|
|||||
அகத்திக்கீரையின் மருத்துவ குணங்கள்(The medicinal properties Agathi leaves |
|||||
1.பூவைச் சமைத்து உண்டுவர மலச்சிக்கல் குறையும். 2.அகத்தி இலைச்சாற்றை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த, ஒரு மாதத்தில் இருமல் குறையும். 3.அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாற்றோடு, அதே அளவு தேன் கலந்து அருந்த, வயிற்றுவலி நீங்கும். 4.இலைகளை அரைத்து அடிபட்ட புண்கள் மேல் கட்டி வந்தால் புண் ஆறும். 5.அகத்திக்கீரை பொடியை நீர் அல்லது பாலில் கலந்து குடித்துவர, நாள்பட்ட வயிற்றுவலி குறையும். 6.அகத்திக்கீரை பால்சுரப்பைக் கூட்டும். 7.பூக்களைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால்,தலைவலி நீங்கும். 8.அகத்திப்பூ சாறு ஒரு கரண்டி எடுத்து, இதோடு ஒரு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், சளி நீங்கும். 9.அகத்திக்கீரை சாறு இரு துளி மூக்கில் விட தும்மல், ஜலதோஷம் நீங்கும். 10.இக்கீரை பித்த நோயை நீக்கும்,உடல் சூட்டைத் தணிக்கும். |
|||||
by sandhiya on 07 Jun 2012 1 Comments | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|