LOGO
  முதல் பக்கம்    மற்றவை     Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியாவில் காலிப்பணியிடங்கள்....

ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியாவில் காலியாக உள்ள ஜூனியர் அஸிஸ்டென்ட் காலியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமும், தகுதியும் உடைய ஓ.பி.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம் : தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, புதுச்சேரி, லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகள் அடங்கிய தென் பிராந்தியத்தில் மொத்தம் 86 காலியிடங்கள் உள்ளன.

வயது தகுதி : 30.06.2015 அடிப்படையில் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயதைப் பொறுத்தவரை எஸ்.டி., பிரிவினர் 35 வயதுக்கு உட்பட்டவராகவும், ஓ.பி.சி., பிரிவினர் 33 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு 3 வருட காலம் படிக்கக்கூடிய இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை மெக்கானிகல், பயர் அல்லது ஆட்டோமொபைல் பிரிவில் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். பிளஸ்டூ படிப்பை முழு நேரப்படிப்பாக குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு தகுதி : கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை படித்தவர்கள், என்.சி.சி., யில் பி சர்டிபிகேட் முடித்தவர்கள், தொழிலக தீயணைப்பில் அனுபவம் பெற்றவர்கள், ஏ.ஏ.ஐ.,யின் பயர் பைட்டிங் பயிற்சி பெற்றவர்கள், நாக்பூரில் உள்ள தேசிய தீயணைப்பு கல்லூரியில் சப் ஆபிசர் பயர் படிப்பு முடித்தவர்கள் ஆகியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

உடல் தகுதி:
உயரம் குறைந்த பட்சம் 167 செ.மீ., எடை குறைந்த பட்சம் 57 கிலோ, மார்பளவு குறைந்த பட்சம் 81 செ.மீ., மற்றும் 5 செ.மீ., விரிவடையும் தன்மை போன்றவை தேவை.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.100/-க்கான டி.டி.,யை Airports Authority of India என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும்.

தேர்ச்சி முறை:
எழுத்துத் தேர்வு, உடல் தகுதி அறியும் தேர்வு, டிரைவிங் டெஸ்ட், என்டூரன்ஸ் டெஸ்ட், நேர்காணல்.

எழுத்துத் தேர்வை மதுரை, ஐதராபாத், கோழிக்கோடு, மைசூர், அகாடி ஆகிய ஏதாவது ஒரு மையத்தில் எதிர்கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
31.07.2015

விண்ணப்பிக்கும் முறை:

பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளை சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Regional Executive Director.

Airports Authority of India.

Southern Region.

Chennai - 600 027.

கூடுதல் விவரங்கள் அறிய www.aai.aero/employment_news/RECRUITMENT-JUNIOR-ASSISTANT-%28FS%29-SRD-2015_160615.pdf என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.  by Swathi   on 23 Jun 2015  0 Comments
Tags: Airport Jobs   Airport Authority of India   AAI Jobs   AAI Latest Jobs   ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா        
 தொடர்புடையவை-Related Articles
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
புறநானூறு விளக்கம், Dr. Maruthanayagam speech, Part-௩ புறநானூறு விளக்கம், Dr. Maruthanayagam speech, Part-௩
கால்நடை வைத்து இருப்போரின் கனிவான கவனத்திற்கு... கால்நடை வைத்து இருப்போரின் கனிவான கவனத்திற்கு...
உலகத்தமிழர் மாநாடு - சரவண பவனில் சிக்கன் பிரியாணி. உலகத்தமிழர் மாநாடு - சரவண பவனில் சிக்கன் பிரியாணி.
நீட் தேர்விற்கான ஆடை கட்டுப்பாடுகளை அறிவித்தது சிபிஎஸ்இ!! நீட் தேர்விற்கான ஆடை கட்டுப்பாடுகளை அறிவித்தது சிபிஎஸ்இ!!
கவிஞர் மு.முருகேஷ் எழுதிய சிறுவர் இலக்கிய நூலுக்கு  - சிறந்த குழந்தை இலக்கிய நூல் விருது கவிஞர் மு.முருகேஷ் எழுதிய சிறுவர் இலக்கிய நூலுக்கு - சிறந்த குழந்தை இலக்கிய நூல் விருது
தமிழ் இலக்கியத்தில் மேலாண்மையின் இடம் -இரா.தெ.முத்து தமிழ் இலக்கியத்தில் மேலாண்மையின் இடம் -இரா.தெ.முத்து
நட்சத்திர வார பலன்கள் (12 – 11 – 2017 முதல் 18 - 11 – 2017 வரை) நட்சத்திர வார பலன்கள் (12 – 11 – 2017 முதல் 18 - 11 – 2017 வரை)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.