கூட்டித் தள்ளும் வரை துடைப்பம் சின்னத்தை நக்கலாகத்தான் காங்கிரசும், பிஜேபி-யும் பார்த்தது. முதல்வன் படத்தில் வரும் வசனம் போல் அரசியலுக்கு வந்து பாருங்கள், அப்போதுதான் நாங்கள் படும் சிரமம் தெரியும் என்று அடிக்கடி ஒரு தத்துவத்தை உதிர்த்து வந்தது இந்த பழம்பெரும் கட்சிகள். இப்படி ஒரு மாற்றம் ஒரே தேர்தலில் ஏற்படும் என்றோ தன் இருப்பு மிகப்பெரிய கேள்விக்குறி ஆகும் என்றோ இரு கட்சிகளுமே நினைத்துப்பார்க்கவிலை. 
 
இதைப் பார்க்கும்போது நமக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை ஒரு நிறுவனத்தின் உயரதிகாரிக்கு உதவியாளர் என்று ஒருவர் இருப்பார், அவர் சொல்வதை தட்டச்சு செய்ய ஒருவர் , கார் ஓட்ட ஒருவர் என்று பலர் இருந்தால்தான் ஒருவர் நிர்வாகி இயங்கமுடியும் என்ற பிம்பம் இருந்தது. இன்று 30-35 வயதில் நிர்வாகம் படித்து தலைமை நிர்வாகிகளாக வரும் பல இளைஞர்கள் யாருடைய உதவியும் இல்லாமல் தானே கைபேசியில் இணையம் பயன்படுத்தி, தானே வண்டியை ஒட்டி, தன் வேலையை தானே செய்வது மிகவும் எளிமையாகவும், வேகமாகவும்,வசதியாகவும்  இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளார்கள். மேலும் இதுவரை இயலாமையாலும், புதிய தொழில்நுட்பமின்மை அல்லது கற்க ஆர்வமின்மையாலும் முந்தைய தலைமுறை நிர்வாகிகள் சிரமப்பட்டார்கள், ஆனால் அதையே தனக்கு சாதகமாக, பெருமையாக,கம்பீரமாக  மாற்றி வைத்திருந்தார்கள். அதை இன்றைய இளைய தலைமுறை மாற்றியதைப் பார்த்து முந்தைய தலைமுறை விழி பிதுங்கி பார்த்துக்கொண்டுள்ளதை அலுவலகங்களில் காணலாம். இது காலத்தின் மாற்றம். 
 
காங்கிஸ்-ம், பிஜேபியும் செய்ய சிரமப்படுவதை ஒரு நல்லவர், இளைஞர், நன்கு படித்தவர், நாட்டுப்பற்று மிக்கவர் மிக அசாதாரணமாகச் செய்யமுடியும். தேர்தலில் வெற்றிபெறுவதுதான் சிரமமே தவிர, ஒரு நல்ல அரசை நடத்துவதற்கு நல்லவராகவும், நிர்வாகத்திறமை உள்ளவராகவும் இருந்தால் போதும். நல்லவர்கள் பெரும்பாலும் தேர்தல் அரசியலில் வெற்றிபெருபவர்களாக இருப்பதில்லை. இதில் விதிவிலக்காக இன்று அரவிந்த் கேஜ்ரிவால் இந்தியாவில் ஒரு மகத்தான மாற்றத்திற்கு, புதிய அரசியலுக்கு வழிகாண்பித்திருக்கிறார். ஆம் ஆத்மி என்பதை அரசியலாகப் பார்ப்பதைவிட அதை ஒரு "கருத்தாக"  மக்கள் தற்போதைய ஊழல் நிர்வாகத்தில் நம்பிக்கையற்றுபோய் மாற்றத்திற்கு தயாராகிவிட்டார்கள் என்ற பொருளில்தான் பார்க்கவேண்டும். ஆம் ஆத்மி இன்னும் எத்தனை நாட்கள் டெல்லியில் தாக்குப்பிடிப்பார்கள் அல்லது  வேறு எந்த மாநிலங்களில் வெற்றிவாகை சூடுவார்கள் என்பதெல்லாம் முக்கியமில்லை. இந்த அசாதாரண நிகழ்வு சொல்லும் செய்தி, இனி பழங்கதை பேசி ஊழலில் திளைத்த பழைய கட்சிகள் விடைபெறவேண்டும் அல்லது ஆம் ஆத்மி கொடுக்கும் அழுத்தத்தில் மாற்றத்திற்கு தயாராக வேண்டும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆம் ஆத்மிக்கு புது டெல்லியில் பல்வேறு சாவால்கள் காத்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அவர்களை இரண்டு பெரும் முதலைகளும் எவ்விதத்திலும் மக்களிடம் நல்லப்பெயர் பெற்றுவிடாமல் கண்ணும் கருத்துமாக காரியமாற்றுவார்கள். தேவை ஏற்பட்டால் கூட்டணி அமைத்துகூட வியூகம் வகுப்பார்கள். ஏனெனில் அவர்களது அரசியல் எதிர்காலம், ஐம்பது ஆண்டு கால இருப்பு இன்று கேள்விக்குறியாகியுள்ளது. இதை அரவிந்த் கேஜ்ரிவால் எவ்வாறு கையாளப் போகிறார் என்பதைப் பொறுத்தே ஆம் ஆத்மி ஆட்சியின் எதிர்காலம் இருக்கிறது. இருப்பினும் ஆம் ஆத்மி தொட்டதற்கெல்லாம் போராடாமல், நிர்வாகதிறமையை வளர்த்துக்கொண்டு, இந்த கிடைத்தற்கரிய வாய்ப்பை நழுவவிடாமல் சரியான வெற்றி வியூகம் வகுத்து,  அரசை திறம்பட நடத்தி இந்திய அரசியலில் ஒரு முன்மாதிரியை  ஏற்படுத்துவார்கள் என்று நல்லவர்கள் எதிர்பார்க்கிறார்கள். 
 
தமிழகத்திற்கு வருவோம்.  இன்று தமிழகத்தில் சில வாரங்களாக காட்சிகள் மாறியவண்ணம் இருக்கிறது. முதலில் ஆம் ஆத்மி பல்வேறு குழுக்களாக செயல்பட்டு தமிழகத்தின் தனித்தன்மையை காட்டிவிட்டது. இம்மாதிரி ஒரு நிகழ்வு ஏற்படாமல் ஒரு வலுவான கட்டமைப்பை ஆரம்பத்திலேயே ஏற்படுத்த தவறியது ஆம் ஆத்மி எந்த அளவு டெல்லி தாண்டிய அரசியலுக்கு தயாராகி இருக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது. காரணம், டெல்லியில் அவர்களது முழு கவனத்தையும் செலுத்தி ஒரு முன்மாதிரி அரசை நடத்தி, அந்த மாதிரியை வைத்து மற்ற மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத் தனித்தன்மையுடன் தன்னாட்சி கட்டமைப்பை ஏற்படுத்தி நிதானமாக  அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவது சாத்தியமான ஒன்றாக  இருந்திருக்கும். அவர்கள் அகல கால்வைக்கிரார்கள் என்பதும் டெல்லியை விட ஆயிரம் மடங்கு அரசியல் சிக்கல்கள் உள்ள மாநிலங்கள் மற்ற மாநிலங்கள், குறிப்பாக தமிழகம் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்களா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. ஒருவேளை அவர்கள் தமிழகத்தில் வலுவான தலைவரை அடையாளம் கண்டாலும், தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் எம்மாதிரியான நிலைப்பாட்டை, கொள்கையை எடுக்கிறார்கள் என்பதை முதலில் அறிவிக்க வேண்டும்.  காரணம், ஊழல் என்ற ஒரு பிரச்சினை முக்கியமானதாக இருந்தாலும், மற்ற தமிழகம் சார்ந்த பிரச்சினைகளில் தமிழர்கள் விருப்பத்திற்கு எதிரான முடிவு எடுத்தால், தமிழகத்தில் நிற்பது கடினம். அதில் இதுவரை ஒரு தெளிவு இல்லை. 
 
அடுத்து கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராடிவரும் போராட்டக் குழுவை, திரு.உதயகுமார் அவர்களை ஆம் ஆத்மி-க்கு அழைத்ததை செய்திகளில் பார்த்தோம். அது ஆம் ஆத்மிக்கு இது எந்த அளவு பயன்படும் என்பதை விட, அணுஉலைப் போராட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த அந்த போராட்டக் குழுவிற்கு பல்வேறு நலன்களை ஏற்படுத்தும். எனவே, போராட்டக்குழு அவர்கள் விடுத்துள்ள கோரிக்கைகள் நிறைவேறும் பட்சத்தில் அதில் சேர வாய்ப்புள்ளது. குறிப்பாக அவர்கள் ஆதரவு உள்ள மூன்று மாவட்டங்களில் வெற்றிக்கு கைகொடுக்கலாம். 
 
அடுத்ததாக தேமுதிக விஜயகாந்த், ஆம் ஆத்மியில் சேர திட்டமிடுவதாகத் தெரிகிறது. இது எந்த அளவு பலன் தரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆம் ஆத்மி என்பது ஊழல் தவிர்த்து மாற்றத்தை கொண்டுவர நினைக்கும் கட்சி, அனால் ஒரு அருமையான எதிர்க்கட்சித் தலைவர் என்ற வாய்ப்பு வந்தும் அதை திறம்பட கையாளாமல் கோட்டை விட்டுள்ள விஜயகாந்த் ஆம் ஆத்மியில் சேர்வதை ஆம் ஆத்மி விரும்புமா என்பதை பார்க்கவேண்டும். ஒருவேளை ஆம் ஆத்மி தன்னை தமிழகத்தில் நிலைநிறுத்த தேமுதிக-வை வாய்ப்பாக பயன்படுத்த நினைத்தால் அது இருவருக்கும் நல்லதாகவே முடியும். மேலும் மக்கள் பலம் உள்ள வேறு எந்த கட்சியுடனும் தமிழகத்தில் கூட்டணி வைப்பது ஆம் ஆத்மியின் வளர்ச்சிக்கு உதவாது என்பதே அரசியல் நோக்கர்களின் பார்வையாகும்.
 
இன்றைய காலக்கட்டத்தில் ஆம் ஆத்மி போன்று ஒரு தெளிவான சிந்தனை உள்ள, பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வெற்றி வாய்ப்புள்ள கட்சி ஒன்று தமிழகத்தில் உருவாகவில்லை என்றே தோன்றுகிறது. அறிக்கை விடும் கட்சிகளைவிட முக்கியமான மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்து அதற்காக நேர்மையாக கடைசி வரை போராடும் கட்சி ஒன்று இல்லை என்றே தோன்றுகிறது. ஆம் ஆத்மி தன் வெற்றிக்கு பிரதானமாக மின் கட்டணம், விஐபி கலாச்சாரம் போன்ற பிரச்சினைகளை கையில் எடுத்து உறுதியாகப் போராடி, தொழில்நுட்ப வசதிகளை முழுமையாகப் பயன்படுத்தி தங்கள் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்ற முறை மிகவும் புதியது. இன்று தமிழகத்தில் களத்தில் உள்ள  பல்வேறு கட்சிகள் தங்களை மக்களின் மிக அருகாமையில் கொண்டு செல்ல சரியாக வியூகம் வகுக்கவில்லை என்பதே நிதர்சனம்.  
 
பல்வேறு தமிழ் அமைப்புகள் ஒன்றிணைத்து தமிழர் அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று சிந்திப்பதை காண முடிகிறது. தமிழர்களுக்குள், தமிழ் அமைப்புகளுக்குள் ஒற்றுமை என்ற ஒன்று உருவானால் அதுவே தேர்தலில் பெரும் வெற்றியை விட மிகப்பெரிய வெற்றியாக இருக்கும். மேலும் தமிழர் சரித்திரத்திலும் இடம்பெறும். அப்படி ஒரு சாத்தியம் இருப்பதாகத் தோன்றவில்லை. மேலும் அவர்கள் ஒன்றினைந்தாலும் மக்களின் நம்பிக்கையைப் பெற எத்தனை ஆண்டுகள் களப்பணி ஆற்றவேண்டும் என்பதும் அரசியல் அனுபவம் உள்ளவர்களால் எளிதாக அனுமானிக்க முடிந்த ஒன்றாகவே இருக்கிறது. 
 
