LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் இலக்கணம் (Tamil Grammar )

அல்லோலகல்லோலம் என்றால் என்ன

நாடு அல்லோலகல்லோலப்பட்டுக் கிடக்கிறது.
 
மக்கள் பதறியடித்து அல்லோலகல்லோலப்பட்டு ஓடினர்.
 
வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் அல்லோலகல்லோலப்பட்டு வீடுகளுக்குத் திரும்பினர்
 
இவ்வாறு படித்திருக்கிறோம்.

அல்லோலகல்லோலம், அல்லோலகல்லோலப்படுதல் என்றால் என்னவென்று துலக்கமாகத் தெரியாது. ‘பதற்றமான, அலைச்சலான துன்பத்திற்குட்பட்டு...’ என்று பழக்கத்தின் அடிப்படையில் புரிந்துகொண்டு அந்தப் பதச்சேர்க்கையைக் கடந்து போகிறோம்.

அவ்வாறு நாம் புரிந்துகொண்டது கிட்டத்தட்ட சரிதான், என்றாலும் அந்தச் சொல்லைப் பிரித்து மேய்ந்து உண்மையாய் உணர்த்தி நிற்கும் பொருளை இதுவரை அறிந்ததில்லை.

அல்’ என்றால் இரவு. அல்லும் பகலும்’ என்றால் இரவும் பகலும் அல்லவா... அதில் உள்ள அல்.

ஓலம்’ என்பதற்குக் கடல் என்று ஒரு பொருளும் உண்டு.
கல்லோலம்’ என்றால் ‘அலை’ என்று பொருள்.

அல்+ஓலம்+கல்லோலம் = அல்லோலகல்லோலம். ‘இரவுநேரக் கடலில் கொந்தளிக்கின்ற அலை’ என்று அர்த்தம். இரவில் அதீத மௌனத்தால் அலையோசை பலமாகப் பெருத்துக் கேட்கும். அலையின் இயல்பு ஆரவாரத்துடன் ஆர்ப்பரித்தல் அல்லவா ? அதனால் இப்பதச்சேர்க்கைக்குப் ‘ பேராரவாரம்’ என்றும் பொருள் சொல்வர்.

ராத்திரியில் பொங்கி ஆரவாரிக்கின்ற அலைவாய்ப்பட்டவன்போல், திக்கு திசை தெரியாமல் அலைந்து திரிந்து எப்படியோ தப்பிப் பிழைத்து வந்தேன் - என்பதைத்தான் சுருக்கமான உருவகமாக ‘அல்லோலகல்லோலப்பட்டு வந்தேன்’ என்கிறோம்.

- கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 20 Dec 2014  1 Comments
Tags: Allolakallolam   அல்லோலகல்லோலம்   Kavignar Magudeswaran   கவிஞர் மகுடேஸ்வரன்           
 தொடர்புடையவை-Related Articles
அந்தக் காலம்தான் நன்றாக இருந்தது - கவிஞர் மகுடேசுவரன் அந்தக் காலம்தான் நன்றாக இருந்தது - கவிஞர் மகுடேசுவரன்
அல்லோலகல்லோலம் என்றால் என்ன அல்லோலகல்லோலம் என்றால் என்ன
தெரியுமோ ? - கவிஞர் மகுடேசுவரன் தெரியுமோ ? - கவிஞர் மகுடேசுவரன்
பூம்பூம் மாடு - கவிஞர் மகுடேசுவரன் பூம்பூம் மாடு - கவிஞர் மகுடேசுவரன்
கருத்துகள்
27-Jul-2015 01:54:34 பி விஜயலஷ்மி said : Report Abuse
ஐயா வணக்கம் எனது பெயர் பி்விஜயலஷ்மி எனக்கு ஒரு பெரிய சந்தேகம் எனக்கு ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்பது நெடுநாள் ஆசை நான் ஒரலவுக்கு பேசுவேன் ஆனுல் ரொம்ப சரலமாக பேச வராது அது எனக்கு மிகவும் கவலையாக உள்ளது இப்பொழுது என் சந்தேகம் என்னனா தமிழ் இலக்கணம் படித்தால் ஆங்கிலம் பேசுவதும் எழுதுவதும் சுலபமாகுமா ஐயா நுங்கள் தெளிவான விலக்கம் தந்து வழி காட்டுவீர்கள் என்று எதிர் பார்கிரேன்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.