|
||||||||
ஆராய்ச்சி |
||||||||
நூலின் தலைப்பு “அறிவியல் அணுகுமுறையில் ஆராய்ச்சியியல்” எழுதியவர் டாக்டர் .மு.பொன்னுசாமி, பேராசிரியர், தமிழ் மொழித்துறை, சென்னைப் பல்கலைக்கழகம். பதிப்பகத்தின் முகவரி : இந்து பதிப்பகம், சின்னதோட்டம், கணியூர் அஞ்சல், கருமத்தம்பட்டி, கோயமுத்தூர்-59, 641659. வெளியான ஆண்டு 2007 ஆய்வு என்பது அறிவை தேடும் ஒரு முயற்சி, புதிய கண்டு பிடிப்புகள், பழைய கோட்பாடுகளின் தற்கால பயன்பாட்டை தீர்மானித்தல் ஆகிய முயற்சிகள் யாவும் ஆய்வு என்ப்படும்.- இது நூலாசிரியரின் முன்னுரையாக ஆரம்பிக்கிறது. இதற்கு தேவையான அடிப்படை பண்புகள். அறிவை விரிவாக்கவோ அல்லது குறிப்பிட்ட பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கிலோ ஓர் ஆய்வு அமைய வேண்டும். தகவல்களை சரியாக சேகரித்து துல்லியமாக விளக்கும் வகையில் அமைய வேண்டும் அகசார்பற்று நடு நிலையுடன் தர்க்க ரீதியில் நிகழ்வுகளை புரிந்து கொள்வது அவசியம் இறுதியாக பொறுமை அவசியம் அடிப்படை அணுகுமுறைகள் புலனறிவு மற்றும் பகுத்தறிவு ஐம்புலங்களால் உற்று நோக்கி உணரும் தகவல்களோடு பகுத்தறிவின் ஊகத்திற்கும் உட்பட்டு கோட்பாடுகளை உருவாக்குதல். அறிவு என்பது தொடக்கத்தில் தத்துவத்தோடு முழுமை பெற்றிருந்தது. தத்துவங்கள் பிரிந்த போது அறிவு தேடல்களும் பிரிய தொடங்கின, காலம் மற்றும் இடம் சார்ந்து வளர தொடங்கின. மானுடவியல் (Humanities) சமூக அறிவியல் (Social Sceince) இவைகளின் வளர்ச்சிக்கு தத்துவமும், அறிவியல் துறைகளின் வளர்ச்சிக்கு கணிதமும் உதவி புரிந்தன. தத்துவம்— வரலாறு, அரசியல், சமூகவியல் அறிவியல்- கணிதம், வானியல், இயற்பியல், வேதியியல், மருந்தியல், உயிரியியல், என பலவகையாக பிரிவுற்று வளர்ச்சி அடைந்தன. ஆய்வுகளை வகைப்படுத்தலாம்: சமூக ஆய்வு: மனித சமூக வாழ்க்கையில் பல தரப்பட்ட உறவுகளின் பரிமாணங்களை ஆய்வு செய்தல் : இதன் காரணிகளாக பண்பாடு, பொருளாதாரம், அரசியல், ஆட்சியியல், உளவியல் போன்றவைகள் மனித வாழ்க்கைக்கு சிக்கல்களை தோற்றுவிக்கிறது இரண்டு முறையில் ஆய்வுக்கு உட்படுத்தபடுகிறது. 1. கோட்பாடு, 2. செயல்முறை ஆய்வு பயன்கள்: சமூக அமைப்பு, அதன் மாற்றம், முன்னேற்றம் ஆகியவற்றை பற்றிய அறிவியல் பூர்வமான அணுகுமுறையை கொண்டு வருகிறது. சமூகத்தின் வளர்ச்சி, பாதிப்பு, இவைகளை கண்டறிந்து முன்பே அவற்றை சரி செய்ய முயற்சிக்க முடியும். சமூக விதிகளையும், சட்ட திட்டங்களையும் உருவாக்க முடியும். அறிவியல் அணுகுமுறை: “தகவல்களை அல்லது நிகழ்வுகளை முறையாகவும், தர்க்க ரீதியாகவும் உற்று நோக்கி வகைப்படுத்தி விளக்குவது அறிவியல் அணுகுமுறை: லன்ட்பெர்க் “முறையான பகுப்பாய்வு- பரிசோதனை, நிரூபணம், வரையறை, வகைப்பாடு, கணிப்பு, நடைமுறைப்படுத்துதல், ஆகியவை விதிகள்: பரிசோதனைக்கு முன் ஏற்பு (Assumptions) அம்சங்கள் உண்டு. இயற்கை ஓர் ஒழுங்கான விதிமுறையில் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது என்பது அறிவியல் கருத்து. உதாரணமாக நீர்- இரு ஹைட்ஜன், ஓர் ஆக்சிஜன் அணுக்கள் கொண்ட ஒரு மூலக்கூறு மதிப்பு சாரா அணுகுமுறை: எப்படி உள்ளது? என்பதை அறிவியல் விளக்குகிறது, நீதி நெறி கருத்துக்கள் அறிவியல் முறையில் இடம் பெறுவதில்லை உலகம் ஏன் இயங்குகிறது? அதை இயக்குபவர் யார்? இறைவன் என்றால் என்ன? போன்ற வினாக்களை அறிவியல் எழுப்புவதில்லை. கோட்பாடுகளை முறையாக உருவாக்கப்பட்டு தர்க்க ரீதியாக புரிந்து கொள்ளும் வழியை அறிவியல் கொண்டுள்ளது. இதனால் இதன் மீது நம்பகத்தன்மை உண்டு. ஆனால் அறிவியல் அணுகுமுறையில் ஆய்வாளரின் மனப்பான்மை நடுநிலையுடன் இருப்பது அவசியம். நடு நிலை: தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, முன்தீர்மானம், இருப்பதில்லை. இயற்கை நிலையை உள்ளது உள்ளபடி எடுத்துரைத்தல். ஆய்வு சிக்கலை தேர்ந்தெடுத்தல், ஆய்வு வடிவமைப்பு, தகவல் சேகரிப்பு, பரிசோதனை விளக்கம், அகசார்பற்று நடத்தப்படுவது. தர்க்க முறை: பகுத்தறிவை சார்ந்து அமைகிறது. “புகை ஏற்பட்டால் அங்கு தீ ஏற்பட்டிருக்கும்” – காரண விளைவுக்கான தர்க்க முறை அணுமானம் “மழை பெய்யாவிட்டால் நிலத்தடி நீரின் அளவு குறைந்து விடும்” இதனால் வேளாண்மை, குடிநீர் போன்றவைகளின் தேவைகள் நெருக்கடிக்கு உள்ளாகும், தானிய உற்பத்தி குறையும், குடிநீர் தேவைகளுக்காக மனித சமுதாயத்திடையே சிக்கல்கள் தோன்றும்- இவைகள் பகுத்தறிவின் தர்க்க முறையாகும். கணிதத்தில் தர்க்கவியல்: காரண விளைவு தொடர்ச்சியை தெளிவாக எடுத்துரைக்கிறது. உதாரணமாக ஒரு எண்ணோடு மற்றொரு எண்ணை கூட்டவோ, கழிக்கவோ வகுக்கவோ..? இப்படி உதாரணமாக கொண்டு போய்க்கொண்டிருக்கலாம். குறைபாடுகள்: மனிதர்களின் மனப்பான்மையையும் நடத்தையையும் துல்லியமாக கணக்கிட இயலாது. அவர்களின் சுபாவத்தையும் மதிப்பீடு செய்ய முடியாது அறிவியல் கோட்பாடுகளை முடிந்த முடிவாக கொள்வதில்லை, ஆய்வுகள் நடத்தப்பட்டு பழைய கோட்பாடுகள் மதிப்பிழந்து புதிய கோட்பாடுகள் உருவாக்கபடுகிறது அறிவியல் அணுகுமுறைக்கு வல்லுநர்த்துவம் அவசியம். இவை நல்லவையா, தீயவையா என மதிப்பு முன் நிறுத்தி செய்யப்படுவதில்லை. பல மூட நம்பிக்கைகள் வேரூன்றி செயல்பட்டு கொண்டிருக்கும் மனித சமூகத்தில் அறிவியல் அணுகுமுறையை செயல்படுத்துவதில் சிக்கல்கள் உண்டு. ஆய்வு வகைகள் அடிப்படை ஆய்வு: அறிவை விரிவாக்கி கொள்ள, நடை முறை சிக்கல்களுக்கு தீர்வு காண விளக்க முறை ஆய்வு: தகவல்களை திரட்டி அவற்றின் உண்மைகளை விளக்குதல் வரலாற்று ஆய்வு: வரலாற்று ரீதியாக நிகழ்ந்த மாற்றங்கள், எழுச்சிகள், வீழ்ச்சிகள், வளர்ச்சிகள் இவைகளை கண்டறிந்து வகைப்படுத்தி பகுப்பாய்வு செய்து விளக்கமளித்தல். அணுகுமுறைகள்: தத்துவ அணுகுமுறை; உலகம் எப்படி இருக்க வேண்டும்? என்னும் மதிப்பின் அடிப்படியில், தத்துவ அறிஞர்களின் சிந்தனைகளை உட்படுத்துதல் வரலாற்று அணுகுமுறை: சமூக நிறுவனங்களும், மக்களின் வாழ்க்கை நிலையும் குறிப்பிட்ட வளர்ச்சியை குறிப்பிட்ட காலத்தில் எட்டியிருக்கும், இவ்வளர்ச்சியை அறிய அரலாற்று அணுகுமுறை பயன்படுகிறது. செயல்பாடு அணுகுமுறை: ஒரு நிறுவனத்தின் அமைப்பு மற்றும் அதன் பல்வேறு செயல்பாடுகள் பற்றி ஆராய இந்த அணுகுமுறை உதவுகிறது. உதாரணமாக நம் உடல் அமைப்பையே எடுத்து கொண்டால் அந்தந்த பணிகளை செய்ய தனித்தனியாக உறுப்புகள் இருந்து அந்த செயலை செயல்படுத்தி கொண்டிருக்கிறது. இதே போல் ஒரு தொழிற்சாலையில் பல்வேறு இயந்திரங்களின் அமைப்பு அதன் செயல்பாடுகள் (Structural-Function) ஆய்வு செய்ய முடியும், இதன் மூலம் (Input-Output) அணுகு முறை பயன்படும். சமூகவியல் அணுகுமுறை: சமூகவியல், அரசியல், சட்டம், குற்றவியல், பொருளீயல், மானுடவியல், உளவியல் ஆகியவற்றின் கோட்பாடுகளை சார்ந்து ஆய்வு அணுகுமுறைகள் அரசியல் அணுகுமுறை அதிகாரவர்க்கம், அரசமைப்பு, சட்டமன்றம், செயல்துறை, தேர்தல்கள், அடிப்படை உரிமைகள், குடிமக்களின் கடமைகள், புரட்சிகளின் போராட்டங்கள், சமூக நீதி இவைகளை ஆராய உதவும். சட்டவியல் அணுகுமுறை நீதித்துறை, பலதரப்பட்ட சட்டங்கள், விதிமுறைகள், குற்றங்கள், சட்ட மீறல் ஆகியவற்றையை ஆராய இந்த அணுகுமுறை பொருளியல் அணுகுமுறை பொருள் உற்பத்தி, நுகர்வு, பகிர்வு, சந்தை, விலை, பணவீக்கம், தொழிலாளர் நிலை, ஆகியவற்றை ஆராயும் இந்த அணுகுமுறை மானுடவியல் அணுகுமுறை மனித இனத்தின் தோற்றம், வளர்ச்சி, பழங்குடிகள், பண்பாடு, நாகரிகம், ஆராய இந்த அணுகு முறை உளவியல் அணுகுமுறை மனிதரின் மனப்பான்மை, ஆளுமை வளர்ச்சி, மன நோய்கள், அறிவித்திறன் ஆகியவற்றை உளவியல் அணுகுமுறை மூலம் காண முடியும். குற்றவியல் அணுகுமுறை: குற்றம் எவ்வாறு நிகழ்கிறது, குற்றங்களை குறைப்பது, தடுப்பது போன்றவைகளை அணுகும் முறை சர்வதுறை அணுகுமுறை பலவகையான அணுகுமுறைகளை ஒன்றிணைத்து சமூக ஆய்வை நிகழ்த்த இத்தகைய அணுகுமுறை உதவும். மார்க்சிய அணுகுமுறை மனித, சமூக வாழ்க்கையின் பெரும் செயல்பாடுகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதிகாரவர்க்கத்திற்கும், உடைமையற்ற உழைக்கும் வர்க்கத்திற்கும் இருக்கும் பெரும் வித்தியாசத்தை குறைப்பதற்காக அணுகும் முறை
நடத்தை அணுகுமுறை (Behavioural Approach) நடத்தை அணுகுமுறை சமூக ஆய்வை பழைய தத்துவ பிடியிலிருந்து இந்த அணுகுமுறை விடுவித்து அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்கிறது. பின்-நடத்தை அணுகுமுறை சீர் திருத்தத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த சிலர் பின்-நடத்தை அணுகுமுறையை (Post-Behavioural) உருவாக்கி நல்ல மதிப்புகளை வலியுறுத்தும் நோக்கில் ஆய்வை அணுகும் முறை. முடிவுரையாக: தொடர்ந்து இந்நூலாசிரியர் செயல் ஆய்வு, அலகாய்வு, அளவாய்வு, பரிசோதனை ஆய்வு, சர்வதுறை அணுகுமுறை போன்ற பல வகையான ஆராய்ச்சி அனுபவ செயல்பாடுகளை அறிவியல்பூர்வமாக விளக்குகிறார். நாம் ஆராய்ச்சியின் அடிப்படையாக மேற்குறிப்பிட்டவைகளை மட்டும் எடுத்து சுருக்கமாக கையாண்டு உள்ளோம். இந்த நூல் ஆராய்ச்சியை பற்றி படிக்கும், அல்லது அறிந்து கொள்ள நினைக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், அறிஞர்களுக்கும், பேருதவியாய் இருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை. |
||||||||
Research | ||||||||
by Dhamotharan.S on 13 Apr 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|