LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ஆதித்யா விண்கலத்தின் மேக்னடோ மீட்டர் செயல்படத் தொடங்கியது - இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தகவல்

சென்னை சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் நவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து கடந்த செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

 

தொடர்ந்து 127 நாட்கள் பயணித்து பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலை வில் உள்ள எல்-1 எனும் லெக்ராஞ்சியன் புள்ளியை மையமாகக் கொண்ட சுற்றுப் பாதையில் ஜன. 6-ம் தேதி நிலைநிறுத்தப்பட்டது. அங்கிருந்தபடியே சூரியனின் கரோனா, போட்டோஸ் பியர் மற்றும் குரோமோஸ்பியர் பகுதிகளை விண்கலம் ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில், ஆதித்யா விண் கலத்தின் மேக்னடோ மீட்டர் சென்சார் பாகங்கள் வெற்றிகரமாகச் செயல்படத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

நல்ல நிலையில் ஆய்வு 

 

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில், ‘விண்வெளியில் காந்தப்புலத்தை அறிவதற்காகப் பொருத்தப்பட்டிருந்த 6 மீட்டர் மேக்னடோ மீட்டர் தற்போது வெற்றிகரமாகச் செயல்படத் தொடங்கியுள்ளது. இந்தக் கருவி சூரியன் மற்றும் இதர கிரகங்களின் காந்தப்புலத்தை அளவிடும்.

 

அதன்படி, 132 நாட்களாக இயக்கப் படாமல் இருந்த மேக்னடோமீட்டரின் ஆண்டனாக்கள் ஜன.11-ம் தேதி முதல் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இதிலுள்ள 2 சென்சார்களும் நல்ல நிலையில் ஆய்வைத் தொடர்கின்றன’ என்று கூறப்பட்டுள்ளது.

 

இஸ்ரோ அனுப்பியுள்ள ஆதித்யா விண்கலம் அடுத்த 5 ஆண்டுகள் வரை சூரியனின் செயல்பாடுகளைக் கண்காணித்து ஆராயும் என்பது குறிப்பிடத்தக்கது.

by Kumar   on 29 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
போலி கடவுச்சீட்டு பயன்படுத்தினால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 10 லட்சம் அபராதம் - வருகிறது புதிய குடியுரிமைச் சட்டம் போலி கடவுச்சீட்டு பயன்படுத்தினால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 10 லட்சம் அபராதம் - வருகிறது புதிய குடியுரிமைச் சட்டம்
ட்ரூத் சமூக வலைத்தளத்தில் இணைந்தார் பிரதமர் நரேந்திர மோடி ட்ரூத் சமூக வலைத்தளத்தில் இணைந்தார் பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் மோடிக்கு மொரிஷியஸ் நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருது பிரதமர் மோடிக்கு மொரிஷியஸ் நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருது
இனி எளிமையாக வருங்கால வைப்பு நிதியை ஏ.டி.எம் மூலம் எடுக்கலாம் - வருகிறது  EPFO 3.0 இனி எளிமையாக வருங்கால வைப்பு நிதியை ஏ.டி.எம் மூலம் எடுக்கலாம் - வருகிறது EPFO 3.0
இனி எளிமையாக வருங்கால வைப்பு நிதியை ஏ.டி.எம் மூலம் எடுக்கலாம் - வருகிறது  EPFO 3.0 இனி எளிமையாக வருங்கால வைப்பு நிதியை ஏ.டி.எம் மூலம் எடுக்கலாம் - வருகிறது EPFO 3.0
கர்நாடகா இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்துவது அவசியம் - முதல்வர் சித்தராமையாவுக்கு கன்னட வளர்ச்சி ஆணையத் தலைவர்  கடிதம் கர்நாடகா இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்துவது அவசியம் - முதல்வர் சித்தராமையாவுக்கு கன்னட வளர்ச்சி ஆணையத் தலைவர் கடிதம்
தமிழர்கள் உலகமெங்கும் சாதிக்கிறார்கள் - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டு தமிழர்கள் உலகமெங்கும் சாதிக்கிறார்கள் - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டு
அதிகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு மத்திய அரசு ஊக்கத் தொகை வழங்க வேண்டும்  - சந்திரபாபு நாயுடு அதிகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு மத்திய அரசு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் - சந்திரபாபு நாயுடு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.