நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்
விஜய் தொலைக்காட்சியில் ‘அது,இது,எது, கலக்கப்போவது யாரு, போன்ற நிகழ்ச்சிகளின் வழி பிரபலமானவர் பாலாஜி(43) ஆவார். நகைச்சுவை நடிகர் வடிவேல் போலத் தத்ரூபமாக நடித்துக் காட்டுவதால் ‘வடிவேல் பாலாஜி” எனப் புகழப்பட்டார். பல படங்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கேற்று வந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீரென இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு தீவிர சிகிச்சைக்காகச் சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குச் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சேத்துப்பட்டு மயானத்தில் இன்று உடல் அடக்கம் நடைபெறுகிறது.
|