எனவே இப்போது இருக்கும் தமிழக அரசியல் சூழ்நிலையில் “எதுவுமே நடக்காததற்கு பதில் ஏதாவது நடந்தால் சரி”  என்ற பார்வையில் பார்த்தால்,  ஆம் ஆத்மி வருவது தமிழகத்தில் ஆழ காலூன்றிய கட்சிகளின் ஓட்டை பிரிப்பதற்கும், மாற்றம் வேண்டும் என்ற கருத்தை வலுப்படுத்தவும், பழைய அரசியல் கலாச்சார, சிந்தாந்தங்களை புரட்டிப் போடவும் மிகவும் பயன்படும். அது வெற்றி அடையவில்லை என்றாலும், எதிகாலத்தில் உருவாகும் புதிய அரசியலுக்கு பாதை அமைக்கும் பணியாக இதைப் பார்க்கலாம். மேலும், தமிழகத்தின் ஓட்டுவங்கியை வைத்திருக்கும் இருபெரும் கட்சிகளிடம் உள்ள ஒட்டுக்களை கணிசமாக குறைப்பதற்கும், புதிதாக வரும்  இளம் வாக்காளர்கள், இன்று இருக்கும் எதோ ஒரு கட்சியில் ஐக்கியமாகாமல்,  ஆம் ஆத்மி போன்ற புதிய கட்சிக்கு வாக்களிக்கும் நிலை வரும். அது சில அரசியல் மாற்றங்களை எதிர்காலத்தில் தமிழகத்தில் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.  தேசிய அரசியல் தமிழகத்திற்கு பயனளிக்குமா என்ற ஐயம் இருந்தாலும், தமிழக அரசியல் குட்டை ஏகத்திற்கு குழம்பியுள்ளது, எனவே சில நல்ல தண்ணீரை பாய்ச்ச வேண்டியது அவசியமாகிறது. காரணம் இன்று தமிழகத்தில் சாதிச் கட்சிகள் அதிகரித்த வண்ணம் இருபது, தமிழகத்தை ஒரு நூற்றாண்டு பின்னால் கொண்டுசென்றுவிடும். அதன் எதிர் விளைவை நினைக்கும்போது, ஆம் ஆத்மி போன்ற தேசிய சிந்தனை அரசியலை சகித்துக்கொள்வது மேல் என்ற எதார்த்த நிலை புரியும். 
-இலக்கியன் 


by Swathi   on 21 Jan 2014  2 Comments
Tags: Aam Aadmi Party   Aam Aadmi Tamilnadu   Tamilnadu Aam Aadmi   Aam Aadmi Tamil   ஆம் ஆத்மி கட்சி   ஆம் ஆத்மி தமிழ்நாடு   தமிழ்நாடு ஆம் ஆத்மி  
 தொடர்புடையவை-Related Articles
விரைவில் ஊழல் செய்த மாநில அரசியல் தலைவர்களின் பட்டியல் வெளியிடப்படும் - ஆம் ஆத்மி !! விரைவில் ஊழல் செய்த மாநில அரசியல் தலைவர்களின் பட்டியல் வெளியிடப்படும் - ஆம் ஆத்மி !!
ஆம் ஆத்மி தமிழகத்தில் சாதிக்குமா? ஆம் ஆத்மி தமிழகத்தில் சாதிக்குமா?
ஆம் ஆத்மி தமிழக கட்சிக்கு ஆதரவை கோரிய பிரசாந்த் பூஷனிடம் நிபந்தனைகள் விதித்த கூடங்குளம் உதயகுமார் ஆம் ஆத்மி தமிழக கட்சிக்கு ஆதரவை கோரிய பிரசாந்த் பூஷனிடம் நிபந்தனைகள் விதித்த கூடங்குளம் உதயகுமார்
நாளை மறுநாள் டெல்லி முதல்வராக பதவியேற்கிறார் கெஜ்ரிவால் !! ஜன.03-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கோரிக்கை !! நாளை மறுநாள் டெல்லி முதல்வராக பதவியேற்கிறார் கெஜ்ரிவால் !! ஜன.03-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கோரிக்கை !!
காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கலாமா வாக்காளர்களிடம் கருத்து கேட்கிறது ஆம் ஆத்மி கட்சி !! காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கலாமா வாக்காளர்களிடம் கருத்து கேட்கிறது ஆம் ஆத்மி கட்சி !!
போலிஸ் பாதுகாப்பை மறுத்த அரவிந்த் கெஜ்ரிவால் !! போலிஸ் பாதுகாப்பை மறுத்த அரவிந்த் கெஜ்ரிவால் !!
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு !! டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு !!
ஆம் ஆத்மி மூட்டியிருக்கும் டெல்லி தீ மற்ற மாநிலங்களில் பரவுவது சாத்திமா?  அது பயன்தருமா? ஆம் ஆத்மி மூட்டியிருக்கும் டெல்லி தீ மற்ற மாநிலங்களில் பரவுவது சாத்திமா? அது பயன்தருமா?
கருத்துகள்
13-Mar-2014 20:24:31 ganesan said : Report Abuse
நல்ல உள்ளங்கள் சிந்தித்து இக்கட்டுரையை மனதில் கொண்டு நடந்தால் போதும் .எவ்வளவு பணிச்சுமை இருந்தாலும் நம் தலைமுறை வாழ வழிவிடவேண்டும் .
 
22-Jan-2014 07:12:09 முருகேசன் குருசாமி said : Report Abuse
சிறப்பான கட்டுரை அனைத்தையும் மிக தெளிவாக எழுதியுள்ளார்கள்.. இலக்கியன் அவர்களுக்கு நன்றி ..
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.