LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- கவிப்புயல் இனியவன்

அழகையே அலங்கரிப்பேன் ...! - கவிப்புயல் இனியவன்அழகியே அன்பரசியே ...

அழகுக்கெல்லாம் அழகியே...

அற்புதங்களில் ஒன்றாய் உன் ...

அழகையே அலங்கரிப்பேன் ...!
 ஆருயிரே ஆனந்தியே ....

ஆறறிவை அழித்தவளே ...

ஆயுளை அரிதாக்கியவளே...

ஆயுள் வரை ஆதரிப்பேன் ....!
 இனியவளே இன்பரசியே ....

இதயத்தில் இடம் பிடித்தவளே ...

இரண்டர என்னோடு வாழ்பவளே ...

இல்லறத்தில் நல்லறம் காண்பேன் ...!

 


ஈரவிழி ஈஸ்வரியே ...

ஈன்ற தாய் போல் என்னை ...

ஈரத்துடன் காப்பவளே ....

ஈரேழு ஜென்மம் நீதானடி .....!
உயிரே உமையவளே ....

உயிராய் நினைப்பவளே...

உயிரில் கலந்தவளே ...

உலகம் கவரும் காதலர் நாம் ...!
 ஊன் உறக்கம் இன்றி என்னை ...

ஊர் ஊற்றாய் சுற்ற வைத்தவளே ...

ஊஞ்சல் ஆடுதடி உன் நினைவுகள் ...

ஊரார் ஆசியுடன் வாழ்வோம் நாம் ....!

 


என் இதய எழில் அரசியே ...

எதிர் பாராமல் என்னை சந்தித்தாய்

எதிர்காலமாகிவிட்டாய் -நீ

எத்தனை இடர் வந்தாலும் நீ தான் ...!
 ஏகாந்தம் போற்றும் ஏஞ்சலே ...

ஏற்றமடைய வைத்தவளே ....

ஏற்ற துணையாய் வந்தவளே ...

ஏற்றமான வாழ்க்கை வாழ்வோம் ....!
 ஐம்பொன் சிலை அழகியே ....

ஐம்பொறியையும் அடக்கியவளே...

ஐயம் இன்றி வாழ்வும் நாம்

ஐவகை நிலத்தை ஆழ்வோம்.....!
ஒருவனுக்கு ஒருத்தி நீ

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ...

ஒற்றுமையாய் வாழ்ந்திடுவோம் ...

ஒளிருதடி நம் வாழ்க்கை பிரகாசமாய் ...!
ஓவிய அழகியே ஓவியா ....

ஓராயிரம் எண்ணத்துடன் வாழ்கிறேன் ...

ஓய்வின்றி துடிக்கும் இதயத்தில் ...

ஓர் இதயம் ஈர் இதயம் ஆனதடி ...!
ஔவையின் ஆத்திசூடி குணம் -நீ

ஔவை தமிழின் இசை அழகியே -நீ

ஔவை பாட்டியின் வயதுவரை ...

ஔடதம் இன்றி  வாழ்வோம் வா ...!
 

அகராதி தமிழ் காதல் கவிதை

கவிப்புயல் இனியவன்

by Swathi   on 19 May 2017  0 Comments
Tags: அழகு   அலங்காரம்   Alagu   Alangaram           
 தொடர்புடையவை-Related Articles
அழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்.. - வித்யாசாகர்! அழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்.. - வித்யாசாகர்!
அ தரும் அழகுக்கவிதை அ தரும் அழகுக்கவிதை
ஆ - தரும் அழகுக்கவிதை ஆ - தரும் அழகுக்கவிதை
அழகையே அலங்கரிப்பேன் ...! - கவிப்புயல் இனியவன் அழகையே அலங்கரிப்பேன் ...! - கவிப்புயல் இனியவன்
நீங்கள் அழகையும் ஆரோக்கியத்தையும் பெற வேண்டுமா? நீங்கள் அழகையும் ஆரோக்கியத்தையும் பெற வேண்டுமா?
அழகான சருமம் பெற அற்புதமான 20 அழகு குறிப்புகள் !! அழகான சருமம் பெற அற்புதமான 20 அழகு குறிப்புகள் !!
மஞ்சளின் மகத்துவம் - ஆன்மீக வாழ்விலும் !! ஆரோக்கிய வாழ்விலும் !! மஞ்சளின் மகத்துவம் - ஆன்மீக வாழ்விலும் !! ஆரோக்கிய வாழ்விலும் !!
கண் நிறைந்த அழகு கண் நிறைந்த அழகு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.