|
||||||
அதிரசம் செய்வது எப்படி? |
||||||
![]() தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு வருவது பலகாரம் தான் அதில் முக்கியமானது முறுக்கும், அதிரசமும் தான். இப்ப நாம் அந்த அதிரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாமா? தேவையான பொருட்கள்: 1. பச்சரிசி - 1 கிலோ 2. வெல்லம் - 1 கிலோ ஏலக்காய் - 7 எண்ணெய் - தேவைக்கேற்ப 3. நெய் - 50 கிராம் செய்முறை: 1. அரிசியை தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊர வைத்து பின் நன்றாக கழுவி வெயிலில் உலர வைக்கவும். பிறகு அரசியோடு ஏலக்காய் சேர்த்து மிக்ஸி அல்லது மில்லிலோ அரைத்துக் கொள்ளவும். 2. பிறகு ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி வெல்லத்தை அதில் போட்டு காய்ச்சவும். இதில் ரொம்ப முக்கியம் வெல்ல பாகுதான் அதை பக்குவமாக காய்ச்ச வேண்டும். 3. பதம் பார்க்க ஒரு டம்ளரில் தண்ணீர் ஊற்றி காய்ச்சிய பாகை சிறுதுளி விடவும் கையில் ஒட்டாமல் திரட்டாக வந்தால் அதுதான் பதம். பாகுபதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும். 4. பிறகு காய்ச்சியை பாகை மாவில் கொட்டி கொஞ்சமாக கொஞ்சமாக ஊற்றி கிளறி மூடி வைத்து மறுநாள் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வாழை இலையில் சிறிது நெய் தடவி ஒவ்வொன்றாக எண்ணையில் போட்டு எடுக்கவும். இப்போது இனிப்பான அதிரசம் ரெடி. |
||||||
by Srichandra on 16 Oct 2014 3 Comments | ||||||
Tags: Adhirasam Recipe அதிரசம் அதிரசம் செய்முறை Adhirasam Recipe Seimurai | ||||||
|
கருத்துகள் | |||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|