|
||||||||
சித்தர்கள்- நந்தீஸ்வரர் |
||||||||
![]() நந்தீஸ்வரர் வரலாறு சுருக்கம் சித்தர் இவர் கயிலாய பரம்பரையைச் சார்ந்தவர் இவர் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர். சிவகணங்களில் ஒருவரான நந்தீஸ்வரர், ‘கயிலாயத்தின் காவலர் ‘எனப் புராணங்கள் கூறும். சித்தர்கள் மரபு தோன்றுவதற்கு இவர் காரணமாவார். இவர் திருமூலர், பதஞ்சலி, வியாக்ரமர், சிவயோகி ஆகியோர்க்கு உபதேசம் செய்து, சித்தர் மரபு தோன்றக் காரணமாக விளங்கியவர் வைத்திய, யோக, ஞானக் கலைகளில் சிறந்து விளங்கி, தாம் இயற்றிய நு}ல்களைத் தமது மாணாக்கர்கள் மூலம் உலகெங்கும் பரவும்படி செய்தவர் இவர் வாழ்ந்த காலம் 700 வருடங்கள் 03 நாள்கள் ஆகும். சிவகணங்களில் ஒருவர் இவர் என்றும், இவர் மானிட வடிவம் பெற்று வாழ்ந்ததாகவும் பல்வேறு கதைகள் சொல்கிறார்கள். சிவகணங்களில் ஒருவரான இவர் பார்வதி தேவியின் அந்தப்புரத்தினைக் காவல் காத்து வந்தார் அப்போது அம்மையைத் தரிசிக்க ‘அடிலகன்’ என்னும் அரசன் வந்தான். அம்மையின் அனுமதியின்றி யாரையும் உட்செல்ல விடமாட்டேன் என்று இவர் தடுத்தார் இதையறிந்த சிவபெருமான் கோபங்கொண்டு அவரை பன்னிரெண்டாண்டுகள் பூலோகத்தில் வாழ்ந்து வரும்படி சபித்துவிட்டார் பூலோகத்தில் சிலதார் முனிவர் யாக பூமி உழுத போது, கண்டெடுத்த பெட்டியில் ஒரு குழந்தை இருந்தது. அதற்கு ‘வீரகன்’ என்று பெயரிட்டு, சிலாதர் தம்பதிகள் வளர்த்து வந்தனர். தங்கள் குழந்தை பன்னிரண்டு வயதில் இறந்துவிடும் என்பதறிந்து மனம் வருந்தினர் அவர்கள் வருத்தத்தை அறிந்த இவர் அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி, கடுந்தவம் செய்ய ஆரம்பித்தார் அதன் விளைவாக சிவபெருமான் இவருக்குக் காட்சிக் கொடுத்து, ‘நீ சிவலோகத்தில் சிரஞ்சீவியாய்,, சிவகணங்களின் தலைவனாகவும் விளங்குவாய், உனக்கு அனைத்து ஞானத்துடன், சிவஞானமும் அருளினோம்’ என்று கூறி மறைந்தார் இவரது சமாதி திருவாவடுதுறையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
|
||||||||
by Lakshmi G on 09 Nov 2020 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|