LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- குறளங்காடி

வள்ளுவர் கோட்டத்தில் ஓர் குறளங்காடி!

வள்ளுவர் கோட்டத்தில் ஓர் குறளங்காடி!

முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது குறளங்காடி என்ற திருக்குறள் பரப்பும் அங்காடி மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் வள்ளுவர்கோட்டதை திறந்துவைத்த அன்று இவ்வங்காடி திறக்கப்பட்டது.

குறளங்காடி கீழ்க்காணும் ஐந்து முக்கிய இலக்குகளோடு தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.

1. திருக்குறள் நூல்கள், சிலைகள் மட்டுமின்றி திருக்குறள் சார்ந்த கருத்துகளை 133 வகையான பரிசுப்பொருள்களை உருவாக்கிப் பரப்புதல்.

2. பனை ஓலை , காகிதக் கூழால் செய்யப்படும் திருக்குறள் பொருள்கள் , மண் சார்ந்த சிலைகள், கைத்தறி ஆடைகள் , பித்தளை, வெள்ளி, மரப் பொருள்கள் என்று பல்வேறு சிறுதொழில்களை, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தற்சார்பு வாழ்வியலை ஊக்குவிக்கும் வகையில் அவர்களிடம் பொருள்களை வாங்கி தொழில் வளர்ச்சிக்கு துணைநிற்றல்.

3. திருக்குறளால் வாழ்வாதாரம் கிடைக்கும் வகையில் ஒவ்வொரு கடையிலும் 3-5 தமிழ் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.

4. ஒவ்வொரு கடையின் விரிவாக்கத்திலும் ஒரு தமிழ்த் தொழில் முனைவோர் உருவாக வாய்ப்பு.

5. மக்கள் அதிகம் கூடும் திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகளுக்கும், நிறுவனங்களின் நிகழ்ச்சிகளுக்கும், பரிசுத் தேவைகளுக்கும் நம்பகமான ஒரே இடமாக திருக்குறள் சார்ந்த அனைத்துப் பரிசுப்பொருட்களையும் ஒரே இடத்தில் கிடைக்கச்செய்தல்.

மேலும் 133 வகையான திருக்குறள் சார்ந்த பொருட்களைப் பல இடங்களிலிருந்து தொகுத்தும், இல்லாததை உருவாக்கியும் கொண்டுவரும் நோக்கில் இதுவரை 59 வகையான திருக்குறள் சார்ந்த பரிசுப் பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பொதுமக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.

மேலைநாடுகளில் உள்ளதுபோன்று குறிப்பாக அமெரிக்காவின் லிபர்ட்டி சிலையைப் போன்று,புத்தர் சிலை போன்று, தமிழகத்தின் திருவள்ளுவரையும், திருக்குறள் கருத்துகளையும் உலக அளவில் கொண்டுசேர்க்கும் நோக்கில் குறளங்காடி பல்வேறு குறள் பதித்த , முச்சீர், நாச்சீர் சொற்கள் பதித்த பல பொருட்களை தமிழ் , பிறமொழிகளில் உற்பத்தி செய்து மக்களிடம் கொண்டுசேர்த்துப் பரவலாக்கும் சேவையை முதன்முறையாக முயற்சிக்கிறது.

சென்னை வருபவர்கள் தவறாமல் குறளங்காடிக்கு வந்து பார்வையிட்டு திருக்குறள் பரப்பத் துணைநிற்கலாம்

by Swathi   on 22 Sep 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறளங்காடி  - கனடா தொடங்கியது.. குறளங்காடி - கனடா தொடங்கியது..
1962ல் வெளிவந்த ஆங்கில நூலில் யுனெசுகோ திருக்குறள் மொழிபெயர்ப்பு குறிப்பு 1962ல் வெளிவந்த ஆங்கில நூலில் யுனெசுகோ திருக்குறள் மொழிபெயர்ப்பு குறிப்பு
5 திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்த அறிவிப்பு 5 திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்த அறிவிப்பு
புதுச்சேரியில்  திருக்குறள் முற்றோதல் கோரிக்கை புதுச்சேரியில் திருக்குறள் முற்றோதல் கோரிக்கை
புதுச்சேரியில்  திருக்குறள் முற்றோதல் கோரிக்கை புதுச்சேரியில் திருக்குறள் முற்றோதல் கோரிக்கை
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் ஐந்தாம் ஆண்டு விழாவில் கரூரில் 25-5-25 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் ஐந்தாம் ஆண்டு விழாவில் கரூரில் 25-5-25 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
Launch of Thirukkural- Treasure of Universal Wisdom. Launch of Thirukkural- Treasure of Universal Wisdom.
திருக்குறள் பயிற்சியளிக்க தன்னார்வலர்கள் தேவை திருக்குறள் பயிற்சியளிக்க தன்னார்வலர்கள் தேவை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.