LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    பழங்கள்-தானியங்கள் Print Friendly and PDF

சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள் !!

சோற்றுக் கற்றாழையின் சாறு அல்லது உள்ளிருக்கும் கூழப்பகுதியை தினமும் அளவோடு சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவு பெறும்.

சோற்றுக் கற்றாழை உள்ளுக்குச் சாப்பிடுவதாலும் மேலுக்கு உபயோகப்படுத்துவதாலும் பெண்கள் மற்றும் ஆண்களின் சிறுநீர்த் தாரையில் உள்ள எரிச்சல், புண் குணமாகும்.

சோற்றுக் கற்றாழையின் இளமடலை தோல் சீவி சோற்றைச் சுத்திகரித்து உடன் சீரகம், கற்கண்டு, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துச் சாப்பிட குருதியும் சீதமும் கலந்த வயிற்றுப்போக்கு குணமாகும்.

சோற்றுக் கற்றாழையை ஓரிரு சாக்லேட் அளவு வில்லைகளாக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உண்ட உணவு குடலில் தங்கி நஞ்சாகி நமக்குத் துன்பம் தரும் நோய்களைத் துடைக்கும் வகையில் குடலுக்கு பாதிப்பின்றி தேங்கிய நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் வயிற்றிலுள்ள வாயு வெளியேற்றப்படுவதோடு மன இறுக்கமும் (ஸ்ட்ரெஸ்) தணிந்து ஆரோக்கியம் கிடைக்கின்றது.

100 கிராம் கற்றாழைச் சோற்றை எடுத்துக் கொண்டு அத்தோடு 10 கிராம் ஊறவைத்த வெந்தயத்தையும் சிறிதாக அறிந்த ஒரு வெங்காயத்தையும் சேர்த்து அரைத்து 350கிராம் விளக்கெண்ணெய்யில் இட்டு பதமாகக் காய்ச்சி வடித்து பத்திரப் படுத்திக் கொண்டு அந்தி, சந்தி இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர உடல் உஷ்ணம் தணிந்து உடல் பெருகும், அழகான தோற்றம் பெருகும்.

சோற்றுக் கற்றாழை மடலை நன்கு முற்றியதாகத் தேர்ந்தெடுத்து இரண்டாகப் பிளந்து அதன் இடையே ஒரு ஸ்பூன் வெந்தயத்தைத் திணித்து கற்றாழையின் மடல்கள் இருபகுதியும் ஒன்றாகச் சேரும் வண்ணம் நூலால் இறுகக் கட்டி இரவு முழுவதும் வைத் திருந்து மறுநாள் காலையில் எடுத்துப் பார்க்கையில் வெந்தயம் நன்கு முளை விட்டு இருக்கும். அந்த வெந்தயத்தை மட்டும் எடுத்து உள் ளுக்கு சாப்பிட்டு வர தீராத வயிற்று வலி, வாய் வேக்காடு, வயிற்றுப்புண், சிறுநீர்த் தாரைப்புண் ஆகியன குணமாகும்.

கற்றாழைச் சோற்றை மோரில் கலந்து அன்றாடம் குடித்து வர உடல் சூட்டினால் ஏற்படும் முகப்பருக்கள், கட்டிகள், வெயிலில் அலைவதால் ஏற்படும் தோலின் கருமை மற்றும் மேல் தோலில் ஏற்படும் கருந்திட்டுக்கள் குணமாகும்.

சோற்றுக் கற்றாழையின் வேர்களைச் சேகரித்து சிறுதுண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து பால் ஆவியில் வைத்து வேகவைத்து எடுத்து வெயிலில் இட்டு உலர்த்தி நன்றாகப் பொடித்து வைத்துக் கொண்டு தினம் இரவு படுக்க போகுமுன் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை மிகும். விந்துக்களின் எண்ணிக்கையும் பெருகும்.

சோற்றுக் கற்றாழைச் சோற்றை சுத்தம் செய்து 10 முதல் 15 கிராம் அளவு எடுத்து நீராகாரத்துடன் (பழையது நீர்) சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சிறுநீரில் ரத்தம் போவது குணமாகும். மூத்திரக்கிரிசாம் என்னும் சிறுநீர்த்தாரை எரிச்சல் தணியும்.

சுத்திகரித்த கற்றாழைச் சோறு ஒருகப் அளவு எடுத்து இதனோடு 5 சிறு வெங்காயத்தைப் பொடித்து நெய் விட்டுச் சேர்த்து வதக்கிச் சேர்த்து சுடுக்காய் கொட்டை நீக்கியபின் மூன்று கடுக்காயின் தோலைப் பொடித்துச் சேர்த்து ஒன்று கலந்து சிறிதளவு நீர்விட்டு ஒரு பாத்திரத்தில் வைத்து மூடிவைத் திறந்து அரைமணி நேரம் கழித்துப் பார்க்க அனைத்துப் பொருட்களின் சாரமும் ஒன்றாய்க் கலந்து வடிந்து தெளிவாய் இருக்கும். இதை உள்ளுக்குச் சாப்பிட சில மணித் துளிகளில் சிறுநீர்கட்டு தளர்ந்து தாராளமாக சிறுநீர் வெளியேறும்.

சோற்றுக் கற்றாழைச் சாறை தினமும் 2 அவுன்ஸ் உள்ளுக்கு கொடுப்பதால் இதய ரத்த நாளங்களில் கொழுப்புச்சத்து படிவதால், ஏற்படும் இதய நோய்கள் அச்சம் தரும் உயிர் போக்கி நோய்களைத் தணிக்கிறது.

