LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 702 - அமைச்சியல்

Next Kural >

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத் தோடு ஒப்பாக கொள்ள வேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அகத்தது ஐயப்படாது உணர்வானை - ஒருவன் மனத்தின்கண் நிகழ்வதனை ஐயப்படாது ஒருதலையாக உணர வல்லானை; தெய்வத்தொடு ஒப்பக்கொளல் - மகனேயாயினும், தெய்வத்தோடு ஒப்ப நன்கு மதிக்க. (உடம்பு முதலியவற்றான் ஒவ்வானாயினும், பிறர்நினைத்தது உணரும் தெய்வத் தன்மையுடைமையின், 'தெய்வத்தொடுஒப்ப' என்றார்.)
மணக்குடவர் உரை:
பிறர் நினைத்ததனை ஐயப்படுதலின்றித் துணிந்து அறியவல்லாரைத் தேவரோடு ஒப்பக் கொள்க.
தேவநேயப் பாவாணர் உரை:
அகத்தது ஐயப்படாது உணர்வானை-ஒருவனது மனத்தின்கண் உள்ளதனை ஒருதலையாக உணரவல்லவனை; தெய்வத்தோடு ஒப்பக் கொளல்- வடிவால் மாந்தனாயினும் மதிநுட்பத்தால் தெய்வம்போன்றவனென்று கருதி,அதற்கேற்ப மதித்துப் போற்றுக. உணர்தல் உள்ளத்தால் நுணுகியறிதல். மாந்தன் மாந்தனே யாதலின் 'தெய்வமாக' என்னாது 'தெய்வத்தோ டொப்ப' என்றார். 'படாஅ' இசைநிறை யளபெடை.
கலைஞர் உரை:
அடுத்தவனின் மனக்கருத்தைச் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கண்டுகொள்ளும் ஆற்றல் உள்ளவனைத் தெய்வத்திற்குச் சமமாக மதிக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவனின் மனக்கருத்தைச் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கண்டுகொள்ளும் ஆற்றல் உள்ளவனைத் தெய்வத்திற்குச் சமமாக மதிக்க வேண்டும்.
Translation
Undoubting, who the minds of men can scan, As deity regard that gifted man.
Explanation
He is to be esteemed a god who is able to ascertain without a doubt what is within (one's mind).
Transliteration
Aiyap Pataaadhu Akaththadhu Unarvaanaith Theyvaththo Toppak Kolal

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >