LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

தெறி ட்விட் - அமீர் விளக்கம்!!

தெறி படத்தால் மிகுந்த நஷ்டம் அடைந்ததாக வந்த அமீரின் ட்விட் தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தெறி படத்திற்கான மதுரை பகுதி விநியோக உரிமையை இயக்குநர் அமீர் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அமீரின் ட்விட்டரில், தெறியின் மதுரை பகுதி விநியோக உரிமையை வாங்கினேன். ஆனால் தெறி படத்தால், 50% அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது.  தயாரிப்பாளர் தாணுவுக்கு எதிராக போராட்டம் நடத்தவிருக்கிறேன் என்று இயக்குனர் அமீர் என்ற பெயரில் இருக்கும் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.  

இது குறித்து அமீர் விளக்கம் அளிக்கும் போது, விஜய்யின் வளர்ச்சி பிடிக்காத சிலருடைய செயல்களால் தெறி படம் வெளிவருவதில் இருந்த சிக்கல்களையும், வெளியான நாள் முதல் வந்துகொண்டிருக்கக்கூடிய தவறான தகவல்களையும் நான் அறிவேன். அதே நேரத்தில் தெறி படத்திற்கான விநியோகம் குறித்து என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நான் ஒரு செய்தி பதிவிட்டிருப்பதாக நேற்று காலை அறிந்தேன்.

எனக்கென்று அதிகாரப்பூர்வமான முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கம் நான் வைத்துக்கொள்ளவில்லை என்பதை கூறிக்கொள்கிறேன். என்னுடைய பெயரில் இருக்கும் முகநூல் பக்கமோ, ட்விட்டர் பக்கமோ என்னுடையது இல்லை. யாரோ சில தவறான எண்ணம் கொண்டவர்களால் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் தெர்வித்துக்கொள்கிறேன் என அமீர் விளக்கம் அளித்துள்ளார்.

by CinemaNews   on 19 Apr 2016  0 Comments
Tags: Ameer   Theri   Theri Hit   தெறி   தெறி ட்விட்   அமீர்     
 தொடர்புடையவை-Related Articles
இந்த அரையாண்டில் தெறி தான் டாப்பு... இந்த அரையாண்டில் தெறி தான் டாப்பு...
விஜய் பட ரீமேக்கில் ஷாருக்!! விஜய் பட ரீமேக்கில் ஷாருக்!!
வேதாளத்தை முந்திய தெறி !! வேதாளத்தை முந்திய தெறி !!
தெறி ட்விட் - அமீர் விளக்கம்!! தெறி ட்விட் - அமீர் விளக்கம்!!
இசை வெளியீட்டு விழாவில் குட்டி கதை!! வருத்தம் தெரிவித்த விஜய்!! இசை வெளியீட்டு விழாவில் குட்டி கதை!! வருத்தம் தெரிவித்த விஜய்!!
தெறி இது விஜய் - அட்லி படத்தின் தலைப்பு!! தெறி இது விஜய் - அட்லி படத்தின் தலைப்பு!!
அமீர் இயக்கத்தில் சிம்பு !! அமீர் இயக்கத்தில் சிம்பு !!
ஷங்கரின் அடுத்த படத்தில் ரஜினி - ஐஸ்வர்யாராய் - அமீர்கான் கூட்டணியா? ஷங்கரின் அடுத்த படத்தில் ரஜினி - ஐஸ்வர்யாராய் - அமீர்கான் கூட்டணியா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.