சோற்றுக் கற்றாழையில் உள்ள ஹார்போஹைட்ரேட்டு மெட்டபாலிசம் சர்க்கரை நோய்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இது ரத்தத்தில் உள்ள உணவுக்குமுன் ஆன சர்க்கரை அளவையும், உணவுக்குப் பின் ஆன சர்க்கரையின் அளவையும் குறைக்க உதவுகிறது.

இதயத்துக்கு போதிய பிராணவாயு கிடைக்க வழிசெய்கிறது. பிராணவாயு சரியான அளவு இதயத்துக்குக் கிடைக்காத போது கடும் நெஞ்சுவலி உண்டாகிறது. சோற்றுக் கற்றாழைச் சாறு இப்படி மாரடைப்பு வருவதைத் தடுக்கிறது.

by Swathi   on 04 Jun 2015  22 Comments
Tags: Aloe Vera   Aloe Vera Benefits   சோற்றுக் கற்றாழை   சோற்றுக் கற்றாழை பயன்கள்   சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்கள்   Sotru Katrazhai   Sotru Katrazhai Benefits  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள் !! சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள் !!
கருத்துகள்
25-Apr-2020 06:59:01 Paramanandham said : Report Abuse
My wife taking medicine for sugar shall she take this for cancer
 
21-Apr-2019 16:18:17 Gunaseelen S K said : Report Abuse
How much we can eat aloe Vera flesh after cleaning by water and how many times we can eat
 
21-Apr-2019 16:18:08 Gunaseelen S K said : Report Abuse
How much we can eat aloe Vera flesh after cleaning by water and how many times we can eat
 
28-Mar-2019 02:50:36 குலசேகரன் said : Report Abuse
சோற்றுக்கற்றாழையின் மஞ்சள் நிற திரவம் உட்கொள்ள தக்கதா என்ன பயன் ??? கார்போஹைட்ரேட் எந்த பகுதியில் உள்ளது இது நீரழிவு நோய்க்கு பயன் தரக்கூடியது போன்ற தகவல்கள் இருந்தால் நலம்!!!
 
17-Mar-2019 00:14:15 தங்கராஜ் ர் said : Report Abuse
மிகவும் அருமையான சிறப்பான மகத்துவமான விஷயங்கள் மிக்க சந்தோசம்
 
26-Oct-2018 03:27:21 Sundaram said : Report Abuse
Weight loss ஆகுமா .....?.loss ஆக எவ்வளவு நாள் குடிக்க வேண்டும் நான் 78kg இருக்கன் 65kgஆகவேண்டும்
 
21-Mar-2018 07:24:29 அப்துல்ரஹ்மான்ஸலீம் said : Report Abuse
நான் வெளிநாட்டில் உழைக்கிறேன். சரியாக சொன்னீர்கள் தோழரே! நான் இதை follow பண்ணுகிறேன் தினமும். என்னுடல் மாற்றத்தை உணர்கிறேன். அனால் ஒரு சந்தேகம், வெறும் வயிற்றில் 1 டம்பளர் ஜூஸ் குடிக்கிறேன், ப்ரோப்லேம் வராது என்றெண்ணி.? மிக்க நன்றி.
 
26-Feb-2018 05:03:14 Thangavelu said : Report Abuse
வெரி குட் medicine
 
21-Jan-2018 02:53:02 chennakrishnan said : Report Abuse
தேங்க்ஸ்
 
05-Jul-2017 10:33:03 Sundar said : Report Abuse
Hair loss
 
03-Jun-2017 08:00:06 எம்.எ.arasu kanikairaj said : Report Abuse
இதன் மூலம் நிறைய விஷயங்களை தெரிந்துகொண்டேன் . நன்றி
 
16-Jan-2017 07:30:49 Sathya said : Report Abuse
Very use ful , im using it on my face after I taken bath, like moisture now my face is glowing
 
15-Dec-2016 04:31:19 A.Perumal said : Report Abuse
Piles medicines an paththia murai sollavum
 
08-Nov-2016 01:25:34 ram said : Report Abuse
Very useful one i m drinking daily n empty stomach last one year.Good return getting as healthy living...it s true...pl all attempt it.....
 
25-Aug-2016 09:55:29 Prem said : Report Abuse
வாலை தமிழுக்கு நன்றி
 
22-Feb-2016 06:56:12 ராஜா said : Report Abuse
ஆலோவேர் ஹொவ் டு ஹெல்ப் ப்ளூட் கான்செர்
 
12-Sep-2015 12:49:06 harsath HUSSAIN said : Report Abuse
how we reduce weight within 2 or 3 months
 
07-Sep-2015 11:19:44 suthan said : Report Abuse
உடல் எடை கூடுவதற்கு என்ன செய்யலாம்?
 
27-Jul-2015 11:26:08 janu said : Report Abuse
நன்றி வலை தமிழ்
 
25-Jun-2015 04:25:20 RADHA said : Report Abuse
I லைக் வலை தமிழ் .காம்
 
25-Jun-2015 02:49:29 vijay said : Report Abuse
IN THE VALAITAMIL.COM VERY VERY USE FULL STUDENT PARENTS. SO LIKE FOR VALAITAMIL.COM
 
08-Jun-2015 07:01:05 Peem said : Report Abuse
எனக்கு sotrukatralai nalla payanai thanthathu
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.